» »செவ்வாய் தோஷமா - இன்று இந்த கோயிலுக்கு போனால் திருமணம் நிச்சயம்

செவ்வாய் தோஷமா - இன்று இந்த கோயிலுக்கு போனால் திருமணம் நிச்சயம்

Written By:

செவ்வாய் தோஷம் பாடாபடுத்துது. வந்த வரனெல்லாம் அப்படியே போயிடுது. நாலு வருசமா கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு என மனம் நொந்து பேசுற அப்பா, அம்மாக்கள நிறைய பேரு பாத்துருக்கலாம். அட அவங்கள விட அந்த தோஷம் இருக்கு பையனோ பொண்ணோ எப்படி வருந்துவாங்க. ஆனா அதுக்குலாம் கவல படவேணாம். இந்த கோயில்ல போயி பரிகாரம் பண்ணினா உடனடியா கல்யாணம் முடிவாகும். கோயிலுக்கு போலாமா?

 வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாதர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாகும். எந்தவித நோயினால் பாதிக்கப்பட்டாலும், இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால்போதும் ஒரேடியாக பறந்து போய்விடும் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தலங்களில் இது பதினாறாவது தலமாகும். இங்கு வந்து வழிபட்டால் திருமணம் உறுதியாகும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலைப் பற்றிய சங்ககால குறிப்பு

இக்கோயிலைப் பற்றிய சங்ககால குறிப்பு


வைத்தீஸ்வரன் கோயில் என்று தற்போது அழைக்கப்படும் இந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த புனித தலம். சங்ககாலத்தில் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

வேள் என்பது முருகப் பெருமானையும், புள் என்பது கருடனையும் குறிக்கிறது.

இவ்விடம் தொழு நோயை குணப்படுத்தும் இடமாக கருதப்படுகிறது. மேலும் இங்கு நாடி சோதிடர்கள் நிறைய இருக்கின்றனர். நாடி பிடித்து ஓலை வாசித்து உங்கள் வாழ்வை கணித்துவிடுவார்கள்.

Ssriram mt

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


சிதம்பரத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கிமீ தொலைவிலும் மயிலாடுதுறையிலிருந்து 16கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து 246கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். மொத்தம் 6 மணி நேர பயணத்தில் சென்னையிலிருந்து இந்த கோயிலை அடைய முடியும்.

வணக்கம்

மருத்துவ கடவுள்

மருத்துவ கடவுள்

டாக்டர். சிவா என்று திரைப்பட கதாபாத்திரங்கள் பல பார்த்திருப்போம். அப்படி அந்த சிவனே டாக்டராக வந்தால், அதுதான் இந்த கோயில். சிவபெருமான் மருத்துவராக இந்த கோயிலில் அமர்ந்து வரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்க செய்கிறார்.

இங்கு அமைந்துள்ள சித்தாமிர்த குளத்தின் நீர் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Ssriram mt

வரலாற்று புராணங்கள்

வரலாற்று புராணங்கள்

9 கிரகங்கள் ஒன்றான் அங்காரகன் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, உயிர் போகும் நிலையிலிருந்தபோது சிவபெருமான் அவர் முன் தோன்றி நோய் நீக்கினார். எனவேதான், ஒன்பது கிரகங்களிலும் இது செவ்வாய் கிரகத்தை குறிப்பதாக உள்ளது.

இதைப்போல திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுவலியால் அவதியுற்ற போது அவர் தமக்கையார் வைத்தியநாதரை வந்து வழிபட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் திருநாவுக்கரசர் முன் தோன்றிய சிவ பெருமான் அவரது பிணி நீக்கவும் துணை நின்றார் என்பது புராணக் கதை.

Mazhavai

திருமணத் தடை நீங்கும்

திருமணத் தடை நீங்கும்

செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். சீர்காழி அருகே தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

Rkrish67

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்