Search
  • Follow NativePlanet
Share
» »இங்கெல்லாம் நீங்க கண்டிப்பாக போகணும்.. ஆனால் தனியா போக முடியாது.. டாப் 10 டேஞ்சரஸ் இடங்கள்

இங்கெல்லாம் நீங்க கண்டிப்பாக போகணும்.. ஆனால் தனியா போக முடியாது.. டாப் 10 டேஞ்சரஸ் இடங்கள்

சுற்றிப் பார்க்க இந்த உலகில் எத்தனையோ இடங்கள் உள்ளன. அவற்றில் சில இடங்களுக்கு நாம் தனியாக போகலாம்.. பல இடங்களுக்கு ஜோடியாக போகலாம்.. அதேபோல சில இடங்களுக்கு குடும்பத்தோடும் போகலாம்.. ஆனால் ஒரு சில இடங்கள் உள்ளன. அங்கு மட்டும் நாம் தனியாக போகவே கூடாது.. காரணம் அந்த அளவுக்கு ரிஸ்க்கான, டேஞ்சரஸான இடங்கள் அவை. ஆனாலும் அங்கும் நாம் போக வேண்டும்.. அப்படிப் போக வேண்டிய பத்து இடங்களைத்தான் இங்கு பார்க்கலாம்.

Very Dangerous places of the World which we cannot visit alone

1. டானகில் டிப்ரஷன்

எத்தியோப்பியாவில் உள்ளது இந்த இடம். உலகிலேயே மிகவும் சூடான இடம் என்று அறியப்படுவது இது. இந்த இடத்தைப் பார்க்கவே படு பயங்கரமான லுக்கில் இருக்கும். கிட்டத்தட்ட வேற்று கிரகம் போல காணப்படும். இந்த இடம் முழுக்க முழுக்க எரிமலைக் குழம்புதான் அலங்கரிக்கும். வடிவேலு ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணி வெடி தான். ஆம். இங்கு எங்கு பார்த்தாலும் லாவா குழம்பு, அபாயகரமான விஷ வாயுக்கள், அமிலக் குளங்கள் என ரத்த பூமியாக இது காட்சி தருகிறது. சரியான கைடு உதவி இல்லாமல் இந்த இடத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வர முடியாது. கட்டாயம் போக வேண்டிய இடம்தான். ஆனால் துணைக்கு சரியான கைடுடன் மட்டுமே போக வேண்டிய இடமும் கூட.

2. வடக்கு சென்டினல் தீவு

உலகின் இன்னொரு அபாயகரமான சுற்றுலா இடம். இது இந்தியாவுக்குச் சொந்தமானது. சென்டினல் என்ற பழங்குடியினர் வசிக்கும் இடம் இது. தற்போதைய நவீன மனித உலகின் தொடர்பே இல்லாத உலகின் கடைசி இனக் குழுக்களில் இதுவும் ஒன்று. இதற்கு முக்கியக் காரணம் இவர்கள் வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அவர்களை ஏற்கவும் மறுக்கிறார்கள். இதனால் தான் யாராலும் இந்தப் பகுதிக்குள் போக முடிவதில்லை. இவர்களின் வாழ்க்கை முறை, இன்றைய நிலை குறித்து பெரிதாக எதுவும் தெரிவதில்லை. யாருமே இந்த இடத்திற்குள் போய் விட்டு வந்து விட முடியாது. மிகவும் அபாயகரமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

3. டெத் வேலி

அமெரிக்காவின் டெத் வேலி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. வட அமெரிக்காவிலேயே மிக மிக அனல் தகிக்கும் பாலைவனம் தான் இது. இங்கு சர்வ சாதாரணமாக 134 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும். நம்ம ஊரில் 105 டிகிரி வெயிலுக்கே நாமெல்லாம் வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்தோம். இங்கு 134 டிகிரி பாரன்ஹீட் என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதனால்தான் இந்த இடத்திற்கு டெத் வேலி என்று செல்லப் பெயரிட்டுள்ளனர். இந்த இடத்தையும் பலர் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். ஆனால் தனியாக யாரும் இங்கு வர முடியாது. வந்தால் அவ்வளவுதான்.. எங்காவது சிக்கிக் கொண்டால் அதோ கதிதான்.

4. ஆயோகிகஹாரா

ஜப்பான் ஒரு அழகான நாடு என்று எல்லோருக்கும் தெரியும். அதே சமயம், பூகம்ப பூமியும் கூட. அப்படிப்பட்ட நாட்டில் ஒரு காடு உள்ளது. ஆயோகிகஹாரா என்று அதற்குப் பெயர். பூஜி எரி மலைக்கு கீழே இந்த காடு உள்ளது. மிக மிக பயங்கரமான வனப் பகுதி இது. இங்கு யாராவது தொலைந்து போய் விட்டால் அவ்வளவுதான். கண்டுபிடிப்பது மிக மிக கஷ்டம். உலகின் அதி பயங்கரமான இடங்களில் இதுவும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

