» »2500 ஆண்டு பழமையான காஞ்சி காமகோடி மடத்துல அப்படி என்னதான் நடக்குது தெரியுமா?

2500 ஆண்டு பழமையான காஞ்சி காமகோடி மடத்துல அப்படி என்னதான் நடக்குது தெரியுமா?

Written By: Udhaya

காஞ்சி காமகோடி மடம், ஆதி சங்கரரால், தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் நிறுவப்பட்டது. இந்த மடம் இந்துக்களால் மிகவும் போற்றப்படும் ஒரு ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. மடத்தைச் சேர்ந்த ஐந்து பஞ்ச பூத ஸ்தலங்களுள் காஞ்சி மடமும் ஒன்று. இம்மடம், உண்மையில் எப்போது கட்டப்பட்டது என்று யார்க்கும் தெரியாது; ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கிடைத்த ஆதாரத்தின் படி, கடந்த 2500 ஆன்டுகளுக்கும் மேலாக, இம்மடம் இங்கு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் நிறைய தகவல்களை பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

எங்குள்ளது?

எங்குள்ளது?


சென்னையிலிருந்து 2 மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த மடம். திருப்பெரும்புதூர் வழியாக 74கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடத்தை எளிதாக அடையமுடியும்.

பழமை

பழமை


2500 ஆன்டுகளுக்கும் மேலாக, இம்மடம் இங்கு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்து பிறப்புக்கு முன்னரே 482ம் ஆண்டுகளிலேயே இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தகவல், மடத்தின் சுவர்களில் காணப்படும் சுவரோவியங்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் படியும், நிரூபிக்கப்பட்டுள்ளது. சில வரலாற்று ஆர்வலர்கள், இம்மடம் சுமார் மூன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறி வருகின்றனர். ஆனால், இக்கூற்றை நிரூபிக்கக்கூடிய வலுவான ஆதாரங்கள் இல்லை.

kamakoti

கும்பகோணம் - காஞ்சிபுரம்

கும்பகோணம் - காஞ்சிபுரம்


முதலில் இம்மடம் கும்பகோணத்தில் தான் இருந்துள்ளது. பின், ஹைதர் அலியின் படைகள் அங்கே வந்த போது, காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று, இம்மடம் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும், ஆதி சங்கரர் மேல் பக்தி கொண்ட ஆயிரக்கணக்கானோர், அமைதியையும் நிம்மதியையும் நாடி, இங்கு வருகை தருகின்றனர்.


kamakoti

வைகுந்தப் பெருமாள் கோயில்

வைகுந்தப் பெருமாள் கோயில்

வைகுந்தப் பெருமாள் கோயில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது. மூலஸ்தானத்தில், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளோடு, உட்கார்ந்த, நின்ற மற்றும் படுத்த கோலங்களில், விஷ்ணுவின் மிகப் பெரும் திருவுருவச் சிலைகளைக் காணலாம்.

Ssriram mt

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


வருடந்தோறும் விஷ்ணுவின் அருளை வேண்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இக்கோயிலின் முக்கியமான கவர்ந்திழுக்கும் அம்சமான, "ஆயிரங்கால் மண்டபத்தை" காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இங்கு வருகின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் வேவ்வேறு சிலைகள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது. கோயிலின் நடைபாதைகள் யாவற்றையும், சிங்கத்தின் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. இக்கோயிலின் கட்டுமானம், இந்து மதச் சிறப்பு மட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்கதுவும் ஆகும். இக்கோயிலின் சுவர்களில், சாளுக்கியருக்கும், பல்லவர்களுக்கும் நடைபெற்ற போரினைப் பற்றிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன.

Ssriram mt

 காஞ்சி குடில்

காஞ்சி குடில்

மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, "காஞ்சி குடில்" என்று பெயரிட்டுள்ளனர். எனினும், இது மட்டுமே அதன் கவர்ந்திழுக்கும் அம்சமன்று. காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்கள், இவ்வூரின் பெருமையை உணர்ந்து கொள்வதோடல்லாமல், இந்நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றையும் அறிந்து கொள்ளும் வகையிலும் இது உள்ளது. தட்டுமுட்டுச் சாமான்கள் முதல் வழங்கப்படும் உணவு வரை அனைத்தும் இவ்வூரின் கடந்த காலச் சிறப்புகளை விருந்தினர்க்கு எடுத்துக் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
commons.wikimedia.org

