» »உங்கள் தலையெழுத்தை தலைகீழாக மாற்றும் அதிசய கோயில்! #FridaySpl1

உங்கள் தலையெழுத்தை தலைகீழாக மாற்றும் அதிசய கோயில்! #FridaySpl1

Posted By: Udhaya

என்னடா வாழ்க்கை இது என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள். நாமலாம் எதுக்கு பொறந்தோம்னே தெரியல. இந்த வாழ்க்கை இல்லாம வேற வாழ்க்கை கிடச்சிருந்தா சந்தோசமா இருக்கலாம்னு நினச்சிட்டு இருக்கீங்களா. கவல படாதீங்க அப்படி ஒரு வாய்ப்பு வழங்குகிறது ஒரு இடம்.

பிரம்மபுரீஸ்வரர் கோயில்

பிரம்மபுரீஸ்வரர் கோயில்


திருச்சி அருகே திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில். இந்தியாவிலேயே மிக சொற்ப இடங்களில் இருக்கும் பிரம்ம தேவனுக்கான கோயில்களில் இது சிறப்பானதாகும்.

Youtube

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிமீ தொலைவில் சிறுகனூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது திருப்பட்டூர் கிராமம். இங்குள்ள பிரம்ம கோயிலுக்கு அப்படி ஒரு ஆற்றல்.

பிரம்மதேவர்

பிரம்மதேவர்

உங்கள் தலையெழுத்தை எழுதியவர் பிரம்மதேவர். அப்படியானால் அவர்தானே அதை மாற்ற வேண்டும் என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். வெறும் வாய்வாக்காக அல்லாமல், இங்கு சென்றுவந்தவருக்கு நிச்சயம் மாற்றம் நிகழும் என்கிறார்கள் அவர்கள்.

திட்டமிடமுடியாத திட்டம்

திட்டமிடமுடியாத திட்டம்

இந்த கோயிலுக்கு செல்லவதே திட்டமிடமுடியாததாம். அதாவது நீங்கள் திட்டமிட்டு இந்த கோயிலுக்கு செல்வதென்பது நிகழவே நிகழாத ஒரு காரியம் என்கின்றனர். இந்த அறிவியல் உலகிலும் இப்படி ஒரு நம்பிக்கை என்று பலர் நினைத்திருக்கிறார்கள். ஆனால், பிரம்மனின் ஆசி பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விதி இருந்தால் மட்டும்

விதி இருந்தால் மட்டும்

இந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என்று விதி இருந்தால் மட்டும் உங்களால் இந்த கோயிலுக்கு செல்லமுடியுமாம். அந்த விதி உங்களுக்கு இந்த தகவலைக் கொண்டு சேர்க்கும் என்கிறார்கள் தீவிர பக்தர்கள்.

வரலாறு

வரலாறு


சிவனிடமிருந்து உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மன் பெற்றதாகவும், அதற்குள் அகந்தை தலைக்கேறிய பிரம்மன், சிவனையும் தன்னையும் சமமாக நினைத்து அவமதித்ததாகவும் நம்பிக்கை கதை உண்டு.

 சாபவிமோட்சனம்

சாபவிமோட்சனம்


இதனால் சாபமிட்ட சிவன், பிரம்மனை இந்த தலத்துக்கு சென்று வணங்குமாறும் கூறினாராம். இப்படியாக இந்த கோயில் உருவானதாக கருதப்படுகிறது. துவாதச லிங்க வழிபாடு செய்வது இங்கு சிறப்பு பரிகாரமாகும்.

உங்கள் தலையெழுத்து மாற

உங்கள் தலையெழுத்து மாற

இந்த தலத்துக்கு சென்று பிரம்மனையும், சிவனையும் வழிபட்டால் உங்கள் தலையெழுத்து மாறி நல்லநேரம் வரும் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

இந்த கோயிலில் காலை 7.30மணியிலிருந்து மதியம் 12மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

 சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த கோயில் தஞ்சை பெரியகோயிலுக்கும் முந்தையது. நந்தி சிலையை தடவினால் நிஜ நந்தியை தடவிய உணர்வு வருவதாக தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு கற்களால் செய்யப்பட்ட நந்தி சிலை உள்ளது.

 அதிசய ஒளி

அதிசய ஒளி

பங்குனி மாதம் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். அந்த நேரத்தில் லிங்கத்தை தரிசிப்பது மிகவும் சிறந்தது. இதனால் அவரது வாழ்க்கை மாறிப்போகும். அதே நேரத்தில் இதை அவ்வளவாக யாரும் தரிசித்தது கிடையாதாம். பேராசை கொண்டு தரிசிப்பவர்களுக்கு இருப்பதும் கெட்டுவிடும் என்று சொல்லி நம்மை அதிர்ச்சியடைய செய்கின்றனர் பக்தர்கள்.