5. ஸ்னேக் தீவு

பிரேசில் நாட்டின் ஸ்னேக் தீவு இன்னொரு அபாயகரமான பகுதி. பெயருக்கேற்றார் போல இந்தத் தீவானது பாம்புகளுக்குப் பெயர் போனது. பாம்பு என்றால் நம்ம ஊர் சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு கிடையாது.. மிக மிக கொடிய விஷம் கொண்ட அதி பயங்கரமான பாம்புகள் நிறைந்த பகுதி இது. தங்க ஈட்டித் தலை பாம்பு இந்த தீவின் மிகப் பெரிய பாம்பு வகையாகும். ஆயிரக்கணக்கில் இந்தத் தீவில் இந்த வகை பாம்புகள் உள்ளன. உலகின் மிக மிக அபாயகரமான பாம்பு வகைகளில் இதுவும் ஒன்றாகும். மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் இந்தப் பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி கிடையாது. பிரேசில் அரசு இதற்குத் தடை விதித்து வைத்துள்ளது.

6. லேக் நாட்ரான்

டான்ஸானியா நாட்டின் லேக் நாட்ரான் என்ற ஏரி பார்க்கவே ரத்தக் கோலத்தில் காணப்படும். ரத்த ஏரி போல இது காணப்படும். இதற்குக் காரணம் இந்த ஏரி நீரில் அடங்கியுள்ள அதி அடர் உப்புத்தன்மைதான். அதாவது இந்த ஏரியின் பிஎச் அளவானது 10.5 என்ற அளவில் உள்ளது. இந்த ஏரியின் மிக மோசமான அபாயகரமான வேதித் தன்மை காரணமாக நமது உடம்பில் இந்தத் தண்ணீர் பட்டால் தோல் பொசுங்கிப் போய் விடும். விலங்குகள் ஏதேனும் இதில் சிக்கிக் கொண்டால் கிட்டத்தட்ட மம்மி சிலை போல மாறிப் போய் விடும். ரொம்பவும் டேஞ்சரான ஏரி இது.

7. டேரியன் கேப்

பூமியின் மிகவும் அபாயகரமான பகுதிகளில் இந்த டேரியன் கேப் என்ற காடும் ஒன்று. மோசமான காட்டு விலங்குகள் நிறைந்த வனப் பகுதி இது. அதேபோல ஏராளமான போராளிக் குழுக்களும் இந்த காட்டுப் பகுதியில் உள்ளனர். போதைக் கடத்தல்காரர்களும் இதில் பதுங்கியுள்ளனர். இந்தப் பகுதிக்குள் சென்றவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. தனியாகப் போன யாரும் திரும்பி வந்ததாக வரலாறே கிடையாதாம்.

8. பார்லான் தீவு

அமெரிக்காவில் பார்லான் தீவு என்ற தீவு உள்ளது. கலிபோர்னியா கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள தீவு இது. தீவு என்றாலே கூடவே ஆபத்தும் தானே இருக்கும். ஆம், இந்தத் தீவின் கடல் பகுதியில் படு பயங்கரமான சுறாக்கள் உள்ளன. அதாவது அபாயகரமான வெள்ளை சுறாக்கள் இந்தப் பகுதியில் அதிகம். இந்த தீவுப் பகுதியில் தான் முன்பு அணுக் கழிவுகளையும் கொட்டி புதைத்து வந்தனர். ஆக இந்தத் தீவு முற்றிலும் மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறிப் போயுள்ளது.

9. ஹூவா பிளாங்க் வாக்

சீனாவில் உள்ள ஹூவா பிளாங்க் வாக் மலைப் பகுதி இன்னொரு அபாயகரமான பகுதியாகும். செங்குத்தான மலைச் சிகரங்கள் நிறைந்த இந்த மலைப் பகுதியில் மரத்தால் ஆன நடை பாதை உள்ளது. இந்த பாதை வழியாக நடந்து செல்வது மிக மிக ரிஸ்க்கானது. உயிரைப் பணயம் வைத்துத்தான் போக முடியும். தனியாக செல்வது மிக மிக அபாயகரமானது. சரியான உதவியுடன் செல்வது சிறந்தது. கால் சறுக்கினால் கீழே விழ வேண்டியதுதான். எலும்பு கூட மிஞ்சாது.

10. பாய்சன் கார்டன்

இங்கிலாந்தில் உள்ள பாய்சன் கார்டன் என்று அழைக்கப்படுவது ஒரு அழகான தோட்டம். தோட்டம் என்றாலே அழகு தானே அதில் என்ன ஆபத்து என்று உங்களுக்குத் தோணலாம்.. ஆனால் இங்குள்ள தோட்டத்தில் உள்ள செடிகள் எல்லாமே விஷச்செடிகள்தான். நூற்றுக்கணக்கான விஷச் செடிகள் நிறைந்த தோட்டம் இது. அதிலும் சில செடிகளைத் தொட்டாலே உயிர் போய் விடும். சில செடிகளை கிட்டே போய் முகர்ந்து பார்த்தாலே மோட்சம்தான். அந்த அளவுக்கு டேஞ்சரான தோட்டம் இது.

More News

Read more about: tourist
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+