Search
  • Follow NativePlanet
Share
» »கோவா மாதிரி ரெண்டு மடங்கு கவர்ச்சியான கடற்கரை நம்ம ஊர்ல இருக்கு தெரியுமா?

கோவா மாதிரி ரெண்டு மடங்கு கவர்ச்சியான கடற்கரை நம்ம ஊர்ல இருக்கு தெரியுமா?

கோவா மாதிரியே ரெண்டு மடங்கு கவர்ச்சியான கடற்கரை நம்ம ஊர் பக்கத்துலயே இருக்குற வர்க்கலா கடற்கரைதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அட போங்கங்க நீங்க வேற.... கோவாவுல அழகழகா நிறைய பெண்களும், கொண்டாட்டங

By Udhaya

கோவா மாதிரியே ரெண்டு மடங்கு கவர்ச்சியான கடற்கரை நம்ம ஊர் பக்கத்துலயே இருக்குற வர்க்கலா கடற்கரைதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அட போங்கங்க நீங்க வேற.... கோவாவுல அழகழகா நிறைய பெண்களும், கொண்டாட்டங்களும், கூத்தும் கும்மாளமும் இருக்கும். இரவு நேரங்கள்ல ஒரே ஜாலிதான். அடிச்சி தூள் கெளப்பி அனுபவிக்கலாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும்னு. இதுலாம் வர்க்கலாவுல கிடைக்குமா? இப்படி உங்களுக்கும் சந்தேகம் இருந்தா.... ஒரு நிமிசம் இந்த கட்டுரைய முழுசா படிச்சிட்டு அப்றம் சொல்லுங்க. ஏன்னா... நம்ம அதிதியும் நானும் வர்க்கலாவுக்கு போனோம். அந்த எக்ஸ்பீரியன்ஸ்லதான் சொல்றேன்.. நாந்தான் சித்தார்த்.. இவங்க அதிதி. வாங்க வர்க்கலாவுல எப்படி அனுபவிக்கலாம்னு பாக்கலாம்

 வர்க்கலா சொர்க்கம் அப்டித்தானுங்களே!

வர்க்கலா சொர்க்கம் அப்டித்தானுங்களே!


ஹாய் பிரண்ட்ஸ். நா அதிதி.. என்னதான் கோவா சொர்க்கம்னு சொன்னாலும், வர்க்கலா மாதிரிலாம் வராது. அது ஏன்னு நீங்க வர்க்கலா வரும்போது புரிஞ்சிப்பீங்க. எனக்கு சொந்த ஊரு திருவனந்தபுரம். சித்தார்த் என்னோட பாய்பிரண்ட். அவனும் நானும் சும்மா ஊர் உலகம் சுத்திட்டு இருக்குறதுதான் எங்க வேலையே. எப்போ லீவு கிடைக்கும் ஊர் சுத்த போகலாம்னுதான் நினைப்போம். அப்படி சித்தார்த் கூட பர்ஸ்ட் டைம் நான் போன இடம்தான் வர்க்கலா. அட முன்னாடி நிறைய டைம் போயிருக்கேன்.. ஆனா சித்தார்த்தோட போனது அதுதான் முதல் முறை.

சித்தார்த் - சும்மா சொல்லக்கூடாது.. வர்க்கலாவ நான்கூட கொறச்சி மதிப்பிட்டுட்டேன். ஆரம்பத்துல வர்க்கலாவும் நம்ம கன்னியாகுமரி பீச் மாதிரிதான். அட அங்க குடும்பம் குட்டினு ஒரே நசநசனு இருக்கும். கோவா மாதிரியான ஒரு இடம் இந்தியாவுலேயே இல்லைனுதான், ஆனா இந்த வர்க்கலா என்னோட எண்ணத்த அப்படியே தலைகீழா மாத்திடிச்சி. வர்க்கலா நிஜமாவே சொர்க்கம்தான்.

