Search
  • Follow NativePlanet
Share
» »வைகை அணையில் வெள்ளமா? பக்கத்துல என்னென்ன இடங்கள் இருக்கு தெரியுமா?

வைகை அணையில் வெள்ளமா? பக்கத்துல என்னென்ன இடங்கள் இருக்கு தெரியுமா?

தென்னகம் போற்றும் மதுரை மாநகரில் இருக்கும் ஒரே நீர் ஆதாரம் மதுரை வைகைதான். அதில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை தற்போதெல்லாம். பருவமழை அடித்துப் பெய்யும் சமயங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இதன் அருகில

By Udhaya

தென்னகம் போற்றும் ம து ரை மாநகரில் இருக்கும் ஒரே நீர் ஆதாரம் மதுரை வைகைதான். அதில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை தற்போதெல்லாம். பருவமழை அடித்துப் பெய்யும் சமயங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இதன் அருகிலேயே நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.வைகை அணை பூங்காவில் வலது கரை பூங்கா, இ ட து க ரை பூ ங் கா, சிறுவர் பூங்கா, பெரியாறு மாதிரி பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, ப யி ல் வா ன் பூங்கா, கா ந் தி மண்டம், வைகை உ ல் லா ச ரயில் மற்றும் இசை நடன நீ ரு ற் று உட்பட பல்வேறு பூங்காக்களில் சுற்றுலா ப ய ணி க ள் வருகை தருவதும், குதூகலித்து கொண்டாடுவதும் வழக்கமான ஒன்று. வாருங்கள் நாமும் இங்கு சென்று சி ற ப் ப ம் ச ங் க ளை யு ம், என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் வைகை அணைக்கட்டு | சுற்றுலா அம்சங்கள்

ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் வைகை அணைக்கட்டு | சுற்றுலா அம்சங்கள்

மதுரைக்கு அருகே உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த வைகை அணை. இது தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது.

மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கான விவசாய நீராதாரமாக வைகை அணை திகழ்கிறது. மேலும் அணைக்கருகிலேயே தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. இந்த மையமானது நெல், பருத்தி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது

. வைகை நீர்மின்னுற்பத்தி திட்டமும் இந்த அணையில் இயங்கி வருகிறது. ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த வைகை அணை அமைந்துள்ளதால் சுற்றுலா ரசிகர்களுக்கு பிடித்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

அணை நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அமைதியான ஒரு பிக்னிக் சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இந்த வைகை அணைப்பகுதி அமைந்துள்ளது.

Lakshmichandrakanth

 கோரிப்பாளையம் தர்க்கா |வரலாறு | சுற்றுலா அம்சங்கள்

கோரிப்பாளையம் தர்க்கா |வரலாறு | சுற்றுலா அம்சங்கள்

ம து ரை யிலேயே மிகப்பெரிய ம சூ தி யாக வீற்றுள்ளது. இது வை கை ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த ம சூ தி தி ரு ம லை நாயக்கரால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

ஹ ஸ் ர த் சுல்தான் அ ல வு தீ ன் பா து ஷா மற்றும் ஓ ம ன் சுல்தான் ஷ ம் சு தீ ன் பா து ஷா ஆகிய இரண்டு இஸ்லாமிய யோகிகளின் கல்லறைகள் இந்த மசூதி வளாகத்தில் உள்ளன.

இந்த தர்க்காவின் குமிழ் மாடங்கள் 70 அடி விட்டமும் 20 கொண்டவையாக ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இந்த புராதன அமைப்பின் வாசலிலேயே இது உருவாக்கப்பட்ட காலகட்டம் குறித்த தகவல்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.

வருடாந்திர உருஸ் திருவிழாவானது ஹிஜ்ரி காலண்டரின் ரபி அல் அவ்வல் மாதத்தில் சிறப்பாக இந்த தர்க்காவில் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்த தர்க்கா ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

Wasifwasif

பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை

முருகப்பெருமானுக்கான இந்த பழமுதிர்ச்சோலை கோயில் மதுரை மாநகரில் அழகர் கோயிலுக்கு அருகில் சோலைமலை உச்சியில் அமைந்துள்ளது.

முருகன் திருத்தலங்களில் முக்கியானதாக பிரசித்தி பெற்றிருக்கும் இக்கோயிலின் விக்கிரகம் தங்கத்தேரில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்போது ஏராளமான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர்.

நாபுரகங்கை எனும் இயற்கை நீரூற்று ஒன்றும் இந்த கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் புனிதநீராடலில் ஈடுபடுகின்றனர்.

மரம் மற்றும் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட முருகப்பெருமானின் சிலைகளை இக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கலாம். பிரம்மாண்டமான படிக்கட்டுகள் மூலமாக பக்தர்கள் கோயிலுக்கு ஏறிச்செல்லலாம்.

Santhoshlife91

காஜிமார் மசூதி

காஜிமார் மசூதி

மதுரை ஜங்ஷன் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த காஜிமார் மசூதி அமைந்துள்ளது. பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் இறைத்தூதர் முகமதுவின் வழித்தோன்றலாக அறியப்படுகிறார். மதுரையில் உள்ள மசூதிகளிலேயே மிக பழமையானதாக இது கருதப்படுகிறது.

ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் இந்த மசூதி அமைந்துள்ள இடத்தை கையளித்ததாக சொல்லப்படுகிறது. பெரிய மசூதி அல்லது பெரிய பள்ளிவாசல் என்று இது பிரசித்தமாக மதுரையில் அறியப்படுகிறது.

2500 பேர் ஒரே சமயத்தில் தொழுகை புரியக்கூடிய அளவிற்கு இடவசதியை கொண்டுள்ள இம்மசூதி இப்பகுதியில் மிகப்பெரியதாகும். மதுரை ஹஸரத் எனும் தர்க்காவும் இந்த மசூதியின் வளாகத்திலேயே அமைந்துள்ளது. மதுரை தர்க்கா என்ற பெயரில் அது அழைக்கப்பட்டு வருகிறது.

Wasifwasif

 கூடல் அழகர் கோயில்

கூடல் அழகர் கோயில்

தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூ ட ல் அ ழ க ர் கோ யி ல் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு ம ஹா வி ஷ் ணு வி ன் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார். ராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம். ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவக்கிரக தெய்வச்சிலைகளும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.

பொதுவாக நவக்கிரக விக்கிரகங்கள் சைவத்திருக்கோயில்களில் மட்டுமே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.

Ssriram mt

Read more about: travel madurai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X