Search
  • Follow NativePlanet
Share
» »உத்திரமேரூரில் வியக்கவைக்கும் தமிழனின் வரலாறு - தெரிந்துகொள்வோமா?

உத்திரமேரூரில் வியக்கவைக்கும் தமிழனின் வரலாறு - தெரிந்துகொள்வோமா?

By Udhaya

உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டின் கோயில் நகரமாம் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களைக் குறிக்கிறது. இங்கு பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் இக் கல்வெட்டுக்களில் உள்ளது. அந்த காலத்திலேயே தமிழன் எத்தனை சிறப்புகளை வாய்க்கப்பெற்றிருக்கிறான் என்பதை பாருங்கள். கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள், 10ஆம் நூற்றாண்டு கால தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. உலகம் மன்னராட்சியில் இயங்கும்போதே, மக்களாட்சிக்கு வித்திட்டவர்கள் தமிழர்கள் என்னும் பெருமையோடு அத்தனை வியக்கவைக்கும் பெருமைகளையும் அறிய இப்போதே உத்திரமேரூர் செல்வோம்.

 எங்குள்ளது

எங்குள்ளது

உத்திரமேரூர் எனும் ஊர் சென்னைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இது பண்டையகாலத்திலேயே மிகவும் சிறந்து விளங்கிய ஊராகும். பல்லவர்கள், சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில், மானாம்பதியிலிருந்து கொஞ்ச நேரத்தில் அமைந்துள்ளது உத்திரமேரூர்.

குடவோலை முறை

குடவோலை முறை

குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வழக்கத்தில் இருந்த ஒரு தேர்தல் முறையாகும். கிராம உறுப்பினர்கள் கூடி தகுதியான நபர்களின் பெயர்களை ஓலையில் எழுதி குடத்தில் இட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பர். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்துள்ளது இந்த முறை. இதர்கு ஆதாரமாக மூன்று கல்வெட்டுக்கள் உத்திரமேரூரிலும், தஞ்சையின் பள்ளிப்பாக்கத்திலும் கிடைத்துள்ளது.

Ssriram mt

கல்வெட்டுக்களில் காணப்படும் வேட்பாளர்களின் தகுதி

கல்வெட்டுக்களில் காணப்படும் வேட்பாளர்களின் தகுதி

கால் நிலத்துக்குமேல் அரை நிலம் கொண்டவராக இருக்கவேண்டும். முப்பத்தைந்திலிருந்து எழுபது வயது வரை இருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். வாரியங்களுக்கு கணக்கு காட்டாமல் இருந்தாலும் அவருக்கும், அவரின் குடும்பத்தில் யாருக்குமே போட்டியிட தகுதி இல்லை. கையூட்டு வாங்கியவனுக்கு தகுதி இல்லை.

ஒரு சிறுவன் அல்லது சிறுமி இந்த ஓலையை குடத்திலிருந்து எடுத்து நடுநிலையாளரிடம் கொடுக்கும். அந்த நடுநிலையாளர் ஓலையைப் பெறுவதற்கும் விதிகள் இருக்கின்றன. அவர் ஐந்து விரல்களும் நீட்டியபடி அகலமாக வைத்து உள்ளங்கையில்தான் அந்த ஓலையை வாங்கவேண்டுமாம். அவர் மட்டுமின்றி அனைவருக்கும் அதை வாசிக்க அனுமதிக்கவேண்டும் என்பது விதியாக உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர் தவறு புரிந்தால் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் இருந்துள்ளது.

Ssriram mt

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இரண்டு காரணங்களுக்காக பறவை ஆர்வலர்களையும், பறவை ஆராய்ச்சியாளர்களின் கவனத்தையும் நாடு முழுவதும் இருந்து ஈர்க்கிறது. முதலாவதாக, வரலாற்றை பின்னோக்கி பார்போமானால் இது இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட பறவைகள் சரணலாயமாகும்.

இரண்டாவதாக உள்ளூர் சமூகத்தினாரால் இந்த சரணாலயம் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பருவகால பறவைகளின் வருகை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாடு முழுவதிலும் இருந்து பறவை ஆர்வலர்களையும் பறவைகளை நேசிப்பவர்களையும் ஈர்க்கிறது.

அரிய மற்றும் வித்தியாசமான பறவை இனங்களான கர்கனெய், ஆஸ்திரேலியாவின் கிரே பெலிகன், இலங்கையின் பாம்பு பறவை, கிரே ஹெரான், கிளாஸி ஐபிஸ், திறந்த அலகு நாரை, சைபீரிய கொக்கு மற்றும் ஸ்பாட் பில்ட் டக் முதலியவை அடங்கும். இந்த சரணாலயத்தில் பல சிறிய ஏரிகள் சேர்ந்து சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பல அரிய வகை ஐரோப்பிய பறவை இனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.

