» »திருமணத்துக்கு முன் டிரெக்கிங் பயணம் ஏன் அவசியம்?!

திருமணத்துக்கு முன் டிரெக்கிங் பயணம் ஏன் அவசியம்?!

Posted By: Staff

திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள டேட்டிங் செல்வது இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது.

அப்படி டேட்டிங் செல்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு காஃபி ஷாப்பில் விலையுயர்ந்த கோல்ட் காஃபியோ, காப்பெசீனோவோ குடித்து வெட்டியாகவே பொழுதை கழிக்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறதா என்றால் அதற்கான சந்தர்ப்பமே அமைவதில்லை என்பதுதான் உண்மை.

உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்!

பொதுவாக சமையல் செய்வது, அலுவலகம் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற அன்றாட விஷயங்களில்தான் நம் வாழ்க்கை கழிய இருக்கிறது.

இதைப்போன்ற செயல்களில்தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான உண்மையான அன்பும், அக்கறையும் வெளிப்படுகிறது.

எனவே திருமணத்துக்கு முன்பு நமக்கு வரப்போகும் வாழ்க்கை துணை உலகத்தை எப்படி பார்க்கிறார், நம் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார், அன்பு செலுத்துகிறார் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வது மிகவும் அத்தியாவசியமானது.

இவற்றையெல்லாம் நீங்கள் ரெஸ்டாரண்ட்டிலோ, காஃபி ஷாப்பிலோ தெரிந்துகொள்வது எப்படி சாத்தியமாகும். ஆனால் ஒரு டிரெக்கிங் பயணம் இவற்றையெல்லாம் சாத்தியமாக்குவதுடன், உங்கள் காதலரை பற்றி நன்கு புரிந்துகொண்டு அற்புதமான குடும்ப வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச்செல்கிறது.

ஒழுக்கம்

ஒழுக்கம்

டிரெக்கிங் பயணத்தில் ஒழுக்கம் என்பது ரொம்பவும் முக்கியமானது. அதாவது குறித்த நேரத்தில் பயணிப்பது, ஏற்பாடு செய்தது போல் நடந்துகொள்வது போன்ற ஒழுக்க நெறிகள் டிரெக்கிங் பயணத்தின்போது கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டியவை.

ஒழுங்குமுறை

ஒழுங்குமுறை


எனவே உங்கள் காதலர் இவற்றையெல்லாம் மதிப்பவராக இருந்தால் வாழ்க்கையிலும் ஒழுங்குமுறையோடு வாழ்வார் என்று சொல்லிவிடலாம்.

சுலபமான காரியமில்லை

சுலபமான காரியமில்லை


பொதுவாக டிரெக்கிங் பயணம் என்பது சுலபமான காரியமில்லை. எனவே மலையேறும் வழியில் சதா சாப்பாடு சரியில்லை, கூடாரம் நல்லாயில்லை, போக்குவரத்து கஷ்டமா இருக்கு என்று ஏதாவது பொலம்பிக்கொண்டே வந்தால் புரிந்துகொள்ளுங்கள்.

புலம்பல்களை கண்டுகொள்ளுங்கள்

புலம்பல்களை கண்டுகொள்ளுங்கள்

இந்த புலம்பல்களை வைத்தே வாழப்போகும் வாழ்க்கையில் உங்கள் காதலர் எப்படி குற்றம் குறைகள் சொல்வார் என்று கண்டுபிடித்துவிடலாம்!

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

டிரெக்கிங் பயணம் எத்தகையதோ அதைப்போலவே வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் அவசியம். அதாவது கூடாரம் அமைக்க உதவுவது, தண்ணீர் தயாரிப்பது போன்ற காரியங்களில் உங்கள் காதலர் உங்களுக்கு துணையாக இருப்பவராக இருந்தால் வாழ்க்கையிலும் அந்த ஆதரவும், துணையும் நீடிக்கும் என்பது உறுதி.

ஆதரவு

ஆதரவு


இதுபோன்று உங்களது பணிகளை எடுத்துபோட்டு அவரே செய்தால் உங்கள் வருங்கால துணைவர் கணிவுள்ளம் கொண்ட ஆதரவு மிக்கவர் என்பதை அடையாளம் காணலாம்.

இக்கட்டான சூழ்நிலை

இக்கட்டான சூழ்நிலை


டிரெக்கிங் பயணத்தின்போது சில நேரங்களில் நிலைமை நம் கையை மீறி போய்விடும். அப்படிப்பட்ட சமயங்களில் உங்கள் காதலர் எப்படி நடந்துகொள்கிறார் என்பது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்.

நிதானம்

நிதானம்


அதாவது கடினமான சூழலில் விரக்தியோ, வெறுப்போ அடையாமல் நிதானமாக எப்படி நிலைமையை கையாளுகிறாரோ, அதைவைத்தே வாழ்வின் கஷ்டமான தருணங்களில் எப்படி நடந்துகொள்வார் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம்.

பழக்கவழக்கங்கள்

பழக்கவழக்கங்கள்

டிரெக்கிங் பயணத்தின்போது கூடாரம் கட்டி தங்குவது ஒரு இனிமையான அனுபவம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்கள் காதலர் மற்றவர்களுடன் சகஜமாக பழகுகிறாரா, அவர்களுடன் உரையாடி சந்தோஷமாக பொழுதை கழிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து உங்களுடனே உங்கள் காதலர் ஒட்டிக்கொண்டு திரிந்தால் அதுவே பின்னாளில் ஒரு வலியாக மாறவும், காதல் குறைந்துபோகவும் காரணமாக அமையும்.

அனைவரையும் சமனோட நடத்துவது

அனைவரையும் சமனோட நடத்துவது

சக பயணிகளிடம் கனிவோடு நடந்துகொள்வது, பயணத்தின் போது எதிர்படும் கீழ் நிலை ஊழியர்களை 'நீ' என்று ஒருமையில் அழைக்காமல்; 'நீங்கள்' என்று சக மனிதனுக்கு தரவேண்டிய மரியாதையோடு நடத்துவது போன்ற விஷயங்கள் உங்கள் காதலரின் சமூக அக்கறையையும், பொறுப்பையும் நன்கு உணரச்செய்ய உதவும். அதாவது சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட காதலர் உங்களையும் பொறுப்போடும், அக்கறையோடும் கட்டாயம் கவனித்துக்கொள்வார்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்