Kerala Tourism

 எங்கே இருக்கிறது இந்த வர்க்கலா

எங்கே இருக்கிறது இந்த வர்க்கலா

சித்தார்த் - அதிதி.. இந்த வர்க்கலா எங்க இருக்குனு சொல்லிடேன் கொஞ்சம்.

அதிதி - வர்க்கலா அப்படிங்குற பேரு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா அங்க என்ன இருக்குனு யாருக்கும் பெருசா ஐடியா இல்ல.. பெரும்பாலும் நம்ம பிரண்ட்ஸ் என்ன நினைக்குறாங்கன்னா... கன்னியாகுமரி மாதிரி ஒரு கடற்கரை இருக்கும்னு. சிலர் திருவனந்தபுரம் கடற்கரைக்கு போய்ட்டு வந்துட்டு எதுவுமே இல்லைனு சொல்லிடறாங்க. ஆனா நீங்க வர்க்கலாவுக்கு நிசமா போக ஆசப்பட்டிங்கன்னா?..... இத பாலோ பண்ணுங்க...

திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் செல்லும் வழியில், கொல்லத்துக்கு பக்கத்தில் அமைந்துள்ளது இந்த வர்க்கலா கடற்கரை.

திருவனந்தபுரத்துல நிறைய கடற்கரை இருக்கு. ஆனா சிலருக்கு இது தெரியுறது இல்ல.

வர்க்கலா கடற்கரை திருவனந்த புரத்திலிருந்து கொல்லம் போற வழியில, ஆட்டிங்கல் தாண்டி எடவாக்கு முன்னாடி இருக்கு. எடவா இந்த கடற்கரைக்கு ரொம்ப பக்கத்துலயே இருக்கு. இதுக்கு இன்னொரு பேரு பாபநாசம் பீச்.

Andreas Eldh

 திருவனந்த புரத்துல எத்தன பீச் இருக்கு தெரியுமா?

திருவனந்த புரத்துல எத்தன பீச் இருக்கு தெரியுமா?


உங்களுக்கு ஒரு விசயம் தெரியலனா கத்துக்கணும்.. தெரியல தெரியலனு சொல்லிட்டு இருக்குறதுல எந்த அர்த்தமும் இல்லைனு சித்தார்த் அடிக்கடி சொல்லுவான். எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம்னாலும் படிச்சதெல்லாம் சென்னைதான். எனக்கு நிறைய இடங்கள் திருவனந்தபுரத்துலயே தெரியல.. வர்க்கலா பத்தி படிக்கும்போதுதான் இதெல்லாம் தெரியவந்துச்சி. திருவனந்த புரத்துலயே பல கடற்கரைகள் இருக்கு.

விழிஞ்சம் கடற்கரை

கோவளம் கடற்கரை

சங்குமுகம் கடற்கரை

குளோரியா கடற்கரை

சிரையின்கீழு கடற்கரை

தாழம்பள்ளி கடற்கரை

பெருமதுர கடற்கரை

என அப்படியே வர்க்கலா வரைக்கும் கடற்கரை சென்றுகொண்டே இருக்கும். அது கொல்லத்துல போயி முடியும். ஆனா சித்தார்த்துக்கு வர்க்கலா பீச் ரொம்ப புடிச்சிருந்துச்சி. மற்ற இடங்களுக்கு நாங்க போகவே இல்ல.. திருவனந்தபுரத்துல இருந்து நேரா போயிட்டோம் வர்க்கலாவுக்கு. அட... சித்தார்த் அந்த வழிய சொல்லு.

Marcus Sümnick

திருவனந்தபுரத்திலிருந்து எப்படி போனோம்

திருவனந்தபுரத்திலிருந்து எப்படி போனோம்

வர்க்கலா பீச் அல்லது பாபநாசம் பீச் என்பது திருவனந்தபுரத்திலிருந்து 44 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இது மிகவும் அழகானது.

நாங்க அப்படித்தான், திருவனந்தபுரத்துக்கு போயிட்டு, அங்க இருந்து கார் மூலமாக பாபநாசம் பீச்சுக்கு போனோம்.