Vinoth Chandar

காஞ்சி குடில்

காஞ்சி குடில்

மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, "காஞ்சி குடில்" என்று பெயரிட்டுள்ளனர். எனினும், இது மட்டுமே அதன் கவர்ந்திழுக்கும் அம்சமன்று. காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்கள், இவ்வூரின் பெருமையை உணர்ந்து கொள்வதோடல்லாமல், இந்நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றையும் அறிந்து கொள்ளும் வகையிலும் இது உள்ளது.

தட்டுமுட்டுச் சாமான்கள் முதல் வழங்கப்படும் உணவு வரை அனைத்தும் இவ்வூரின் கடந்த காலச் சிறப்புகளை விருந்தினர்க்கு எடுத்துக் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடுதி, மூதாதையர் வழி வந்த வீடு தான் என்றாலும், இது, இன்றைக்கு உள்ள அனைத்து நவீன வசதிகளுடன், தங்கும் விருந்தினர்களுக்கு எவ்வித சிரமும் இன்றி, சகல வசதிகளோடும் திகழ்கிறது.

இங்கு, மாலை நேரங்களில், கடந்த காலத்தில் இங்கு கோலோச்சிய கலைகளை, விருந்தினர்களுக்கு விளக்கும் பொருட்டு, உருவாக்கப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பயண நினைவாக பொருள்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளோர், உள்ளூரில் தயாரான அழகிய கைவினைப் பொருட்களை, காஞ்சி குடிலில் வாங்கலாம்.

tshrinivasan

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

இந்துக் கடவுளான சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயில், வருடந்தோறும் சிவபெருமானின் அருளை வேண்டி, இங்கு வருகை தரும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோயில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்து, இந்தியாவின் இத்தகைய உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாகக் கருதப்படும் பார்வதி தேவி, இங்கு இன்றும் காணப்படும் ஒரு மிகப் பழமையான மாமரத்தின் கீழ் அமர்ந்து, தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இக்கோயில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சிறந்த கைவினைக் கலைக்கு மிக உன்னதமான ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. பிற்காலத்தில், இக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் இதர நகாசு வேலைகள், அடுத்தடுத்து காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னர்களால் செய்யப்பட்டுள்ளது.

Ssriram mt

 வரதராஜ பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில் "ஹஸ்தகிரி கோயில்" என்றும் "அட்டியூரான்" என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட இக்கோயில், பன்னிரெண்டு ஆழ்வார்கள் வருகை தந்த 108 கோயில்களுள் ஒன்று என்ற பெருமை வாய்ந்தது. மற்ற விஷ்ணு கோயில்களைப் போலவே, இக்கோயிலும், காஞ்சிபுரத்தின் விஷ்ணு காஞ்சியில் அமையப்பெற்றுள்ளது.

இந்து பண்டிதரான ராமானுஜர், தன் வாழ்வின் ஒரு பகுதியில் இங்கு வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. உள்ளூர்வாசிகள், இக்கோயிலோடு, ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலையும் சேர்த்து, மூவரும் வாசம் செய்யும் தலம் என்ற அர்த்தம் விளங்குமாறு, "மும்மூர்த்திவாசம்" என்று அழைக்கின்றனர். பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்பெறும் இக்கோயில், மஹா விஷ்ணுவின் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.

வருடத்திற்கொரு முறை இங்கு நடைபெறும் திருவிழாவால், இக்கோயில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடயே மிகவும் பிரபலமாக உள்ளது. இத்திருவிழாவின் ஆரம்ப அறிகுறியாக, பெரிய குடைகளைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில், இங்கு "ப்ரம்மோத்சவம்" என்னும் மற்றொரு பெரிய விழாவும் நடைபெறுகின்றது.

Ssriram mt

கைலாசனாத் கோயில்

கைலாசனாத் கோயில்

கைலாசனாத் கோயில் என்றும் அழைக்கப்படும், கைலாசநாதர் கோயில் தான் இந்நகரில் உள்ள மிகப் புராதனமான கோயிலாகும். இது, சிவ பெருமானுக்காக, பல்லவ மன்னரான நரசிம்மப்பல்லவரால், எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயிலாகும். வருடந்தோறும் சிவபக்தர்கள் இக்கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக பெரிதும் பேசப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரச்சட்ட்ங்கள் பலவற்றில், சிவபெருமான், நடராஜர் தோற்றத்தில் காணப்படுகிறார்.

Keshav Mukund Kandhadai

Read more about: பயணம் travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more