Search
  • Follow NativePlanet
Share
» »கனவிலும் கண்டிராத பறவைகள் கண்முன்னே குதூகலிக்க வரும் தீவு எது தெரியுமா?

கனவிலும் கண்டிராத பறவைகள் கண்முன்னே குதூகலிக்க வரும் தீவு எது தெரியுமா?

கனவிலும் கண்டிராத பறவைகள் கண்முன்னே குதூகலிக்க வரும் தீவு எது தெரியுமா?

ஒடிசா மாநிலத்தின் பூரி,குர்தா மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் பரவியுள்ள நீர்நிலை இந்த சிலிக்கா ஏரி ஆகும். இது சமீபகாலங்களில் புகழ்பெற்றுவரும் சுற்றுலாத்தளமாகும். இதன் சுற்றுலா அம்சங்கள், எப்படி செல்லலாம், என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

இடம்பெயர்ந்து வரும் பறவைகளை ரசிப்பதற்காக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாளடைவில் இந்த ஏரியின் சுற்றுலா அம்சங்கள் தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து தொடர்ச்சியாக வருகை தருகின்றனர்.

Krupasindhu Mudul

 கிராமங்கள்

கிராமங்கள்


இந்த ஏரியின் சுற்றுப்புறத்தில் 132 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 160 வகையான பறவை இனங்கள் வருகைதருவதாக அறியப்படுகிறது

Sujit kumar

இனங்கள்

இனங்கள்

கணக்கெடுப்பின்படி, இங்கு வரும் 45 சதவிகித பறவைகள் இந்தியதுணைக்கண்டத்தைச் சார்ந்தவையாக இருக்குமாம். 32 சதவிகித பறவைகள் நீர்வாழ்வன. 152 அரிய வகை பறவைகளும் இங்கு அடிக்கடி வருகை தருகின்றன. 37 வகையான ஊர்வன உயிரிகளும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

J.M.Garg

சிலிக்காவில் நாம் காணவேண்டியவை

சிலிக்காவில் நாம் காணவேண்டியவை


டால்பின் பாயிண்ட், மங்களஜோதி,தாரதாரணி கோயில், நாலபனா பறவைகள் சரணாலயம், சட்டபடா, நாராயணி கோயில், நிர்மல்ஜரா தீவு, சங்குடாதீவு,பறவைகள் தீவு, பனாப்பூர், தேனிலவுத் தீவு ஆகியன நீங்கள் மறக்காமல் காணவேண்டிய இடங்களாகும்.

Krupasindhu Muduli

டால்பின் முனை

டால்பின் முனை


சட்படா உப்பு நீர் ஏரியின் முக்கியமான கவரும் இடம் டால்பின் முனையாகும். சுற்றுலாப் பயணிகள் இராவடி டால்பின், பொதுவான டால்பின், பாட்டில் மூக்கு டால்பின் மற்றும் வெள்ளை மூக்கு டால்பின் போன்றவற்றை காணலாம்.

Bottlenose Dolphin

மங்களஜோதி

மங்களஜோதி


மங்களஜோதி, சிலிக்கா பகுதியின் பழமையான கிராமம் ஆகும். இங்குள்ள மீன்பிடி கிராமங்களின் முதன்மையானது. கிழக்கு கடற்கரை துருவத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வித்தியாசமான பறவைகளையும், உயிரினங்களையும் காணமுடியும்.

mangalajodiecotourism.com

காளிஜெய் கோயில்

காளிஜெய் கோயில்

இந்த கோயில் சிலிக்காவின் தீவுகள் ஒன்றில் அமைந்துள்ளது. இது காளியம்மனுக்காக அமைக்கப்பட்ட கோயில் ஆகும். இங்கு மகரசங்கராந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

Aruni Nayak

 நல்பானா பறவைகள் சரணாலயம்

நல்பானா பறவைகள் சரணாலயம்

நல்பானா பறவைகள் சரணாலயம் நல்பானா தீவில் அமைந்துள்ளது. இது 1973லிருந்து பறவைகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவருகிறது.

Mehmet Karatay

சட்டபடா

சட்டபடா

சட்டபடா ஒரு ஏரிக்கரை ரிசார்ட் ஆகும். அதாவது சொகுசு விடுதி. இங்கு சிலிக்கா ஏரி, கடலுடன் கலக்கிறது.இந்த இடத்திலும் அதிக அளவு பறவைகள் உண்டு. இது சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்கிறது. இங்கு டால்பின்களை நாம் காணமுடியும்.

MKar

நிர்மல்ஜாரா தீவு

நிர்மல்ஜாரா தீவு


இந்த தீவும் சிலிக்கா ஏரியில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பிரியர்கள் இதைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். உண்மையில் காதல் ஜோடிகளின் பயணத்துக்கு ஏற்ற இடம் இதுவாகும்.

 தேனிலவுத் தீவு

தேனிலவுத் தீவு


ஹனிமூன் ஐலண்ட் என்றழைக்கப்படும் இந்த தேனிலவுத் தீவு, காதல் தீவின் அருகிலேயே அமைந்துள்ளது. இது மிகவும் அழகாகவும், புகைப்படம் எடுக்க மிக அட்டகாசமாகவும் இருக்கும். திருமணமான தம்பதிகள் இங்கு ஹனிமூனுக்கும் வருகிறார்கள்.

 பறவைகள் தீவு

பறவைகள் தீவு

இந்த தீவில் நீங்கள் எங்கு நோக்கினும் பறவைகள்தான் உங்கள் கண்களுக்குத் தென்படும். ஆங்கிலப் படத்தில் வருவதுபோலவே நீங்கள் கனவிலும் நினைக்காத பறவை வகைகள் உங்கள் கண்ணருகே வந்து செல்லும்.

Offl

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X