இதுல ரெண்டு வழித்தடம் இருக்கு..

முதல் வழித்தடம் - முதல் வழித்தடத்துல பயணிச்சா நம்ம திருவனந்தபுரம், கார்யவட்டம், பள்ளிப்புரம், மங்களபுரம், கோராணி, ஆட்டிங்கல் வழியா வர்க்கலா பீச்சுக்கு போகலாம்.

இரண்டாவது வழித்தடம் - இரண்டாவது வழித்தடமும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். ஆனா அது பீச் வழியா போகும். திருவனந்தபுரம் பீச்ல ஆரம்பிச்சி அப்படியே பாபநாசம் பீச்ல போயி முடியும். ஆனா நாங்க முதல் வழித்தடத்துலதான் போனோம்.

 கடற்கரை மலைக் காட்சி உண்மையான அழகு

கடற்கரை மலைக் காட்சி உண்மையான அழகு

அதிதி - சித்தார்த் உனக்கு ஒன்னு தெரியுமா? இந்த இடத்த பத்தி நீங்க எந்த சைட்ல தேடுனாலும், உண்மையான அழக பத்தி கிடைக்கவே கிடைக்காது.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே இந்த வர்கலா ஆகும். கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது. அரபிக்கடலுக்கு அருகிலேயே உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்நகரின் தனித்தன்மையான அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த வித்தியாசமான புவியியல் அமைப்புக்கு வர்கலா அமைப்பு என்றே பெயரிட்டுள்ளது. பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்றாக இந்த வர்கலா கடற்கரையை டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி மதிப்பிட்டுள்ளது. அப்படின்னு சில விசயங்கள பத்தி மட்டும்தான் எழுதிருப்பாங்க.

Henrik Jagels

 வர்க்கலா அமைப்புனா என்ன?

வர்க்கலா அமைப்புனா என்ன?

சித்தார்த் - அதிதி.. ஆமா அது என்ன வர்க்கலா அமைப்பு?

அதிதி - அது வேற ஒன்னும் இல்ல சித்தார்த். இந்த வர்க்கலா கடற்கரை பகுதி அமைப்ப பாத்துருக்கேல..

சித்தார்த் - ஆமா,... பாத்துருக்கேன்.. நிலப்பரப்பு, மலை, அப்றம் கடல்னு இருக்குமே..

அதிதி - எக்ஸாட்லி.. அததான் வர்க்கலா அமைப்புனு சொல்றாங்க.. நாம பாத்தோம் இல்லியா.. வர்க்கலா ஒரு பக்கம் பச்சை, ஒரு பக்கம் நீலம்னு நடுவுல மட்டும் கடற்கரை மணலா பாக்குறதுக்கே ரொம்ப கண்கவர் காட்சியா இருக்கும் இல்லியா...

சித்தார்த் - ஆமா அதிதி... அந்த மலை மாதிரியான அமைப்புல, மேல் பக்கம் பசுமையாவும், கீழ் மண் சிகப்பாவும் இருக்கும். ஏதோ தூரத்துல இருந்து பாத்தா கேக் மாதிரியே இருக்கும் இல்லியா...

அதிதி - கடிச்சி வச்ச லேயர் கேக்.. ஹா ஹா ஹா... கரக்ட்டா சொன்ன...

Achuudayasanan

 பாண்டியர்களின் வரலாறு தெரியுமா உனக்கு....

பாண்டியர்களின் வரலாறு தெரியுமா உனக்கு....


அதிதி - சித்தார்த் உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா.... இந்த இடம் பாண்டியர்களோட வரலாற்று சுவடுகள் நிறஞ்சது..

சித்தார்த் - அட.. இது புதுசா இருக்கே.. நாம இந்த இடத்துக்கு போகும்போது கூட இத நீ சொல்லலியே..

