Search
  • Follow NativePlanet
Share
» »2000 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்துருக்கு பாருங்க!

2000 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்துருக்கு பாருங்க!

By Udhaya

தமிழகம் தற்போது எப்படி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே சுற்றுலாவுக்கான சிறப்புகளும், காரணிகளும் நிறைந்தே காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை கோயில்கள். அவை பெரும்பாலும் பாண்டியர், பல்லவர், சோழர் காலத்தியவையாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே ஆளத் தொடங்கிய சேர சோழ பாண்டியர்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எழுந்தும் வீழ்ந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தங்கள் வசம் வைத்திருந்தனர். அப்படி தற்போதைய தமிழகத்தின் எந்தெந்த பகுதிகள் எந்தெந்த காலத்தில் யார் ஆளுமைக்கு உட்பட்டிருந்தது அவற்றின் சுற்றுலா காரணிகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். இதுபோன்ற பதிவுகள எளிதில் பெற மேலுள்ள பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

 தமிழ்நாடு அந்த காலத்தில்

தமிழ்நாடு அந்த காலத்தில்

தமிழகம் அந்த காலத்தில் தொண்டை நாடு, சோழ நாடு, நடுநாடு, சேர நாடு, பல்லவ நாடு, பாண்டிய நாடு என பலவாறாக பிரிந்து இருந்தது. மேலும் களப்பிரர்களும், நாயக்கர்களும், முகலாயர்களும் தமிழகத்தை வெவ்வேறு காலக் கட்டங்களில் ஆண்டனர். அப்படி அவர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தற்போது பல மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு குடியரசு இந்தியாவின் பகுதிகளாக உள்ளது. வாருங்கள் பண்டைய நாடு இப்போது எப்படி இருக்குதுனு பாப்போம்.

 தஞ்சையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்

தஞ்சையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்

கிபி 1 முதல் 4ம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் ஆட்சி செலுத்தி பெரும்பான்மை நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்தவர்கள் சோழர்கள். இவர்களில் மிகவும் புகழ் பெற்ற மாமன்னராக கரிகால் சோழன் விளங்கினார். இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகள் தற்போதைய தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகள் ஆகும். இப்பகுதிகளைச் சுற்றி ஏராளமான சுற்றுலா காரணிகள் இருக்கின்றன.

திருச்சி, திருவரங்கம், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கும்பகோணம், ஆலங்குடி, திருவாரூர், மன்னார்குடி, கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம், சீர்காழி, பட்டீஸ்வரம், திருக்கருக்காவூர், தேரழந்தூர், திருவிடைமருதூர் என எக்கச்சக்க பகுதிகள் இங்கு காணப்படுகின்றன.

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்த கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது இந்த கோயிலின் வடிவமைப்பை பார்க்கும் போதே புலனாகிறது.

இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக 14 மீ உயரமும், 7மீ நீளமும், 3மீ அகலமும் அகலமும் கொண்டதாக வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.

Jean-Pierre Dalbéra

காஞ்சிபுரமும் சுற்றியுள்ள பகுதிகளும்

காஞ்சிபுரமும் சுற்றியுள்ள பகுதிகளும்

கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் வரை ஆதிக்கம் செலுத்திய சோழர்கள் வீழ்வை சந்திக்க கிபி 4ம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல்லவர்கள் மேல் எழுகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் தென்னிந்தியாவை ஆளுகின்றனர். காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த பல்லவர்கள் சோழர்களை தோற்கடித்து வெற்றிக் கொடியை நட்டனர். இவர்களின் செல்வாக்கு இலங்கை வரை நீண்டது.

இவர்கள் ஆதிக்கத்தின்போதே திராவிட பாணி கட்டிடக் கலை உருப்பெற்றது. பல்லவ மன்னர்களில் கடைசி மன்னனான அபராஜிதன் ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். பின் மீண்டும் சோழர் ஆதிக்கம் மேல் எழத் தொடங்கியது.

 காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்

இக்கோயில், பார்வதி தேவியின் அவதாரமாகக் கருதப்படும் காமாட்சி அம்மனுக்காக எழுப்பப்பட்டதாகும். பெரும்பாலும், இக்கோயில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கு மூலக் கடவுளான காமாட்சி அம்மன், நின்ற கோலத்திலில்லாமல் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இங்கு அம்மன், யோக நிலையில் அமர்ந்த வண்ணம், அமைதியும் கருணையும் கொண்டு அருள் பாலிக்கிறார். ஆச்சரியமாக, இந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் கடவுளான பார்வதி தேவிக்கு, இந்நகரில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும்.

