» »இந்த கட்டிடங்களைப் பற்றி சொன்னால் நிச்சயம் வாயைப் பிளப்பீர்கள் !

இந்த கட்டிடங்களைப் பற்றி சொன்னால் நிச்சயம் வாயைப் பிளப்பீர்கள் !

Posted By: Udhaya

இந்த கட்டிடங்கள் இந்தியாவில் கட்டப்பட்ட மிக அழகான, பெரியதான சிறப்பான கட்டிடங்களாகும்.

இவற்றின் பெருமைகளை சிறப்புகளைப் பற்றி அறிய தொடர்ந்து படிங்க...!

தாமரைக் கோயில், புதுதில்லி

தாமரைக் கோயில், புதுதில்லி

 • தலைநகர் புதுதில்லியில் பகப்பூரில் அமைந்துள்ளது.
 • காலார நடந்து செல்வதற்கும், இரண்டொரு நிமிடங்கள் இங்கு செலவிடுவதற்கும் அலாதியான அனுபவம் கிடைக்கும்.
 • காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

youtube.com

 சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்

 • மராட்டிய மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது.
 • யுனெஸ்கோ வின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் ரயில் நிலையமாகும்

Anoop Ravi

தி கிரேட் ஸ்டுபா

தி கிரேட் ஸ்டுபா


 • மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் அமைந்துள்ளது.
 • மிகப் பழமையான கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் எனும் பெருமைக்குரியது.
 • காலை 8 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் இந்த இடத்துக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Ekabhishek

இன்ஃபோசிஸ் வளாகம்

இன்ஃபோசிஸ் வளாகம்

 • கர்நாடக மாநிலம் மைசூருவில் அமைந்துள்ளது.
 • நான்கு திரைப்பட அரங்குகள், 1500 பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையிலான கலையரங்கம் ஆகியன உள்ளன.
 • இங்கு பணியாள்கள் தவிர மற்றவர்கள் யாரும் அனுமதியில்லை

mahendra

சித்தூர்கர்க் கோட்டை

சித்தூர்கர்க் கோட்டை

 • ராஜஸ்தான் மாநிலம் சித்தகார்க்கில் அமைந்துள்ளது.
 • இந்த கோட்டைகளுக்குள் பல்வேறு மர்மங்கள் உள்ளன. தியாகங்கள் நிறைந்த இந்த கோட்டை 700 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
 • இருபத்தி நான்கு மணிநேரமும் கட்டண நுழைவு அனுமதிக்கப்படுகிறது.

Saavan8

விக்டோரியா நினைவகம்

விக்டோரியா நினைவகம்

 • மேற்கு வங்க மாநிலம் , கொல்கத்தாவில் அமைந்துள்ள குயின்ஸ் வே விக்டோரியா நினைவகம் அமைந்துள்ள இடமாகும்.
 • பிரித்தானிய, முகலாய, எகிப்திய, டெக்கானிய இஸ்லாமிய கட்டுமான விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி கட்டப்பட்ட கட்டடம் இது.
 • காலை 5.30 மணியிலிருந்து மாலை 6.15 மணி வரை நுழைவுக் கட்டணத்துடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள இப்ராகிம் பாக் இந்த கோல்கொண்டா கோட்டையை தாங்கி நிற்கும் இடமாகும்.

கோகினூர் வைரத்தின் கோட்டையாக இது அறியப்படுகிறது. இங்கு ஒரு சிறிய கைத்தட்டும் சத்தம் கூட பல கிமீ தூரத்துக்கு எதிரொளிக்குமாம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படுகிறது.

Haseeb1608

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

 • உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது.
 • யுனெஸ்காவால் உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஒன்று.
 • காலை முதல் மாலை வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவுக் கட்டணம் உண்டு

Suraj rajiv

ஐ பிஃளெக்ஸ் கட்டிடம்

ஐ பிஃளெக்ஸ் கட்டிடம்

 • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிவி ராமன் நகரில் அமைந்துள்ளது.
 • 144000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டடம் இது. 1500 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம் இது.
 • வெளியிலிருந்து பார்க்கமுடியும்.

Mohseen Khan

ஹவா மஹால்

ஹவா மஹால்


 • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது.
 • 18ம் நூற்றாண்டிலேயே தேன்கூடு வடிவத்தில் கட்டப்பட்டது இதன் சிறப்பாகும்.
 • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டண நுழைவு அனுமதிக்கப்படுகிறது.

Chirag Pai

ஆரோவில்லே

ஆரோவில்லே

 • விழுப்புரம் மாவட்டத்தில் பொம்மனம்பாளையத்தில் அமைந்துள்ளது.
 • உலகின் சாதி, மத பிரிவுகள், நாடுகள், இனங்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் ஆன்மீகம் அமைதி என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இடம் இதுவாகும்.
 • காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும்.

auroville.ru

குதூப் மினார்

குதூப் மினார்


 • புதுதில்லியில் மெகரௌலியில் அமைந்துள்ளது.
 • உலகின் மிக உயரமான செங்கள் கட்டமானம் எனும் சிறப்புக்குரியது.
 • நுழைவு கட்டணத்துடன் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

wiki

Read more about: travel