Search
  • Follow NativePlanet
Share
» »நாகபஞ்சமி பரிகாரத்திற்கு எந்த தலம் சிறந்தது ?

நாகபஞ்சமி பரிகாரத்திற்கு எந்த தலம் சிறந்தது ?

பஞ்சமி நாளான நாகபஞ்சமி அன்று எந்த திருத் தலத்திற்குச் சென்று வழிபட்டால் முழுப் பரிகாரம் கிடைக்கும் தெரியுமா ?

இந்து வழிபாட்டு முறைகளில் ஒரு பிரிவே நாகபஞ்சமி. பெரும்பாலான கோவில்களில் நாக வழிபாடு இருப்பதை நாம் பார்த்திருப்போம். நாக தோஷங்கள் நீங்கவும், அவற்றால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்கவுமே இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகபஞ்சமி என்று அழைக்கின்றனர். இந்நாளில் எந்த தலத்திற்குச் சென்று வழிபட்டால் முழுப் பரிகாரம் கிடைக்கும் தெரியுமா ?

நாகபஞ்சமி விரதம்

நாகபஞ்சமி விரதம்


நாகதோஷம், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமி நாளில் நாகதேவதையை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை. தமிழகத்தில் பரவலாக நாக வழிபாடு இருந்தாலும் குறிப்பிட்ட ஆன்மீகத் தலங்களில் மட்டுமே நாக வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வரும் நாகபஞ்சமி தினத்தன்று சென்று வழிபடுவது சிறந்தது.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

பேரையூர் பிரகதாம்பாள் ஆலயம்

பேரையூர் பிரகதாம்பாள் ஆலயம்


புதுக்கோட்டைக்கு அருகே உள்ள பேரையூர் பகுதியில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் கோவில். இத்தலத்தின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் நாகநாதர் தான். இத்தலத்தில் நாகலோகத்தில் இருந்த பாம்புகள் வணங்கி அருள் பெற்றதாக வரலாறு. வருடந்தோரும், பக்தர்கள் நூற்றுக் கணக்கானோர் இத்தலத்தில் நாகதோஷம் நீங்க நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

peraiyurtemple

தலசிறப்பு

தலசிறப்பு


பேரையூர் பிரகதாம்பாள் ஆலயத்தில் உள்ள ஐந்து தலை நாகரை வணங்கும் முன், நாகதீர்த்தத்தில் நீராடி வணங்கினால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், இத்தலத்தில் வேண்டி பயணடைந்தவர்கள் நாகலிங்கத்திற்கு மஞ்சல் ஆடை சாற்றி, பாலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

peraiyurtemple

அனுமார் கோதண்டராமர் திருக்கோவில்

அனுமார் கோதண்டராமர் திருக்கோவில்


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது அனுமார் கோதண்டராமர் திருக்கோவில். புளியமர வடிவில் அனுமார் காட்சியளிப்பது தல சிறப்பாகும். ராகு, நாக தோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆடிமாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி வழிபாடு இங்கே செய்யப்படுகிறது.

Nsmohan

காரைவாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயம்

காரைவாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயம்


ஈரோடு மாவட்டம், காரை வாய்க்காலில் அமைந்துள்ளது சுயம்பு நாகர் கோவில். நாகபஞ்சமி தினத்தன்று இங்கே சிறப்பு யாகம் நடத்துவது வழக்கம். அன்றைய தினம், நாகர் கர்ம நாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தோஷம் இருப்பின், நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

Harsha Vardhan

தையல்நாயகி அம்மன் ஆலயம்

தையல்நாயகி அம்மன் ஆலயம்


திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் அமைந்துள்ளது தையல்நாயகி அம்மன் ஆலயம். இத்தலத்தின் மூலவராக நாகம்மா வீற்றுள்ளார். நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாக தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தால் நிவர்த்தி கிடைக்கும் என்பது தல நம்பிக்கை.

Arun R

சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்

சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்


திருவரங்கம் மேலவாசல் அருகே அமைந்துள்ளது சந்திரமௌலீஸ்வரர் கோவில். இத்தல மூலவர் சந்திர மௌலீஸ்வரர் கிழக்குநோக்கி அருள்பாலிக்க, அவரது வலது புறத்தில் மங்களகௌரி அம்மையார் வீற்றுள்ளார். செவ்வாய், வெள்ளி அன்று ராகுகாலத்தில் இத்தலத்தில் விஷ்ணு, துர்க்கைக்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டைக் காண ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

Ranjithsiji

நாகபஞ்சமி வழிபாடு

நாகபஞ்சமி வழிபாடு


சந்திரமௌலீஸ்வரர் கோவிலின் மேற்கே தலவிருட்சமாக பெரிய அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன. அதன் அடியில் நாகம்மா, கஜலட்சுமி மற்றும் ஏராளமான நாகர் சிலைகளும் அந்த தல விருட்சங்களை சுற்றி அமைந்துள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் பஞ்சமி தினத்தில் இத்தலம் வந்து நாகம்மாளுக்கும் நாகர்களுக்கும் மஞ்சள் பூசி அபிஷேகம் செய்தால் முழுமையான பரிகாரம் கிடைக்கும்.

Khanruhi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X