அதிதி - ஆமா.. அப்றமாதான் படிச்சேன்.. புராண பின்னணி பலவிதமான புராணக் கதைகள் இந்த வர்கலா நகரம் பற்றி கூறப்பட்டாலும், அவற்றுள் ஒன்று பாண்டிய ராஜ வம்ச அரசர் ஒருவரிடம் அவரது பாவங்களிலிருந்து விடுபட பிரம்மா தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு ஆணையிட்டதாக கூறப்படுகிறது

சித்தார்த் - என்ன அதிதி.. பாண்டியன்னு சொல்லிட்டு... பிரம்மா அது இதுனு கட்டுக்கதைகளெல்லாம் நம்புற..

அதிதி - கட்டுக்கதைகளா.. இருக்குனு நம்புறவங்களுக்கு இருக்கு.. நீ இல்லைனு சொல்லிட்டா இல்லைனு ஆகிடுமா..

சித்தார்த் - சரி சரி கோபப்படாத.... முழு கதையும் சொல்லு...

அதிதி - நாரத முனிவரானவர் பாவ காரியங்களில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபடுவதற்காக தன்னை வணங்கிய பக்தர்களுக்காக தனது மரவுரியை கழற்றி எறிந்ததாகவும் அது மண்ணுலகில் விழுந்த இடத்தில் பிரார்த்திக்குமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது.

‘வல்கலம்' எனும் சொல்லுக்கு மரவுரி என்பது பொருளாகும், எனவே நாரத முனிவரின் மரவுரி வந்து விழுந்த இந்த இடம் வர்கலா என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

சித்தார்த் - பாண்டியர்களின் வரலாறுனு சொல்லிட்டு... பழங்கால நம்பிக்கை கதைகள சொல்லிட்டு இருக்க.. சரி.. நாம சுற்றுலாவுக்கு போனோமே.. அப்ப எங்கெல்லாம் சுத்தி பாத்தோம் நினைவிருக்கா..

Alexey Komarov

எங்கெல்லாம் சுற்றினோம்

எங்கெல்லாம் சுற்றினோம்

அதிதி - ஓ.. அது நினைவில்லாமலா? சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், கடுவாயில் ஜும்மா மசூதி, வர்கலா பீச், பாபநாசம் பீச், கப்பில் ஏரி, அஞ்செங்கோ ஃபோர்ட், வர்க்கலா சுரங்கப்பாதை, சிவ பார்வதி கோயில் மற்றும் பவர் ஹவுஸ்னு நிறைய இடத்துக்கு போனோம் இல்லியா.. அப்ப கூட இது டிரிப்பா.. இல்ல ஆன்மீக சுற்றுப்பயணமானு கிண்டல் பண்ணியே..

Nandukrishna_t_ajith

 2000 வருட பழமை

2000 வருட பழமை


சித்தார்த் - அதிதி நீ இத பத்தி கேள்வி பட்டிருக்கியா.. இங்க இருக்குற முக்கியமான கடற்கரைனா அது பாபநாசம் கடற்கரைதான..

அதிதி - ஆமா... அதுதான் நீ சொன்ன 2000 வருசம் பழமையா?

சித்தார்த் - அய்யு.. அது லட்சம் வருசம் பழமையா கூட இருக்கும்... ஆனா இந்த கடற்கரைக்கு பக்கத்துல 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. இத பத்தி தான் சொன்னேன்..

Binoyjsdk

 உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா

அதிதி - இந்த சித்தார்த் இருக்கானே.. பாஃரினர்ஸ பாத்துட்டா போதும்.. இந்த பாட்டத்தான் படிப்பான்.. அவங்க கல்ச்சர் வேற நம்ம கல்ச்சர் வேறனு சொன்னாலும் கேட்கமாட்டான்.

சித்தார்த் - அதான் சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பு வழங்கிடுச்சில.. கலாச்சாரங்குறது வருசத்துக்கு வருசம் மாறுபட்டுட்டே இருக்கும்.. இன்னும் இழைத்தழைகள கட்டிட்டு, குகைக்குள்ள வாழ்ந்துட்டு இருந்தா இவ்ளோ சந்தோசமா இருப்பியா..

