» »சபரிமலை பக்கத்துல இருக்குற மணிமாலா ஆறு பத்தி தெரியுமா?

சபரிமலை பக்கத்துல இருக்குற மணிமாலா ஆறு பத்தி தெரியுமா?

Written By: Udhaya

மலையாறுகளும், கடற்கரை சுற்றுலாவும் நிறைந்த கடவுளின் சொந்த ஊர் என்று புகழப்படும் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருப்பீர்கள். அதுவும் சபரிமலைக்கு... கார்த்திகை மாதம் விரதமிருந்து அய்யப்பனின் அருள்வேண்டி சபரிமலை செல்வோர் அப்படியே வந்துவிடுவார்களா என்ன. தற்போதைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகள். எடுக்கும் விடுமுறையில் கூடுதலாக இரண்டு இடங்களுக்கு சுற்றுலா திட்டமிடுகிறார்கள். வெறுமனே சபரிமலைக்கு சென்றுவிட்டுவருவதற்குபதில் இந்த இடத்துக்கும் சென்றுவாருங்களேன்

மணிமாலா

மணிமாலா

கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மணிமாலா என்னும் ஊர். இயற்கை எழில் வளம் நிறைந்த பச்சைபசுமையான இடம். குயில்களின் கொஞ்சல்களும் ஆற்றின் சலசல சத்தத்துடன் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும் இடமாகும்.

wiki

இடுக்கி

இடுக்கி

இடுக்கி மாவட்டத்திலுள்ள முத்தாவர் மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த ஆறு, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா வழியாக பரவி ஓடுகிறது.

wiki

நீளம்

நீளம்

92கிமீ தூரம் பாயும் இந்த ஆறு ஆலப்புழையில் பம்பாநதியுடன் கலந்து பயணிக்கிறது. இதனுடன் எருமேலி,வென்னிக்குளம்,கவியூர், முன்டக்காயம், கஞ்சிராப்பள்ளி, செம்பக்குளம் உள்ளிட்ட பல நதிகள் பாய்கின்றன. இங்குள்ள அனைத்து இடங்களிலும் ஆன்மீக தலங்கள் அமைந்துள்ளன.

wiki

திருவாங்கூரின் நீர்வழிப்பாதை

திருவாங்கூரின் நீர்வழிப்பாதை

இந்த ஆறுகளின் தொகுப்புதான், மத்திய திருவாங்கூரின் நீர் வழிப்பாதையாகும்.

wikimedia.org

கண்கவரும் சுற்றுலாத்தளம்

கண்கவரும் சுற்றுலாத்தளம்

மணிமாலா ஆறு பம்பை நதியுடன் கலக்கும் இடம் மிகவும் சிறப்பானதாகும். இங்கு பல சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகை தருகின்றனர். சபரி மலை சீசன் சமயங்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

wikimedia.org

 மணிமல்காவு பகவதியம்மன் கோயில்

மணிமல்காவு பகவதியம்மன் கோயில்

மணிமல்காவு பகவதியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு வாய்ந்ததாகும். மிகவும் சக்கிவாய்ந்த கோயிலான இது சுற்றுலா பயணிகள் விரும்பி வருகைதரும் தலமாகும்.

குலத்துங்கல் ஸ்ரீதேவி கோயில், மணிமாலா

குலத்துங்கல் ஸ்ரீதேவி கோயில், மணிமாலா

மணிமாலா கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஆற்றின்கரையில் அமைந்துள்ளதால் பிரசித்தி பெற்று விளங்குகிறது

கடையாணிக்காடு தர்மசாஸ்தா கோயில்

கடையாணிக்காடு தர்மசாஸ்தா கோயில்


மணிமாலா அருகே அமைந்துள்ள மற்றொரு ஆன்மீகத் தலம் தர்மசாஸ்தா கோயில் ஆகும்.

கூடதிங்கள் மகாதேவா கோயில்

கூடதிங்கள் மகாதேவா கோயில்

கூடதிங்கள் மகாதேவா கோயிலுக்கு சென்று உங்கள் பூர்வ ஜென்ம பாவங்களை போக்கி வாருங்கள்

மூங்கணி ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில்

மூங்கணி ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில்

மணிமாலா அருகே அமைந்துள்ள மற்றொரு சக்திவாய்ந்த தெய்வம் மூங்கணி தர்மசாஸ்தா கோயில். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் குழந்தை பாக்கியம் உண்டாகுமாம்.