Search
  • Follow NativePlanet
Share
» »சிவபெருமானின் சொந்த ஊர் தமிழ்நாட்டுலதான் இருக்கு! அதிர வைக்கும் ஆதாரங்கள்!

சிவபெருமானின் சொந்த ஊர் தமிழ்நாட்டுலதான் இருக்கு! அதிர வைக்கும் ஆதாரங்கள்!

சிவபெருமான் தமிழகத்தின் மாமன்னராக இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அவரை வட இந்திய கடவுள் என்று கூறுகின்றனர். ஆனால் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சிவனை வணங்குபவர் அவர் தமிழக

By Udhaya

சிவபெருமான் தமிழகத்தின் மாமன்னராக இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அவரை வட இந்திய கடவுள் என்று கூறுகின்றனர். ஆனால் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சிவனை வணங்குபவர் அவர் தமிழகத்தை, மிக முக்கியமாக தென்னகத்தைச் சார்ந்தவராகத்தான் இருப்பார் என்று உறுதியாக நம்புகின்றனர். அப்படி சிவ பெருமான் பிறந்த ஊர் ராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கிறது என்றும் அதன் ஆதாரங்கள் இதைத்தான் உறுதிப் படுத்துகிறது என்றும் சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எது உண்மை எது பொய் என்று தெரியாவிட்டாலும், உத்தரகோசமங்கையில் எண்ணற்ற மர்மங்கள் உள்ளன. அவற்றில் உலகில் பழமையான சிவலிங்கம், மரகத நடராஜர், ஏகாபாத சிலைகள் என நிறைய குறிப்பிட்டு சொல்லலாம்.

மிகப் பழமையான உத்தரகோசமங்கை

மிகப் பழமையான உத்தரகோசமங்கை


ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம் உள்ளது. இது மிகவும் அர்த்தமுள்ளதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த கோயில் சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

உலகின் முதல் சிவன் கோயில்

உலகின் முதல் சிவன் கோயில்

உலகின் முதல் பொருளாக கருதப்படும் லிங்கத்தில் தோன்றியதாக 64 சிவமூர்த்தங்களை குறிப்பிடுகின்றனர் ஆன்மீகவாதிகள். இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என கூறுகின்றனர். இம்மூர்த்தங்களைச் சுருக்கி, இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.

சிவபெருமான் பிறந்த ஊர்

சிவபெருமான் பிறந்த ஊர்

உலகை காக்கும் பரம்பொருளான சிவ பெருமானுக்கு இந்தி தான் தெரியும் தமிழ் தெரியாது என்று ஒரு சாமியார் கூறியிருக்கிறார். ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் உத்திரகோச மங்கையில் சிவபெருமான் பிறந்த ஊர் என்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மாமன்னர்

மாமன்னர்

சிவபெருமான் ஒரு பீடத்தில் ஒற்றைக் காலில் சமச்சீராக நிற்க, அவருக்கு வலப்பக்கம் பிரம்ம மூர்த்தியும், இடப்பக்கம் விஷ்ணு பெருமானும் இணைந்து தோன்றுவது ஏகபாதமூர்த்தி திருக்கோலம் என்கிறார்கள்.

ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் நடக்கும்போது, உலகமே நீரில் மூழ்கி அழியும் என்கிறது புராணம். புராண காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், சிவனின் பாதியாகிய சக்தியும் இந்த ஏகபாதமூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கி விடுவர். இது உத்தரகோசமங்கையில்தான் அதிக பழமையானதாக இருக்கிறது. மேலும் சிவபெருமான் இங்குதான் பிறந்தார் என்றும் மக்கள் நம்புகின்றனர். அவர் பெரும் மன்னராக இருந்திருப்பார் என்றுதான் கூறப்படுகிறது

ஏகபாதமூர்த்தி சிலைகள்

ஏகபாதமூர்த்தி சிலைகள்

ஏகபாதமூர்த்தி சிலைகள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கால் வளைந்த நிலையிலும், முன்னிருகைகள் வணங்கிய நிலையிலும் காணப்படுவதாக ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைக்கப்படுவது மரபு.

காணப்படும் இடங்கள்

காணப்படும் இடங்கள்

இத்தகைய ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் கோயில் மண்டபத் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோகர்ணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மண்டபத் தூண்களில் ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இன்னும் பல இடங்களில் இருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.

மரகத நடராஜர் சன்னதி

மரகத நடராஜர் சன்னதி

உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவகோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது.

பிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர். விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

சேதுபதி

சேதுபதி


மரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

இராமேசுவரம் , அக்னி தீர்த்தம்,இராமர் பாதம் ,தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், பாம்பன் பாலம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, தேவிபட்டினம், மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்,· வில்லூண்டித் தீர்த்தம், திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில், ஏர்வாடி, வாலிநோக்கம், ஓரியூர், சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் என இந்த மாவட்டத்தில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. முழுமையாக தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X