» »தௌபலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விசயங்களும் இடங்களும்

தௌபலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விசயங்களும் இடங்களும்

Posted By: Udhaya

ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தௌபலில் உள்ள மற்றொரு நதியின் பெயர் இம்பால்.

தௌபல் மாநகராட்சி அதன் கிழக்கு திசையில் மணிப்பூரில் உள்ள உக்ருள் மற்றும் சண்டெல் மாநகராட்சிகளால் சூழப்பட்டுள்ளது. அதே போல் வடக்கு திசையில் சேனாபதி மாநகராட்சியால், மேற்கு திசையில் மேற்கு மற்றும் கிழக்கு இம்பால் மாநகராட்சியால், தெற்கு திசையில் சுரச்சந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாநகராட்சியால் சூழப்பட்டு அழகே உருவாய் காட்சியளிக்கிறது தௌபல் நகரம்.

 கொண்ஜம்

கொண்ஜம்

கொண்ஜம் என்ற இடம் தௌபல் மாநகராட்சியில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாகும். நாட்டின் சுதந்திரத்துக்காக மணிப்பூர் மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக கடைசி போரை நடத்தியது இந்த இடத்தில் தான். மணிப்பூர் மக்கள் வெள்ளைய முதன்மை ஆணையரையும் அவரின் கட்சி உறுப்பினர்களையும் கொலை செய்த பின் 1891 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மூண்டது இந்த போர்.

வெள்ளையர்களிடம் ஒப்பிடுகையில் மணிப்பூர் மக்களிடம் போதிய ஆள் பலமோ ஆயுதோ பலமோ இருக்கவில்லை. இருப்பினும் தங்களது சக்தியை பயன்படுத்தி போரில் முழு வீச்சுடன் ஈடுபட்டனர். இந்த போரில் மணிப்பூர் மக்கள் தோற்றுப் போனாலும், மேஜர் ஜெனரல் பௌனா ப்ரஜாபஷி தலைமையில் போரிட்ட அனைவரின் வெறித்தனமான மனத் தைரியமும் மறக்க முடியாதவை.

கொண்ஜம், தௌபலிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் இம்பாலிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. போரில் பங்கு பெற்ற வீரர்களின் நினைவாக அங்குள்ள ஒரு குன்றின் மேல் ஒரு சின்ன போர் நினைவகம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த போரின் நினைவாக ஒவ்வொரு வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மணிப்பூரில் மாநில விடுமுறை விடப்பட்டுள்ளது. கொண்ஜம், தேசிய நெடுஞ்சாலையுடன் தொடர்பில் இருப்பதுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி ஒன்றும் இங்கு உள்ளது.

Herojit th

 சுக்னு

சுக்னு

சுக்னு என்பது தௌபல் மாநகராட்சியில் உள்ள முக்கிய வணிக மையமாகும். சுக்னு- இம்பால் மாநில நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திலிருந்து மணிப்பூரின் தலைநகரத்துக்கு செல்லலாம். சுக்னு இம்பாலிலிருந்து 74 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. வணிக மையம் தவிர, இந்த அழகிய நகரத்தில் இம்பால் நதியும் பாய்ந்தோடுகிறது. இந்த இடத்திற்கு அழகை சேர்ப்பதாக விளங்குகிறது இந்த நதி. இந்த நதியினால் இதன் சுற்று வட்டாரம் பசுமையோடு இருக்கும். சிறு குன்றுகள் அடங்கிய தௌபல் மாநகராட்சி சுக்னுவிற்கு கூடுதல் அழகை சேர்க்கும்.

தௌபல் மாநகராட்சியில் உள்ள 10 விதான் சபா தொகுதிகளில் ஒன்று சுக்னுவில் உள்ளது. லிலாங், வாங்கெம், தௌபல், ஹேய்ராக், கங்கபோக், வாங்ஜிங் டெண்தா, கக்சிங், வாபகை மற்றும் ஹியங்க்லம் ஆகியவை தான் மற்ற ஒன்பது தொகுதிகள்.

தௌபல் மாநகராட்சிக்கு தெற்கே அமைந்துள்ளது சுக்னு. இங்கே மக்கள் தொகை 4500 ஆக இருப்பதாக 2001 ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கு கூறுகிறது. இங்கு உடல்நிலை பாதுகாப்பு மையம் மற்றும் தொடக்கப் பள்ளி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

Herojit th

 வைதௌ

வைதௌ

தௌபல் மாநகராட்சி பல ஏரிகளுக்காகவும் நதிகளுக்காகவும் புகழ் பெற்றது. புகழ் பெற்ற லோக்டக் ஏரியும் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது. வைதௌ ஏரி அவற்றில் மிகவும் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். மேலும் வைதௌ சுற்றுப் பகுதிகளின் கவர்ச்சிக்கு காரணமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

இந்த ஏரி மாநகராட்சியின் வடக்கு திசை நோக்கி உள்ளது. வைதௌ மலையிலிருந்து வரும் நீர் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும் விவாசய நிலத்திலிருந்து தேங்கும் நீரினால் உருவானதே இந்த ஏரி.

