வர்க்கலாவாக பல சுற்றுலா மற்றும் பயண ஆர்வலர்களின் பார்வையில் படாத ஒரு இடமாகவும் விளங்க; இருப்பினும், இதன் பிரசித்தியானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துவர, இதன் கண்கொள்ளா காட்சி அழகும், ஈர்ப்பும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்த தவறுவதில்லை.
கேரளாவின் மேற்கு பகுதியில் இவ்விடம் அமைந்திருக்க, கடற்கரை நகரமான இவ்விடம் பல பழமையான இந்திய கோவில்களுக்கு வீடாகவும் விளங்க, இவ்விடத்தை தக்ஷின் காஷி (தெற்கின் வாரணாசி) எனவும் அழைக்கப்படுகிறது. வர்க்கலாவில் பல ஆலயங்கள் காணப்பட, அவை விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க அதனை வைஷ்ணவிட்டே ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தை தவிர, மற்ற நினைவு சின்னங்களாக வரலாற்றுடன் இணைந்து இடங்கள் காணப்பட, இந்த நகரத்தை சூழ்ந்த உப்பங்கழியையும் நம்மால் பார்த்திட முடிய, மேற்கு பக்கத்தில் கடற்கரைகளும், தோட்டங்களும் காணப்படுகிறது. மேலும் இங்கே, பாறைகளும் அரபிக்கடலுக்கு அடுத்தடுத்து காணப்படுகிறது.
சிறப்பு, இப்போது நாம் இங்கே வருவதன் மூலம், இந்த நகரத்தில் காணப்படும் ஒரு சில பிரதான இடங்களை நம் மனதிற்கு அறிமுகப்படுத்தி கொள்ளலாமே.

பாபநாசம் கடற்கரை:
வர்க்கலா கடற்கரையின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது. பாபநாசம் என்பது இரு வார்த்தை ஒரு சேர காணப்பட, பாப் என்பதற்கு பாவமென்றும், நாசம் என்பதற்கு அழித்தல் எனவும் கழுவுதல் எனவும் பொருள்தர, ஆகையால், பாவத்தை கழுவும் இடமென்னும் அர்த்தம் கொண்டு இவ்விடம் விளங்குகிறது. இந்த கடற்கரை நீரை புனித நீராக கருதப்பட, இந்நீரானது மக்கள் செய்த பாவத்தை கழுவுகிறதாம். இத்தகைய ஆன்மீக ஈடுபாடுடன் இணைந்த இவ்விடம், ஆயுர்வேத சிகிச்சை மையத்தையும் கொண்டு விளங்குகிறது.
PC- Binoyjsdk

வர்க்கலா கடற்கரை:
நாம் விருப்பத்துடன் வெறுமனே அமர ஏற்ற இடமாக இவ்விடம் அமைய, சுற்றி ஒலி எழுப்ப காணப்படும் இவ்விடமான வர்க்கலா கடற்கரை, நாம் வந்து அமர வேண்டிய ஒரு இடமாகவும் அமைகிறது. கதிரவன் எழுச்சியையும், மறைவையும் நம்மால் இங்கே கண்டு களிக்க முடிந்திட, இவ்விடத்தை விட்டு புறப்பட்டு செல்ல மனதானது தயக்கம் கொள்கிறது.
PC- Lukas Vacovsky

கபில் ஏரி:
முகத்துவாரம் கொண்ட இவ்விடம், அரபிக்கடலுடன் இணைந்து காணப்பட, மாபெரும் காட்சியை தருவதோடு அழகிய வெள்ளை பரப்பை கொண்டு பார்ப்பவர் கண்களை வெகுவாக கவரவும் செய்கிறது. இக்காட்சியானதை பாலத்திலிருந்து நாம் பார்த்து ரசித்திட, அது நம் மனதில் காதலையும் சேர்த்து மலர செய்கிறது.
PC- Ikroos

ஜனர்தனசுவாமி ஆலயம்:
அனைத்து ஆலயங்களை காட்டிலும் மிகவும் பழமையான ஆலயமாக விளங்கும் ஜனர்தனசுவாமி ஆலயம், சுமார் 2000 வருடத்திற்கு பழமை வாய்ந்த ஆலயமெனவும் நமக்கு தெரியவர, வைஷ்ணவிட்டே ஆலயமானதும் பாபநாசம் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்து காணப்படுகிறது. இவ்விடமானது நகரத்தில் காணப்படும் மாபெரும் ஆன்மீக இடங்களுள் ஒன்றாக விளங்க, இந்த இடத்தில் எந்நேரமும் ஆன்மீகமானது நிறைந்து காணப்படுகிறது.
PC- Dev

வர்க்கலாவை நாம் அடைவது எப்படி?
அனைத்து முக்கிய நகரங்களுடன் சிறந்த முறையில் இணைந்து காணப்படும் வர்க்கலா, விமானம் மூலமாக பயணம் செய்ய திட்டமிட ஏதுவாக அமைகிறது. அத்துடன், திருவனந்தபுரம் விமான நிலையமானது வர்க்கலாவிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. எந்த ஒரு முக்கிய நகரத்திலிருந்தும் இரயில் மூலமாகவும் நாம் வர்க்கலா இரயில் நிலையத்தை அடைய முடியும்.

வர்க்கலாவை நாம் காண சிறந்த நேரங்கள்:
கண்கவர் இயற்கை படைப்பாற்றலை கொண்ட வர்க்கலாவை வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் நம்மால் பார்த்திட முடியும். இருப்பினும், வர்க்கலாவை காண ஆக சிறந்த காலமாக அக்டோபரிலிருந்து மார்ச் இறுதி வரை காணப்பட, வெப்ப நிலையும் உகந்ததாக, பிடித்தமானதாக அமைந்து காணப்படுகிறது.
அதனால், இந்த கலை நயம் நிறைந்த வர்க்கலாவென்னும் குறைவாக பார்க்கப்பட்ட இடத்தை கலை ஆர்வலர்களுடன் சேர்ந்து நாமும் சென்று பார்த்திடலாமே. உங்கள் பயண மூட்டைகளை கட்டிக்கொண்டு புறப்பட! அதன் பாதையானது இலக்கை நோக்கி உங்களை அடித்தட்டிற்கு அழைத்து செல்கிறது என்பதே உண்மை.



Click it and Unblock the Notifications