 பழமையிலும் புதுமை

பழமையிலும் புதுமை

இவ்விடுதி, மூதாதையர் வழி வந்த வீடு தான் என்றாலும், இது, இன்றைக்கு உள்ள அனைத்து நவீன வசதிகளுடன், தங்கும் விருந்தினர்களுக்கு எவ்வித சிரமும் இன்றி, சகல வசதிகளோடும் திகழ்கிறது. இங்கு, மாலை நேரங்களில், கடந்த காலத்தில் இங்கு கோலோச்சிய கலைகளை, விருந்தினர்களுக்கு விளக்கும் பொருட்டு, உருவாக்கப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பயண நினைவாக பொருள்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளோர், உள்ளூரில் தயாரான அழகிய கைவினைப் பொருட்களை, காஞ்சி குடிலில் வாங்கலாம்.

Destination8infinity

தேவராஜஸ்வாமி கோயில்

தேவராஜஸ்வாமி கோயில்

தேவராஜஸ்வாமி கோயில், பழங்கால சிற்பம் மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இக்கோயில் மஹா விஷ்ணுவுக்காக, விஜயநகரத்து மன்னர்களால் கட்டப்பட்டது. இது, காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சிறந்த சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள், அக்காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பம் மற்றும் தொழில்நுட்பத்தினை நமக்கு எடுத்துக்கூறுவதாக உள்ளது. இத்தூண்கள் அனைத்தும், கையால் செதுக்கப்பட்டு, இந்துக் கடவுள்களின் பல்வேறு வடிவகளைத் தாங்கி நிற்கின்றன.

Ssriram mt

மஹா விஷ்ணு

மஹா விஷ்ணு


இக்கோயில் வளாகத்தில் உள்ள மிகப் பெரிய திருமண மண்டபம், மஹா விஷ்ணுவுக்கும், லக்ஷ்மி தேவிக்கும், தேவலோகத்தில் நடந்த திருக்கல்யாணத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பு யாதெனில், ஒரு கல்லில் செதுக்கப்பட்டுள்ள் மிகப் பெரிய சங்கிலி ஆகும். சுமார் 10 அடி கொண்ட மஹா விஷ்ணுவின் திருவுருவச் சிலை ஒன்று, கோயிலினுள்ளே கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்தில், தண்ணீரில் மூழ்கிய வண்ணம் காணப்படுகிறது. நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே, பக்தர்கள் இச்சிலையை காணும் வகையில், இக்கோயில் குளத்தின் தண்ணீரை மொத்தமாக வற்றச் செய்கின்றனர். சுமார் 48 நாட்களுக்குப் பின்னரே இச்சிலை மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க வைக்கப்படும்.

Suraj Belbase

 வரதராஜ பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில் "ஹஸ்தகிரி கோயில்" என்றும் "அட்டியூரான்" என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட இக்கோயில், பன்னிரெண்டு ஆழ்வார்கள் வருகை தந்த 108 கோயில்களுள் ஒன்று என்ற பெருமை வாய்ந்தது. மற்ற விஷ்ணு கோயில்களைப் போலவே, இக்கோயிலும், காஞ்சிபுரத்தின் விஷ்ணு காஞ்சியில் அமையப்பெற்றுள்ளது. இந்து பண்டிதரான ராமானுஜர், தன் வாழ்வின் ஒரு பகுதியில் இங்கு வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. உள்ளூர்வாசிகள், இக்கோயிலோடு, ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலையும் சேர்த்து, மூவரும் வாசம் செய்யும் தலம் என்ற அர்த்தம் விளங்குமாறு, "மும்மூர்த்திவாசம்" என்று அழைக்கின்றனர்.

Ssriram mt -

 மஹா விஷ்ணுவின் பக்தர்கள்

மஹா விஷ்ணுவின் பக்தர்கள்


பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்பெறும் இக்கோயில், மஹா விஷ்ணுவின் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும். வருடத்திற்கொரு முறை இங்கு நடைபெறும் திருவிழாவால், இக்கோயில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடயே மிகவும் பிரபலமாக உள்ளது. இத்திருவிழாவின் ஆரம்ப அறிகுறியாக, பெரிய குடைகளைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில், இங்கு "ப்ரம்மோத்சவம்" என்னும் மற்றொரு பெரிய விழாவும் நடைபெறுகின்றது.


kamakoti

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

இந்துக் கடவுளான சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயில், வருடந்தோறும் சிவபெருமானின் அருளை வேண்டி, இங்கு வருகை தரும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோயில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்து, இந்தியாவின் இத்தகைய உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

Ssriram mt

Read more about: travel, temple