» »ஹொசஹொலலு லக்ஷ்மிநாராயணர் ஆலயத்தில் அப்படி என்னதான் இருக்கு!

ஹொசஹொலலு லக்ஷ்மிநாராயணர் ஆலயத்தில் அப்படி என்னதான் இருக்கு!

Written By: Staff

எங்கும் இறைவனைக் காணும் பண்டைக் காலத்து மாந்தரின் பக்தி தான் இன்று வானளாவ வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தாலும் சாதிக்க இயலாத இத்தனை சமச்சீரான, துல்லியமான கண்கவர் கட்டிடக்கலை, சிற்பக் கலைப் படைப்புக்களைக் கொடுத்திருக்கிறது!

இந்த மனோகரமான கலைச்சிறப்புக்கள் எழுந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் இன்னமும் அதே கம்பீரத்தோடும் எழிலோடும் விளங்கும் இவைகளை இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் காணலாம். அப்படிப்பட்ட ஒரு கலாச்சார தரிசனத்தைத் தேடி நாம் இன்று ஹொசஹொலலு லக்ஷ்மி நாராயணர் ஆலயத்திற்குச் செல்லலாம்!

கர்நாடகத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் சிறிய ஊர் ஹொசஹொலலு. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊர் ஒரு காலத்தில் ஹொய்சால மன்னர்களின் கோட்டையாக இருந்தது. இந்த ஊரில் ஹொய்சாலர்களின் கட்டிடக் கலைச் சிறப்பைக் காணலாம். லக்ஷ்மிநாராயணர் ஆலயம் ஹொசஹொலலுவில் சுற்றுலாவிற்கு முக்கிய இடமாகும்.

இது கர்நாடகத்தின் மற்ற ஆலயங்களைப் போன்று மிகவும் பிரபலமடையாமல் இருக்கலாம், ஆனால் இது ஒரு பிரமிப்பூட்டும் ஆலயமாகும். கோயிலின் அழகிய அமைப்பும், பிரம்மாண்டமான உட்புறமும், நம்முடன் பேச வரும் சிற்பங்களும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மையன.

என்ன, உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டோமா! சரி, அந்த எழிலைக் கண்ணாரக் கண்டு மகிழலாம் இனி. ஒரு நிழற்படச் சுற்றுலாச் செல்வோம், வாருங்கள்!

லக்ஷ்மிநாராயணர் ஆலயத்தைக் கட்டியது யார்?

லக்ஷ்மிநாராயணர் ஆலயத்தைக் கட்டியது யார்?

1250 ஆம் ஆண்டு, ஹொய்சாள மன்னன் வீர சோமேச்வரன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

உங்களுக்காக ஆயுர்வேதம் வழங்கும் அற்புத பொக்கிஷம்?

PC: Bikashrd

கட்டிடக்கலைச் சிறப்புக்கள்

கட்டிடக்கலைச் சிறப்புக்கள்

திரிகூட விமான முறையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது மூன்று சன்னிதிகள் இணைந்த கோயில்.

PC: Mashalti

முற்பிறவி பாவங்களைத் தீர்க்க இங்கு செல்லவும்

கோபுரம்

கோபுரம்

நடுவில் உள்ள சன்னிதியின் விமானமே கோபுரமாக அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு சன்னிதிகளுக்கும் விதானம் தட்டையாக உள்ளது.

இந்த சிவன் கோவில்களின் அற்புதத்தை அறிவீரா?

PC: Dineshkannambadi

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

கோயில் முழுவதும் ஜகதி என்று சொல்லப்படும் தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. இது ஹொய்சாள கட்டிடக்கலையில் முக்கிய அம்சமாகும்.

பக்தர்களே தென்மலையின் சிறப்புகள் பற்றி தெரியுமா?


PC: Bikashrd

மூலவர்

மூலவர்

லக்ஷ்மிநாராயணர் (மகாவிஷ்ணு)

PC: Bikashrd

சிற்பங்கள்

சிற்பங்கள்


நாராயணனின் லீலைகளை விளக்கும் சிற்பங்களே அதிகம். சுவர்களில் இராமாயண, பாரத நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளன.

PC: Promehteus55

சன்னிதிகள்

சன்னிதிகள்

வேணுகோபாலர், லக்ஷ்மிநாராயணர், லக்ஷ்மிநரசிம்மர்

PC: Dineshkannambadi

லக்ஷிமி நாராயணர் கோவில்

லக்ஷிமி நாராயணர் கோவில்

PC: Bikashrd

சுற்று பிரகாரம்

சுற்று பிரகாரம்

PC: Dineshkannambadi

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கோவில் இருக்குமிடம்

பெங்களூருவிலிருந்து 161 கிமீ, மைசூரிலிருந்து 61 கிமீ

அருகில் பார்க்குமிடங்கள்

அருகில் பார்க்குமிடங்கள்

அருகில் பார்க்குமிடங்கள்

ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூரு, சிரவணபெலகோலா (28 கிமீ)

காசியின் உண்மை முகத்தை பாரீர்

Read more about: travel, temple, பயணம்