» »வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - சென்னையில் இருந்து விடுமுறைக்கு பயணம் செய்ய ஒரு சிறந்த இடம்:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - சென்னையில் இருந்து விடுமுறைக்கு பயணம் செய்ய ஒரு சிறந்த இடம்:

Posted By: Gowtham Dhavamani

தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இன்றைய வேகமான உலகில், இயற்கைக்கு அச்சுறுத்தல் பொதுவானதாகிவிட்டது. மக்கள்தொகையிலிருந்து மாசு வரை, எல்லாமே மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய கவலைக்குறிய சூழ்நிலையை உருவாக்கிறது. சுற்றுச்சூழலின் பாதிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், நாம் இன்னமும் ஆபத்தில் இருந்து வெளியே வர இயலவில்லை.

பறவைகள் சரணாலயங்கள், பறவைகளை வேட்டையாடுதலில் இருந்தும் அவைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகில் பல, அழிந்து வரும் பறவை இனங்கள் மற்றும் அரிய பறவை வகைகளை பாதுகாக்கின்றது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பல தொன்மையான பறவைகளை காணலாம். பொதுவாக சாண்ட்விப்பர், சாம்பல் வேக்டைல், பிந்தில், கர்கானி மற்றும் இன்னும் பல பறவைகள் உள்ளது. இந்த பகுதியில் பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடும் உள்ளூர் மக்களை தடுக்க, இது 1858 இல் நிறுவப்பட்டது.

பறவைகள் உலகில் எப்பொழுதாவது இருந்துள்ளீர்களா? இல்லையென்றால், இங்து உங்களுக்கான கட்டுரை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றியும், சென்னையிலிருந்து இந்த அற்புதமான இடத்தை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல சரியான நேரம்:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல சரியான நேரம்:


நீங்கள் புலம்பெயர்ந்த பறவைகளை பார்ப்பதற்க்கும், அவர்கள் கூடு கட்டுவதையும் விளையாடுவதையும் காண, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல சரியான நேரம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். இந்த பயணத்தின் போது, சரணாலயத்தின் அழகையும் அதன் பசுமையையும், வண்ணமயமான பறவைகளையும் காணலாம். காலநிலை சூழ்நிலைகள் சாதகமானதாக இருப்பதால், ஆயிரக்கணக்கான பறவைகள் சுற்றி வளைத்து சத்தமிட்டு, அழகாக காட்சியளிக்கும்.

PC - KARTY JazZ

செல்வது எவ்வாறு:

செல்வது எவ்வாறு:

விமானம் வழி:

நீங்கள் சென்னைக்கு விமான வழியாக பயணித்தால் அப்போது விமான நிலையத்திலிருந்து வேடந்தாங்கலிற்கு ஒரு வாடகை வண்ட மூலம் வரலாம். பறவைகள் சரணாலயத்திலிருந்து 66 கி.மீ. தொலைவில் சென்னை விமான நிலையம் உள்ளது.

ரயில் பயணம்:

சென்னை மற்றும் வேடந்தாங்கல் இடையே நேரடி ரயில்கள் இல்லை. இருப்பினும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயிலையும், அங்கிருந்து வேடந்தாங்கலுக்கு ஒரு டாக்சியிலும் செல்லலாம்.

சாலை வழி பயணம்:

சென்னையிலிருந்து 87 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சாலை வழியாக எளிதில் சென்றடையலாம்.

சென்னையிலிருந்து வேடந்தாங்கலுக்கு நேரடியாக ஒரு டாக்சி வாடகைக்கு அல்லது பேருந்தில் வந்து அடையலாம்.

நீங்கள் சென்னையிலிருந்து வேடந்தாங்கலிற்கு சொந்தமாக வாகனம் மூலம் பயணிக்கிறீர்கள் என்றால், மூன்று வழிகள் உள்ளன.

வழி 1: மதுரவாயில் - வண்டலூர் - வேடந்தாங்கல்

வழி 2: மதுரவாயில் - ஸ்ரீபெரம்பதூர் - வேடந்தாங்கல்

வழி 3: அடையார் - கோவளம் - வேடந்தாங்கல்

இருப்பினும், வேகமான மற்றும் மிகவும் வசதியானது வழி 1; இந்த வழியில், நீங்கள் குறைந்தபட்ச நேரத்திற்குள் உங்கள் இலக்கை அடையலாம் மற்றும் கொலவாய் ஏரியின் அழகை ரசிக்க முடியும், வண்டலூர் மிருகக்காட்சி சாலையை பார்வை இடமுடியும், மதுரவாயிலில் உள்ள உள்ளூர் உணவை ருசிக்க முடியும்.