SINHA

 காஞ்சி கைலாசநாதர் கோயில்

காஞ்சி கைலாசநாதர் கோயில்

கைலாசனாத் கோயில் என்றும் அழைக்கப்படும், கைலாசநாதர் கோயில் தான் இந்நகரில் உள்ள மிகப் புராதனமான கோயிலாகும். இது, சிவ பெருமானுக்காக, பல்லவ மன்னரான நரசிம்மப்பல்லவரால், எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயிலாகும். வருடந்தோறும் சிவபக்தர்கள் இக்கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக பெரிதும் பேசப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரச்சட்டங்கள் பலவற்றில், சிவபெருமான், நடராஜர் தோற்றத்தில் காணப்படுகிறார்.

Keshav Mukund Kandhadai

 கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கிபி 9ம் நூற்றாண்டுக்குப் பின் சோழர்கள் மீண்டும் தலைதூக்கினர். அப்போது ராஜராஜனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் தென்னிந்தியாவின் பெரும் சக்தியாக உருவெடுத்தனர்.

இவர்களின் தலைமையில் சோழப் பேரரசு மத்திய இந்தியா, ஒடிசா, வங்காளம் வரை பரவியிருந்தது. பின் சாளுக்கிய, சேர, பாண்டியர்களை வீழ்த்தி இலங்கையையும் கைப்பற்றினார்கள் சோழர்கள். பீகார், வங்காளம் என தன் செல்வாக்கை உயர்த்திய சோழர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார்கள்.

அப்போதைய நாட்களில் பல கோயில்களையும் சோழர்கள் கட்டினார்கள். தஞ்சாவூரில் ஆரம்பித்து வட மாநிலங்களில் நிறைய கோயில்கள் கட்டியிருந்தாலும் முகலாய படையெடுப்பில் அனைத்தும் தகர்க்கப்பட்டது. ஆனால் தஞ்சை பெரிய கோயில் மட்டும் அப்படியே இருக்கிறது என்பது ஆச்சரியமானதுதான். ஏனெனில் முகலாயர்கள் தெற்கே மதுரையையும் தாண்டி படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 கங்கை கொண்ட சோழபுரம் எங்கே இருக்கிறது

கங்கை கொண்ட சோழபுரம் எங்கே இருக்கிறது

கும்ப கோணத்திலிருந்து 35 கிமீ வடக்கே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சென்றால் தேசிய நெடுஞ்சாலை எண் 81ல் இருக்கும் மீன்சுருட்டி எனும் இடத்திலிருந்து இரண்டு மூன்று கிமீ தூரத்திலேயே அமைந்துள்ளது கங்கை கொண்ட சோழ புரம்.

Ssriraman

 மதுரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்

மதுரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்

பதினான்காம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு படிப்படியாக எழுச்சிப் பெற்று வந்த பாண்டியர்கள், விரைவில் செயலிழந்தனர். இதற்கு காரணம் கில்ஜி படையினர்தான். 1316ம் ஆண்டு தென்னகத்தில் புகுந்து மதுரையைச் சூறையாடிச் சென்றனர். அப்போது அழிவுற்றது மதுரையின் அத்தனை பொக்கிஷங்களும். அதிலிருந்து மிஞ்சியவைதான் தற்போது நாம் மதுரையில் காண்பவை. இஸ்லாமியர்களை பெரும்படையுடன் எதிர்க்க திட்டமிட்ட பல சிற்றரசுகள் விஜயநகர பேரரசை தோற்றுவித்தன. பின் நாயக்கர்களும் அதன் பின்னர் ஐரோப்பியர்களும் என கைமாறிய பூமி பின் சுதந்திரம் பெற்று இந்திய தேசமாக அறிவிக்கப்பட்டது.

 கூடல் அழகர் கோயில்

கூடல் அழகர் கோயில்

தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு மஹாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார். ராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம். ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவக்கிரக தெய்வச்சிலைகளும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவாக நவக்கிரக விக்கிரகங்கள் சைவத்திருக்கோயில்களில் மட்டுமே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.

Read more about: travel thanjavur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X