» »வெகு நாட்களாக திருமணம் ஆகவில்லையா? இங்கு செல்லுங்கள் ஒருவருடத்துக்குள் திருமணம் உறுதி

வெகு நாட்களாக திருமணம் ஆகவில்லையா? இங்கு செல்லுங்கள் ஒருவருடத்துக்குள் திருமணம் உறுதி

Posted By: Udhaya

நண்பர் ஒருவருக்கு 30வயது கடந்து சில மாதங்கள் ஆகிறது. அவருக்கோ வசதிக்கும் குறைவில்லை. கைநிறைய சம்பளம். கவலை என்னவோ திருமணத்தில்தான். காதலும் கைகூடவில்லை. வீட்டில் பார்த்த வரன்கள் தொடர் இழுபறியில் தடைபட்டுச் செல்கிறது. வீட்டிற்கு ஒரே பையன். எத்தனை வசதி இருந்து என்ன பயன் திருமணம் ஆகவில்லை என்ற கவலை அவரது தாய், தந்தையை தினம் தினம் வருத்திக்கொண்டிருக்கிறது.

சாதகம் சரியில்லை. தோசம் இருக்கிறது என்று வந்த சோதிடர்களெல்லாம் ஏதேதோ காரணத்தைச் சொல்லி, எஸ்கேப் ஆனார்கள்.. நண்பரைப் போல பலர் நம் நாட்டில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நலம் தரும் வகையில், அமைந்துள்ள ஒரு திருத்தலம் தமிழகத்தில் உள்ளது.

என்ன என்று கேட்கிறீர்களா? இந்த கோயிலுக்குச் சென்றால் ஒரு வருடத்தில் திருமணம் உறுதி. நாமும் செல்வோமா?

பெற்றோரின் நம்பிக்கை

பெற்றோரின் நம்பிக்கை

நம்மில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது. இன்னும் சிலருக்கு சாதகம், சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்காது.எனினும் பெற்றோரின் நம்பிக்கைக்காவது சென்று பார்க்கலாம். சென்னையிலிருந்து எப்படி செல்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Tshrinivasan

 எங்குள்ளது

எங்குள்ளது

கிழக்குக் கடற்கரைச் சாலையில் செல்லும்போது, மாமல்லபுரத்திலிருந்து 18கிமீ முன்பாகவே அமைந்துள்ளது திருவிடந்தை. இந்த ஊரில் அமைந்துள்ள அந்த கோயில்தான் கல்யாணத் தடையை நீக்கி திருமணம் கைக்கூடச் செய்யும் தளமாகும். வாருங்கள் சென்னையிலிருந்து எப்படி செல்லலாம், வழியில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன என்பன குறித்து காண்போம்.

 சென்னை - திருவிடந்தை

சென்னை - திருவிடந்தை

சென்னையிலிருந்து சுமார் 40கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருவிடந்தை. இது தி கிரேட் சால்ட் லேக் எனப்படும், உப்பு ஏரியில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து

சென்னையிலிருந்து


சென்னையிலிருந்து மூன்று வழித்தடங்களில் இந்த இடத்தை அடையமுடியும். எனினும் கிழக்குக் கடற்கரைச் சாலை எனப்படும் ஈசிஆர் வழியாகச் செல்வதே சிறப்பானதாக இருக்கும்.

சென்னை - அடையாறு - பாலவாக்கம் - கோவளம் வழியாக இந்த ஊரை அடையலாம்.

நித்ய கல்யாணப் பெருமாள் கோயில்

நித்ய கல்யாணப் பெருமாள் கோயில்

திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் அமைந்துள்ளது. இது வராகபுரி என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

கி. கார்த்திகேயன்

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

108திவ்யதேசங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஒரு ஆண்டின் அனைத்து நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர்.

Ssriram mt

 கல்யாண விமானம்

கல்யாண விமானம்

திருமண விமானம் என்று அழைக்கப்படும் விமானம் கொண்ட கோயில் இதுவாகும். இத்தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி திருமணகோலத்தில் நின்று பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இது பெருமாளின் மிகமுக்கிய கோலமாக கருதப்படுகிறது.

Ssriram mt

 நேர்த்திக்கடனும் நடை திறப்பும்

நேர்த்திக்கடனும் நடை திறப்பும்


பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமணஉற்சவம் நடத்துவதே இங்கு நேர்த்திக்கடனாகும். ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்து வேண்டியவர்கள் மறுமுறை நேர்த்திக்கடன் செலுத்தத்தான் வருவார்களாம். அந்த அளவுக்கு நிச்சயமாக வேண்டிய வரம் அருள்கிறார் பெருமாள்.

காலை 6 முதல் 12மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8மணி வரையிலும் இதன் நடை திறந்திருக்கும் நேரமாகும்.

Ssriram mt

பழமை மற்றும் வரலாறு

பழமை மற்றும் வரலாறு

இந்த கோயில் சுமார் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்குட்பட்ட வயதுடையதாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

Gabriele Giuseppini

கோயிலுக்குள் சென்றால்....

கோயிலுக்குள் சென்றால்....

நீங்கள் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கும்போதே அங்கு சாரைசாரையாக பல ஆண்களும் பெண்களும் கோயிலைச் சுற்றிக்கொண்டிருப்பதைக் காணமுடியும்.

அர்ச்சனை செய்ய வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துவிட்டு, கோயிலை 9 சுற்று சுற்றிவந்தால், நிச்சயம் கல்யாணம் உறுதியாக நடைபெறும்.

Arunankapilan

திருமண பிரார்த்தனை

திருமண பிரார்த்தனை


திருமணம் நடைபெற கோயிலை 9 சுற்று சுற்றிவிட்டு, அங்கு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம். அதே நேரத்தில் அங்கு கிடைக்கும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம். இது திருமணப்பிரார்த்தனையாக பார்க்கப்படுகிறது.

Ssriram mt

சன்னதிகள்

சன்னதிகள்

மூலவர் நித்ய கல்யாணபெருமாள் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதியும் அமைந்துள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஒரு சன்னிதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

Ssriram mt

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

இங்குள்ள தீர்த்தங்களும் சிறப்புமிக்கவையாகும். வராக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ரங்கநாதர் தீர்த்தம் என தீர்த்தங்களுக்கும் தனித்தனி சிறப்புள்ளது. இதில் கல்யாணத் தீர்த்தத்தில் நீராடினால் நிச்சயம் திருமணம் நடக்கும்.

Ssriram mt

 செல்லும் வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

செல்லும் வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

சென்னையிலிருந்து கிளம்பும்வழியில் செம்மொழி பூங்கா, மத்தியகைலாஷ் கோயில், மருந்தீஸ்வரர் கோயில், முட்டுக்காடு, கோவளம் கடற்கரை ஆகியன வருகின்றன.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்