கொலவாய் ஏரி:

கொலவாய் ஏரி:

கோடை காலத்தில், இந்த அழகிய ஏரி ஒரு நீர்த்தேக்கமாக, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு நீர் வழங்கவும் செய்கிறது. நீங்கள் கொலவாய் ஏரியில் சில மணிநேரம் இருந்து அங்கு சிறிய படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப் பதையும், நீரின் மேற்புறத்தில் விளையாடும் பல பறவையின் அழகையும் ரசித்து அனுபவிக்க முடியும்.

PC- Sarath Kuchi

வண்டலூர் பூங்கா:

வண்டலூர் பூங்கா:

இந்தியாவின் முதல் பொது மிருகக்காட்சி பூங்கா, இது அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என அறியப்படுகிறது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா எனும் பெருமையை கொண்டுள்ளது. 1265 ஏக்கர் பரப்பளவில், 1500 காட்டு வகைகளை உள்ளடக்கிய இதில் , 2553 வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. நீங்கள் பல்வேறு வகை விலங்குகள் மற்றும் தாவரங்கள் பார்க்க விரும்பினால், கட்டாயம் இங்கு வர வேண்டும்.

PC- Vasanth Mohan

 வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அடைந்தவுடன், உங்கள் இறக்கைகளை விரித்து, அற்புதமான பறவையின் வண்ணங்களில் முழுமையாக மூழ்கலாம். ஒவ்வொரு பறவை விரும்பிகளுக்கும் இது ஒரு சொர்க்கமாகவும் ஒவ்வொரு சுற்றுலா ஆர்வலர்களுக்கும் காணவேண்டிய இடமாகும். புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடமாகும், நீங்கள் உங்கள் கேமரா மூலம் பறவைகளின் புகைப்படம் மட்டுமல்லாது அருமையான நினைவுகளையும் பெறுவீர்கள்.

நீங்கள் இங்கு சுற்றிப்பார்த்தவாறு செய்ய எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. உங்கள் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடனான தரமான நேரத்தை செலவிடலாம். புலம்பெயர்ந்த பறவைகள் அழகை பார்த்து மகிழ்வதோடு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அமைதியான சூழலில் ஒவ்வொரு கணமும் மிக வேகமாக செல்வதை உணருவீர்கள்.

PC- Vinoth Chandar

பறவை நோக்கல்:

பறவை நோக்கல்:

சந்தேகத்திற்கு இடமின்றி, வேடந்தாங்கலுக்கு வருபவர்களில் பெரும்பாலான மக்கள் பறவை நோக்கலை அனுபவிக்கின்றனர். நீங்கள் இங்கு ஆயிரக்கணக்கான பறவைகளை பார்க்க முடியும், டெர்ன்ஸ்களிலிருந்து ஸ்பூன்களைப் போன்ற புலம்பெயர்ந்த பறவைகள் வரை. பங்களாதேஷ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த பறவைகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.

PC- Johnjeevinth

புகைப்படக்கலை :

புகைப்படக்கலை :

சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகள் மற்றும் வண்ணமயமான உலக அதிசயங்கள் அல்லது இயற்கையை, புகைப்படத்தின் மூலம் கைப்பற்ற விரும்பும் எவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் ஆகும். கேமரா மூலம் ஆராய நிறைய உள்ளது. நீங்கள் இந்த சரணாலயத்தில் இருந்தால், சுற்றியுள்ள ஒவ்வொரு காட்சியையும் கேமரா மூலம் கைப்பற்ற உங்கள் மனது தவிப்பதை உங்களால் தவிர்க்க இயலாது

PC- Partha Siddharth

சுற்றுலா:

சுற்றுலா:

அமைதியான சூழலுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிறைய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. பல வகையான வசீகரமான பறவைகள் கொண்ட இந்த சரணாலயத்தை வார இறுதி நாட்களில் குடும்பங்கள் வந்து கண்டு மகிழ்ச்சி அடைவதை காணமுடிகிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வார இறுதி விடுமுறை நாட்களை சந்தோஷமாக செலவிட அந்த அனுபவத்தை உணர வேண்டுமா? விரைவில் திட்டம் தீட்டுங்கள்.

PC- Karthik Easvur

Read more about: travel chennai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்