» »கொஞ்சம் கொஞ்சமாக களவு போகும் மதுரை மீனாட்சி கோயில் புகழ்! மறைக்கப்படுகிறதா தமிழரின் மாண்பு?

கொஞ்சம் கொஞ்சமாக களவு போகும் மதுரை மீனாட்சி கோயில் புகழ்! மறைக்கப்படுகிறதா தமிழரின் மாண்பு?

Written By: Udhaya

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு அறிமுகம் தேவையில்லைதானே. வைகை ஆற்றின் கரையில் இருக்கும் 'மதுரை' எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் தமிழர்களின் பெருமையை தலையில் தாங்கி நிற்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தமிழரின் அழகான அடையாளம். இதைக் குறித்து நாம் பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது. அதே சமயம் கண்ணுக்கு புலப்படாத கயவர்களின் பிடியிலிருந்து கோயிலையும் தமிழரின் பெருமையையும் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

வெள்ளக்காடு

வெள்ளக்காடு

கடந்த அக்டோபர் 4ம் தேதி மதுரையில் வரலாறு காணாத மழை பெய்தது. அதில் மீனாட்சியம்மன் கோயிலின் சுற்றுப்பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. மேலும் அந்த நீர் கோயிலுக்குள்ளேயும் வந்தது. எனினும் சில மணி நேரங்களில் அந்த வெள்ளம் வடிந்தோடியது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

IM3847

இந்த படத்தைப் பாருங்கள்

இந்த படத்தைப் பாருங்கள்

3600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் படைத்த அதிசயம் மதுரை மீனாட்சியம்மன் கோயில். அப்படிப்பட்ட இந்த கோயிலின் அறிவியல் அற்புதங்கள் தெரியுமா? இந்த படத்தைப் பாருங்கள்.

 கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு

மீனாட்சியம்மன் கோயிலின் அமைப்பையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒன்றும் விளங்கவில்லையா

ஸ்ரீநிதி

சூரியன் மறைவு

சூரியன் மறைவு

முதல் படம் சாதாரணமாகவே காலையில் கிழக்கில் தோன்றி மாலையில் மேற்கில் மறையும் சூரியனின் படம்.

Shefali11011

நாற்திசை கோபுரங்கள்

நாற்திசை கோபுரங்கள்

மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு கோபுரங்களும் நான்கு திசைகளில் அமைக்கப்பட்டுள்ளதுதானே. அப்படியானால் சூரியன் மறையும் நிகழ்வு மேற்கு கோபுரத்தில் மறைந்திருக்கவேண்டும் அல்லவா?

எஸ்ஸார்

 அறிவியல் புரிகிறதா

அறிவியல் புரிகிறதா

என்ன சூரியன் மேற்கில் மறையாமல் வடமேற்கில் மறைகிறான் என்று கேட்பது புரிகிறது. இதுதான் அறிவியல்.

 கலிலியோ அறிவியல்

கலிலியோ அறிவியல்

பூமி உருண்டையானது. தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அதுவும் 23.5 டிகிரி அச்சு கோணம் சாய்வில் சுற்றுகிறது. இதை கலிலியோ 525 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் இதே அறிவியல் கருத்தைக் கொண்டு 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சியம்மன் கோயிலை கட்டியுள்ளான் தமிழன்.

மிகத் துல்லியமான கணிப்பு

மிகத் துல்லியமான கணிப்பு

திசையை மிகத்துல்லியமாக கணித்ததுடன், அந்த 23.5 டிகிரி சாய்வையும் மிகச்சரியாக கணித்துள்ளனர் என்பதற்கு சான்றே இந்த சூரியன் மேற்கு கோபுரத்திலிருந்து அதே டிகிரி அளவு சாய்ந்து மறைவது.

mckaysavage

கரும்பு தின்ன கல்யானை

கரும்பு தின்ன கல்யானை

இதே கோயிலில் கல்யானை கரும்பு சாப்பிட்ட கதையும் உள்ளது. அந்த கரும்பை சாப்பிட்ட கல்யானையை இன்றும் மீனாட்சியம்மன் கோயிலில் காணமுடியும். ஆனால் தற்போது நடந்துவரும் செயல்கள் தமிழர்களின் மாண்பை மறைக்கவும், தமிழர்களின் புகழை இல்லாமல் செய்யவும் நடத்தப்படுகிறதா என்பதுபோல் இருக்கிறது.

 காணாமல் போன சிலைகள்

காணாமல் போன சிலைகள்

ஆம். 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இக்கோயிலின் சிலைகள் காணாமல் போயிருக்கிறது என்பது குற்றச்சாட்டு. பொற்றாமரைக் குளங்களைச் சுற்றியிருந்த தூண்கள் பல காணாமல் போய்விட்டது. யாழி முதலிய அழகிய சிற்பங்கள் பலவற்றையும் காணவில்லை என்று உலக பாரம்பரிய சின்னங்களை அறிவிக்கும் யுனெஸ்கோவே அறிவித்துள்ளதாக கூறப்படுவது மதுரை மக்களிடையேயும், தமிழ் ஆர்வலர்களிடையேயும் மிகுந்த வருத்தத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

mckaysavage

அழிக்கப்படுகிறதா தமிழர்களின் பாரம்பரியம்

அழிக்கப்படுகிறதா தமிழர்களின் பாரம்பரியம்

சுவர் ஓவியங்கள் பல அவசர கதியில் வெள்ளைப் பூசி அழிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரேஸ்வரர் சன்னதியில் இருந்த காலபைரவர் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. தட்சினாமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு இடமாறியிருக்கிறார்.

Shefali11011

தமிழ் ஆர்வலர்களின் குமுறல்

தமிழ் ஆர்வலர்களின் குமுறல்


ஆங்காங்கே அவ்வப்போது கேள்விபடும் சிலைக் கடத்தல் சம்பவங்களைப் பார்க்கும்போது மனதில் ஒரு வித அச்சம் உருவாகிறது. இந்த சிலைகள் அனைத்தும் தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் இருந்துதான் திருடப்பட்டிருக்கவேண்டும். அது எப்படி சாத்தியமானது.

இது குறித்து அரசும், அறநிலையத்துறையும் எந்த கேள்விகளையும் பதில்களையும் கொடுக்காமல் இருக்கிறது என்பதும், தமிழரின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் நாம் கடைசி வரை வேடிக்கைத் தான் பார்த்துக்கொண்டிருப்போமா?