Search
  • Follow NativePlanet
Share
» »சாதிய தீண்டாமையை எதிர்த்து பெரியார் நடத்திய மிகப்பெரிய போராட்டம் எங்கே நடந்தது தெரியுமா?

சாதிய தீண்டாமையை எதிர்த்து பெரியார் நடத்திய மிகப்பெரிய போராட்டம் எங்கே நடந்தது தெரியுமா?

By Super Admin

பட்டப்பகலில் பலரின் கண்முன்னே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை வெட்டிச்சாய்க்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. என்னதான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே மாற்றியிருந்தாலும் இன்னமும் வஞ்சம் கொண்ட நம் சமூகத்தின் நெஞ்சங்களில் சாதி என்னும் தீ மட்டும் அணையாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. அந்த தீ இன்னும் எத்தனை உயிர்களை குடிக்க காத்திருக்கிறதோ தெரியாது.

இத்தனைக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பெரியாரின் கைபிடித்து மனிதனை மிருகமாக்கும் சாதியை தூக்கியெறிய முற்பட்டவர்கள் நாம். சமீப காலமாக நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது மீண்டும் கற்காலத்தை நோக்கி நாம் இழுத்துச் செல்லப்படுகிறோமோ என்ற அச்சம் எழத்தான் செய்கிறது.

இச்சூழலில் தந்தை பெரியார் தமிழகத்துக்கு வெளியே கேரளத்தில் நடத்திய மிகப்பெரிய தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை பற்றியும் அது நடந்த கோயிலை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

வைக்கம் மகாதேவர் கோயில்:

வைக்கம் மகாதேவர் கோயில்:

கேரளாவில் இருக்கும் புகழ்பெற்ற சிவன் கோயில்களுள் ஒன்று தான்வைக்கம் மகாதேவர் கோயில் ஆகும். இந்த கோயில் பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட 108 குடும்பங்களின் வழிபாட்டுக்கு மட்டுமே உரியதாக இருந்திருக்கிறது.

இக்கோயில் அமைந்திருக்கும் வீதியில் தலித்துகளும், ஈழவர்களும் நுழைய தடைவிதிக்கப்பட்டிருகிறது. 1920களில் இதனை எதிர்த்து கேரளத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.

Vinayaraj

பெரியாரின் பங்கு:

பெரியாரின் பங்கு:

வைக்கம் போராட்டக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டார். இங்கே அவர் ஆற்றிய உரைகள் போராட்டத்தின் வீரியத்தை பன்மடங்காக உயர்த்தின. அகில இந்திய அளவில் வைக்கம் போராட்டம் கவனம் ஈர்க்கத்துவங்கியது.

பெரியாரின் பங்கு:

பெரியாரின் பங்கு:

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டதிற்க்காக இரண்டு முறை பெரியார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு 1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கம் கோயில் வீதியில் தலித்துகளும் ஈழவர்களும் நடக்ககூடாது போன்ற தீண்டாமை கொடுமைகள் முடிவுக்கு வந்தன.

Vinayaraj

வைக்கம் கோயில்:

வைக்கம் கோயில்:

வைக்கம் மகாதேவர் கோயில், எட்டுமானூர் சிவன் கோயில், கடுதுருத்தி தளியில் மகாதேவர் கோயில் ஆகிய மூன்றும் கேரளத்தில் இருக்கும் மிக சக்திவாய்ந்த திரிசூல சிவன் கோயில்களாக போற்றப்படுகின்றன.

வைக்கம் மகாதேவர் கோயிலில் இருக்கும் லிங்கமானது த்ரேதா யுகத்தில் இருந்து இங்கே இருப்பதாக நம்பப்படுகிறது.

Ajith

வைக்கம் கோயில்:

வைக்கம் கோயில்:

இக்கோயிலின் மூலவராக இருக்கும் சிவபெருமான் வைக்கத்தப்பன் என்றழைக்கப்படுகிறார். வைக்கம் கோயில் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு பிரிவுகளை சேர்ந்தவர்களும் வழிபடும் கோயிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் இருக்கும் மிகப்பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.

-Reji

வைக்கம் கோயில் - புராண வரலாறு:

வைக்கம் கோயில் - புராண வரலாறு:

மோக்ஷம் வேண்டி கராசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிகிறான். தவத்தின் பயனாக அவன் முன் தோன்றிய சிவபெருமான் மூன்று லிங்கங்களை அருளி அதனை வழிபடுமாறும் அப்படி செய்தால் மோக்ஷம் கிட்டும் என்று சொல்லி மறைகிறார் .

அதன் பிறகு சிவபெருமான் வழங்கிய ஒரு லிங்கத்தை தன் இடது கையிலும், மற்றொன்றை வலது கையிலும்,மூன்றாவது லிங்கத்தை கழுத்திலும் சுமந்து வருகிறான். இடையே லிங்கத்தை கீழே வைத்து ஓய்வெடுக்கிறான் ககாசுரன்.

Georgekutty

வைக்கம் கோயில் - புராண வரலாறு:

வைக்கம் கோயில் - புராண வரலாறு:

களைப்பாறிய பிறகு கீழே வைத்த லிங்கங்களை எவ்வளவு முயன்றும் எடுக்க முடியாமல் திணறுகிறான் பெரும்பலம் கொண்ட ககாசுரன். அப்போது அசரீரியாக ஒலித்த சிவன் "இம்மூன்று லிங்கங்களும் இருக்கும் இடத்திலேயே தான் கோயில் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு மோட்சத்தை அளிப்பேன்" என்றுரைக்கிறார்.

அப்படி ககாசுரனின் வலது கையில் இருந்த லிங்கமே வைக்கத்தப்பன் ஆகும்.

Sivavkm

வைக்கம் கோயில் - அமைப்பு:

வைக்கம் கோயில் - அமைப்பு:

வைக்கம் மகாதேவர் கோயில் கேரளாவில் இருக்கும் மிகபெரிய கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயில் கிட்டத்தட்ட 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கோயில் வளாகத்தினுள் முக மண்டபம் மற்றும் கர்பகிரஹம் என இரண்டு பிரிவுகள் உள்ளன.

இங்கே கோயில் வளாகத்தில் இருந்து நேரடியாக சிவபெருமானை வழிபட முடியாது. காமம், குரோதம், மோகம் போன்றவற்றை குறிக்கும் ஆறு படிகளை கடந்த பிறகே வைக்கம் மகாதேவரை வழிபட முடியும் படி இக்கோயில் அமைப்பு உள்ளது.

Vinayaraj

வைக்கம் கோயில் - பண்டிகை :

வைக்கம் கோயில் - பண்டிகை :

வைக்கம் கோயிலில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 'வைகத்தஷ்டமி' என்ற விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பன்னிரண்டு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

C C Prakash Chandran

வைக்கம் கோயில் - தமிழ் பயண வழிகாட்டி:

வைக்கம் கோயில் - தமிழ் பயண வழிகாட்டி:

வைக்கம் மகாதேவர் கோயிலை எப்படி சென்றடைவது? எங்கே தங்குவது? போன்ற தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+