அதிதி - அட இவன் வேற.. இங்க வந்துட்டீங்கன்னு வைய்ங்க.. இந்தியாவுலதான் இருக்கோமானு டவுட் வந்துடும். அப்படி என்னதான் இருக்குனு நீங்க கேட்கலாம்..

 சாகசப் பயணம் போலாமா

சாகசப் பயணம் போலாமா


வர்கலா பகுதியில் பல நீரூற்றுகளும் காணப்படுவதால் இந்த இடம் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.
வர்கலா கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகுப் பாராசூட் சவாரி போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம்.

Joseph Jayanth

 உல்லாச ஏரிக்கு ஒரு பயணம் போலாமா..

உல்லாச ஏரிக்கு ஒரு பயணம் போலாமா..

சித்தார்த் - உங்களுக்கு மட்டும் ஒரு சமாஜ்சாரம் சொல்றேன்.. ரொம்ப ரகசியம்.. கோவா மாதிரியே இங்கயும் சும்மா ஜாலியா இருக்கலாம்.. கடற்கரை முழுக்க சுத்தலாம். இந்த கடற்கரைக்கு பக்கத்துலேயே உல்லாச பொழுதுபோக்குக்கு ஏற்ற கபில் ஏரிஇருக்கு.

Bryce Edwards

 அந்த நாள் ஞாபகம் வந்ததே...

அந்த நாள் ஞாபகம் வந்ததே...

அதிதி - ஆமா சித்தார்த் உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விசயம் கேட்டுட்டே இருக்கேன். அன்னிக்கு என்ன மட்டும் தனியா விட்டுட்டு எங்கடா போன...?

சித்தார்த் - அது ஒன்னுமில்லமா.. அங்க நிறைய பாஃரினர்ஸ் வந்தாங்க இல்லியா.. அவங்ககளுக்கு கொஞ்ச நேரம் கெய்டா இருந்தேன்.. உன்ன வெயிட் பண்ண சொல்லிட்டுதான போனேன். அப்றம் என்ன?

அதிதி - அப்ப.. ஆணினு ஒருத்திகூட சுத்திட்டு இருந்தியே.. அது என்ன ஆச்சி..

சித்தார்த் - அதிதி.. அது ஆணி இல்ல... Annie.. அவதான் என்கிட்ட கெய்டா வரியானு கேட்டா... 50 டாலர் குடுத்தா தெரியுமா? என்ன ஒன்னு அவள எல்லா இடமும் சுத்திக் காட்டி அனுப்பறதுக்குள்ள சாயங்காலம் ஆய்டிச்சி.

Ian D. Keating

 மனம் மயக்கும் மாலை சூரிய மறைவு

மனம் மயக்கும் மாலை சூரிய மறைவு


அதிதி - அட.. அத மறந்துட்டோமே.. சன்செட்டுக்கு நாம போனாமே.. நினைவிருக்கா.. சிலக்கூர் பீச்.

சித்தார்த் - கரக்ட்டு... சிலக்கூர் பீச் அழகான கடற்கரை... இது வர்கலா நகரத்துக்கு ரெம்ப பக்கத்துலயே இருக்கு. இங்கதான் சன்செட் பாத்தோம். சுற்றுலாவுக்கு ஏத்த வசதிகள் இல்லனாலும் மாலை நேர நடைப்பயணத்துக்கு மிகவும் ஏற்ற கடற்கரை இது தெரியுமா?

அதிதி - ஆனா அவ்வளவு ஒன்னும் மோசம் இல்லடா.. நல்லாதான் இருந்துச்சி.. நா என் பிரண்ட்ஸுக்குலாம் சஜஸ்ட் பண்ணுவேன் இந்த இடத்த..

Isabel Cortés Úbeda

 தங்கத்தீவுக்கு போலாமா?

தங்கத்தீவுக்கு போலாமா?

