Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

By Naveen

இயற்கை அழகு தவழும் கேரள மாநிலத்தில் இடுக்கி-கோட்டயம் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது வாகமன் என்னும் அற்புதமான மலை வாசஸ்தலம். கடல் மட்டத்தில் இருந்து 1,100 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு முதன்முதலில் வந்து குடியேறியது ஆங்கிலேயர்கள் தான்.

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

தேயிலை தோட்டங்கள் பயிரிடுவதற்கு உகந்த சூழலை இவ்விடம் கொண்டிருந்ததால் தேயிலை பயிரிடவும், பிறகு ஆங்கிலேயே கிறித்துவ மிஷனரிகளும் வாகமனுக்கு வந்தன. இன்று வாகமன் முழுக்க எங்கு காணினும் பசுமை போர்வை போர்த்தியது போல தேயிலை தோட்டங்கள் இருப்பதை நாம் காணலாம்.

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

உலகின் முன்னணி பத்திரிக்கைகளில் ஒன்றான 'நேஷனல் கியோகிராபியால்' இந்தியாவில் இருக்கும் சிறந்த 50சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக வாகமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

இன்னும் வணிகமயத்தின் கைகளில் சிக்காமல் தன் இயற்கை அழகை தக்கவைத்திருக்கும் வாகமனில் சுற்றிப்பார்க்க ஏராளமான நல்லநல்ல இடங்கள் இருக்கின்றன. ஊசி மரக்காடுகள், அருவிகள், பசுமைனான புல்வெளிகள் போன்றவையும், விதவிதமான ஆர்கிட் மலர்கள் உள்ள தோட்டங்களும் இருக்கின்றன.

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

இவை தவிர கோடை காலங்களில் பாராகிளைடிங், மலையேற்றம், பாறை ஏறுதல் போன்ற சாகச விளையாட்டுகளும் வாகமனில் நடைபெறுகிறது. இங்கிருக்கும் குரிசுமலா என்ற மலை கத்தோலிக்க கிறித்தவர்களின் புனித ஸ்தலமாக திகழ்கிறது. அதேபோல தாங்கள் மலை என்ற இடம் இஸ்லாமியர்களின் புனித இடமாக இருக்கிறது. இந்த மலையில் 'சூசைட் பாயின்ட்' ஒன்றும் இருக்கிறது.

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த மலை வாசஸ்த்தளம் எது தெரியுமா?

தாங்கள் மலைக்கு அருகிலேயே முருகன் கோயிலொன்றும், அதற்கு அருகிலேயே பசுமையான புல்வெளிகளும் இருக்கின்றன. வாகமன் குமிழியில் இருந்து 45கி.மீ தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 65கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. குறைவான செலவில் குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ எங்காவது சுற்றுலா செல்ல விரும்புகிறவர்கள் நிச்சயம் வாகமனுக்கு ஒருமுறை வரலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+