Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா இருக்க ஆசையா உங்களுக்கு ?

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா இருக்க ஆசையா உங்களுக்கு ?

தீபாவளி பண்டிகையில் ஆரம்பித்து தண்ணியிலேயே மிதக்கிறது தமிழகம். வெறும் மூன்றே நாளில் 400 கோடிக்கு குடித்து நம் குடிமகன்கள் சரித்திர சாதனை புரிந்த அதே சமயத்தில் விடாது கொட்டித்தீர்த்த மழையினால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பக்கத்து வீட்டுக்கே படகில் தான் போக முடியும் என்கிற அளவுக்கு தண்ணீர் நிற்கிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிவதால் பசுமை திரும்ப ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இப்போதே பலவகையான வெளிநாட்டு பறவைகள் வர ஆம்பித்திருக்கின்றன. வெள்ளம் பெருக்கெடுத்தோடும் இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக இருக்க ஆசையா உங்களுக்கு?. வாருங்கள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்றுவரலாம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

செல்பேசியில் டுவிட்டர் சிட்டுக்குருவியின் சத்தம் கேட்கும் இந்தகாலத்தில் வானத்தில் பறக்கும் காக்கை குருவிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

அப்படியிருக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க காலத்தில் உலகெங்கும் இருந்து 40,000 பறவைகள், அதில் 26 மிகவும் அறிய வகை பறவைகள் வருகை தருகின்றன.

Vinoth Chandar

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்களில் முட்டையிடுவதற்கு ஏற்ற தட்பவெட்பம் நிலவுவதும், இங்கிருக்கும் செடிகள் மற்றும் மரங்கள் முட்டைகளை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைக்க எதுவாக இருப்பதுமே பறவைகள் இங்கே வரக்காரணம் என பறவையியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Thangaraj Kumaravel

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

1798ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சரணாலயம் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளின் தேனிலவு ஸ்தலமாக இருக்கிறது. உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயமாக திகழும் வேடந்தாங்களுக்கு வரும் பறவைகளை பாதுக்காக்க இந்த பகுதியில் வாழும் கிராம மக்களும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

Ashwin Kumar

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கலை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் இங்கு வரும் பறவைகளுக்கு இடையுறாக இருக்கும் என்பதாலேயே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதில்லை.

அதே போன்று காற்று மாசுபடும் என்பதால் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் போகி பண்டிகையன்று பழைய பொருட்கள் எதனையும் எரிப்பதும் இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Vinoth Chandar

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

அக்டோபர் மாத மத்தியில் வேடந்தாங்கல் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் இறுதியில் தான் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன. குறிப்பாக ஜனவரி மாதத்தின் போது 40,000 முதல் 50,000 பறவைகள் இந்த சரணாலயத்திற்கு வருகின்றன.

Pandiyan V

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

திருநெல்வேலி அருகில் உள்ள கூந்தங்குளம் சரணாலயத்தை விட வேடந்தாங்கல் பரப்பளவில் சிறியது என்றாலும் கூந்தங்குளத்தை காட்டிலும் வேடந்தாங்கலுக்கே அதிக எண்ணிக்கையிலான பறவைகள் வருகின்றன.

Vinoth Chandar

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

ரஷ்யா, மங்கோலியா, ஆஸ்திரேலியா, சீனா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான பறவையினங்கள் இந்த சரணாலயத்திற்கு வந்தாலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பறவையாக இருப்பது 'பூநாரை' எனப்படும் பிளமேங்கோ பறவைகள் தான்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

அதேபோல 'அன்றில்' பறவை என்றும் 'அரிவாள் மூக்கன்' என்றும் அறியப்படும் பறவையினம் நீண்ட மூக்குடன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதுதவிர ஊசிவால் வாத்து, நீர்க் கோழி, புள்ளி மூக்கு வாத்து, மீன் கொத்தி, கொண்டலாத்தி (அ) மண் கொத்தி, மரங்கொத்தி, ஆள்காட்டி,கருஞ்சிட்டு, கருப்பு வெள்ளை சிட்டு, கதிர்க் குருவி, வால் காக்கை, சின்னான், குயில், குக்குறுவான், சாம்பல் நாரை, குருட்டுக் கொக்கு, இராக் கொக்கு ஆகிய பறவைகளையும் இங்கு காண முடியும்.

Shravantamaskar

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கலுக்கு வரும் புலம்பெயர் பறவைகளாக கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி வாத்து, தட்டவாயன் எனப்படும் ஷோவெல்லர், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான் எனப்படும் உப்புக்கொத்தி போன்றவை அறியப்படுகின்றன.

Lip Kee Yap

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இங்கு வரும் பறவைகளினால் வேடந்தாங்கலை சுற்றியுள்ள பகுதிகளில் விவாசாயம் பெருகியுள்ளதாம். எப்படி என கேட்கிறீர்களா? வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளின் எச்சங்கள் வேடந்தாங்கல் ஏரியில் கலப்பதால் அவை செறிவுள்ளதாக மாறி விவசாய நிலங்களுக்கு பாயும் போது பயிர்கள் நன்கு வளர உதவி செய்கிறதாம். இதனாலேயே இந்த பறவைகள் மீது கிராம மக்களுக்கு தனி பாசம்.

Pandiyan V

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நெடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.இங்குள்ள நீர்க்கருவை, சமுத்திரப் பாலை போன்ற மரங்களில் பறவைகள் அதிகமாக வசிக்கின்றன. அதே போன்ற இங்குள்ள ஏரியில் பறவைகளின் உணவுக்காக அதிக அளவில் மீன்களும் வளர்க்கப்படுகின்றன.

Manvendra Bhangui

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தால் உங்களுக்கு இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது. அதிகாலை நேரத்திலும் இறை தேடி முடித்து தங்கள் கூட்டுக்கு திரும்பும் மாலை நேரத்திலும் அற்புதமான காட்சிகளை குவியத்தின் உதவியுடன் சிறை பிடிக்கலாம்.

Thangaraj Kumaravel

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் வேடந்தாங்கல் சரணாலயத்தை சாலை மூலமாக அடைய NH45 மூலம் பயணிக்க வேண்டும். அதோடு சென்னையிலிருந்து வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு குளிர்சாதன மற்றும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக 100 முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மஹாபலிபுரம் போன்ற இடங்களிலிருந்தும் பேருந்து மூலமாக சுலபமாக வேடந்தாங்கல் சரணாலயத்தை அடைந்து விட முடியும்.

Shannon Dosemagen

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், இதனருகில் இருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

danfex19

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X