அதிதி - சித்தார்த் அப்றம் நாம சில இடங்களுக்கு போக மறந்துட்டோம்...ல

சித்தார்த் - இல்ல அதிதி... போக மறக்கல... போக நேரம் இல்லைனு சொல்லு.. ஏன்னா அப்பவே இருட்டிருச்சி.... ஒரு பொண்ணும் பையனும் தனியா எப்படி இருட்டுனதுக்கு அப்றம் ஊர் சுத்துரது..

அதிதி - டேய் டேய்.. மொதல்ல அந்த பிளேஸ் பத்தி சொல்லு

சித்தார்த் - நாம பர்ஸ்ட் பாக்கப்போறது தங்கத்தீவு

அதிதி - டேய் அதுக்கு பேரு பொன்னும்துருத்து தீவு...

சித்தார்த் - எனிக்கு அறியாம் குட்டி.. அது தமிழில் அங்ஙனத்தன்னே...

அதிதி - ஆய்க்கோட்டே ஆய்க்கோட்டே.. நீ மேல பறா

சித்தார்த் - பொன்னும்துருத்து தீவு இல்லனா தங்கத்தீவுங்குற தீவுப்பகுதியும் தவறவிடக்கூடாத ஒரு அம்சம். இங்க 100 வருசம் பழமையான ஒரு சிவன் பார்வதி கோயில் இருக்கு.. அது மிகவும் சிறப்பானதுனு கூறப்படுது.

[email protected]

 கோட்டைக்கு போலாமா?

கோட்டைக்கு போலாமா?


அடுத்ததா நாம போகாம விட்ட இடம் அஞ்செங்கோ ஃபோர்ட் எனும் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். அப்றமா, வர்கலா சுரங்கப்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் போன்ற சில இடங்களுக்கும் போகல.. போகணும்.. அடுத்த முறை கண்டிப்பா போகணும்.

Emmanuel DYAN

 கதகளி

கதகளி

அதிதி - அப்றம் என்னவோ நீ பெரிய லார்டு லபக்கு தாஸ் கனக்கா.. டான்ஸ் கத்துக்கலாம்னு

சித்தார்த் - அதுவா.. அதான் கதகளி.. உனக்கு கதக்களி பிடிக்கும்னு சொன்ன.. அதுனால கத்துக்குறேன்னு சொன்னேன். இங்க
வர்கலா கதகளி மையம் அப்படிங்குற பேர்ல பாரம்பரிய கலை மையமும் பயணிகளை கவரும் ஒரு அம்சமா இருக்கு.
இங்க தினமும் பார்வையாளர்களுக்காக பிரத்யேக கதகளி நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுது.

Emmanuel DYAN

மோகினியாட்டம்

மோகினியாட்டம்

கதகளி நிகழ்ச்சிக்கான அலங்காரங்களையும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே பயணிகள் பார்த்து ரசிக்கும்படியாக இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. அப்றம் இதே இடத்துல மோகினியாட்டம் எனும் மற்றொரு நடனக்கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. வர்கலா நகரத்துக்குள்ளேயே இந்த கதகளி மையம் அமைந்துள்ளது.

Aleksandr Zykov

 போக்குவரத்து வசதிகள்

போக்குவரத்து வசதிகள்

திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ வடக்கிலும், கொல்லம் நகரத்திலிருந்து 49 கி.மீ தென்மேற்கிலும் இந்த வர்க்கலா நகரம் அமைந்துள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் வர்கலாவுக்கு இயக்கப்படுகின்றன.

Darryl Villaret

 ரயிலும் விமானமும்

ரயிலும் விமானமும்


வர்கலாவில் ரயில் நிலையமும் உள்ளது. அருகிலுள்ள திருவனந்தபுரத்தில் விமான நிலையமும் உள்ளது. பருவநிலை கேரளாவின் எல்லா கடற்கரை நகரங்களையும் போலவே வர்கலா மிதமான பருவநிலையை கொண்டுள்ளது. இருப்பினும் குளிர்காலமே இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமாக உள்ளது.

Emmanuel DYAN

Read more about: travel beach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X