» »பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

Posted By: Udhaya

சித்தர்கள்... இந்த உலகின் அதி அற்புத ஆற்றல்களைப் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது. அப்படி என்றால் சூப்பர்மேன், சக்திமான் போல மாஜிக் செய்பவர் என்று அர்த்தமில்லை.

ஆனால் நாம் நம்பாத சில விசயங்களைக் கூட அதிஅற்புதமாக செய்துள்ளனர் சித்தர்கள். மருத்துவம், கல்வி, வானியல், கண்டுபிடிப்பு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சிலவற்றை நம் மனம் ஏற்றுக்கொள்ளவே செய்யாது. அதுபோன்ற சித்தர்களின் அற்புதங்களில் ஒன்றுதான் பர்வதமலை மர்மங்கள்.

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு 'பர்வத மலை' என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.

பர்வதமலை மர்மங்கள் குறித்து நாம் இங்கு பார்க்கலாம்

இந்த வாரம் அதிகம்பேர் படித்த கட்டுரைகள் கீழே

ஆதி காலடி

ஆதி காலடி

சிவபெருமானின் காலடி இங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதை நேரில் கண்டால் புண்ணியம் என்று மலையேறி பார்த்தவர்கள் கூறுகின்றனர். மலையில் அந்த பக்கத்தில் சிவன் காலடி என்று கூறப்படும் காலடித்தடம் ஒன்று உள்ளது.

அடேங்கப்பா! அவ்ளோவா?

அடேங்கப்பா! அவ்ளோவா?ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.

Pc: Arulghsr

மூலிகைகள்

மூலிகைகள்

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. சாவே இல்லாத வரும் தரும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.


Pc: Arulghsr

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

சித்தர்களின் வருகை

சித்தர்களின் வருகை


இப்போதும்கூட தினமும் சூட்சுமமாக சித்தர்கள் வந்து செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. சித்தர்களை பார்க்கவேண்டுமென்றால் இரவு நேரத்தில் மலையேறவேண்டுமாம். ஆனால் இந்த மலையில் ஏறுவது அவ்வளவு எளிதல்ல.

Pc:Arulghsr

தோன்றி மறையும் சித்தர்கள்

தோன்றி மறையும் சித்தர்கள்


இங்கு வரும் மக்கள், இரவு நேரங்களில் சங்கொலி சத்தம் கேட்பதாக கூறுகின்றனர். சந்தனமும், ஜவ்வாது வாசனையும் வீசுவதாக தெரிவிக்கின்றனர் பலர்.

திருவிதாங்கூர் ரகசியங்களை வெளிக்காட்டும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

பிரணவ ஒலி

பிரணவ ஒலி


'ஓம்' எனும் பிரணவ ஒலி கேட்பதாக இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஓம் என்ற ஒலி எழுப்பப்படுமென்றால் அந்த இடம் யோகம் செய்ய உகந்த இடமாகும். அது மட்டுமின்றி கோயில் கருவறையை போன்ற இடம் இதுவாகும். மனதில் குறையுடன் வந்தால் மன அமைதி வந்து வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பிரம்மாண்டம்....

மிக மிக கடினம்?

மிக மிக கடினம்?

ஏறுவதற்கு மிகவும் சிரமமான இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். அப்படி நீங்கள் ஏறிவிட்டீர்களாயின் உங்கள் மனதில் நினைத்த காரியம் நடக்குமாம்.

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

Pc: Arulghsr

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.

அட... கேரளாவில் இப்படி ஒரு இடமா... நம்ம பாத்ததே இல்லையே!


மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் இப்ப எப்டி இருக்கு தெரியுமா?  

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?  

நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க  


ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு? 

பஞ்ச பாண்டவர்களின் குகை... கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்!Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்