இந்த இடம் இம்பாலிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இம்பால்-ம்யன்மர் சாலையியிலும், தௌபல் மாநகராட்சி பணித் தலைமையிடமிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமையப்பெற்றிருக்கிறது.

முன்னாட்களில் இந்த ஏரி அருகிவரும் மீன் உயிரினமான ந்கடன் என்ற மீனின் இனப்பெருக்க இடமாக இருந்தது. 1970-ஆம் ஆண்டு இங்கே செக்சபி அணை கட்டப்பட்டதால் இந்த மீன் வகைகள் காணாமல் போனது.

Herojit th

 கக்சிங்

கக்சிங்


தௌபல் மாநகராட்சியில் அதன் பணித் தலைமையிடத்திற்கு அடுத்த பெரிய நகரம் கக்சிங். இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ம்யன்மார் எல்லையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் இம்பாலிலிருந்து 44 கி.மீ. தொலைவிலும் உள்ள கக்சிங், தௌபல் மாநகராட்சியில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தௌபல் மாநகராட்சியின் இரு துணைக் கிளைகளில் ஒன்று தான் கக்சிங். வைகொங் என்பது மற்றொரு துணைக் கிளை.

கக்சிங் துணைக் கிளையில் பல வகையான காய்கள், அரிசிகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்படுவதால் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்குகிறது. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் வசதி உள்ளன. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கும் சிறிது நேரத்தில் செல்லலாம்.

தௌபல் மாநகராட்சியின் விவசாய மையம் மட்டுமல்ல கக்சிங். ஸ்ரீ கிருஷ்ணசந்திர கோவில், விஸ்வநாத் கோவில் மற்றும் நரசிங்க கோவில் போன்ற கோவில்களுக்காகவும் கக்சிங் புகழ் பெற்று விளங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கு 100 ஏக்கர் பரப்பளவில் பல்லேட் விமான தளம் ஒன்றும் இருந்தது.

Sudiptorana

 தௌபல் – வளமான நகரம்:

தௌபல் – வளமான நகரம்:


மணிப்பூரின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான தௌபலின், மாநகராட்சி தலைமைப் பணியிடம் தான் தௌபல். நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் இந்த இடம் இம்பால் மாநிலத்தின் தலைநகரத்துக்கு மிக அருகில் இருப்பதால், இங்கு அனைத்து வசதிகளும் கொட்டிக் கிடக்கிறது. தௌபல் கடல் மட்டத்திலிருந்து 765 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2001 ஆம் ஆண்டின் சென்சஸ் படி இங்கு மக்கள் தொகை 40,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு சுற்றிப் பார்க்க சந்தை போன்று பல இடங்கள் உள்ளன. இந்த சந்தைகளில் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிமணிகள் விற்கப்படுகின்றன. முக்கிய சந்தை ஒன்று இம்பால் ஆற்றங்கரையின் அருகில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சல்லை எண் 39 இந்த சந்தையை கடந்து தான் செல்கிறது.

மணிப்பூர் சாஹித்ய சமிதியின் முக்கிய அலுவலகம் தௌபலில் தான் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்துச் செல்வர். மேலும் இங்கு சிங்கா லைரெம்பி கோவில் போன்ற பல கோவில்களும் உள்ளன.

Herojit th

 பல்லெல்

பல்லெல்


மொரெஹ்வுக்கு செல்லும் வழியில் இருக்கிறது இந்த பல்லெல் நகரம். மணிப்பூரில் உள்ள வணிக மையம் இது. தௌபல் மற்றும் சண்டெல் எல்லையில் இருக்கும் இந்த இடத்தை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலை எண் 39 கடந்து செல்கிறது. இம்பாலிலிருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லெல். மேலும் ட்ரான்ஸ்-ஆசிய சூப்பர் நெடுஞ்சாலையின் நுழைவு வாயிலாக விளங்குகிறது பல்லெல்.

சண்டெல் மலைகளும் தௌபல் நிலப்பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது பல்லெல். இவையிரண்டும் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் பல்லெலின் அழகு மேன்மேலும் கூடுகிறது. மொரெஹ் போகும் வழியில் இருக்கும் பல்லெல் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். இதன் அழகை கண்டு கழிக்கவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வர விரும்புவர்.

விவசாயம் தான் பல்லெலின் முக்கிய வாழ்வாதாரம். இது போக இங்கு வாழும் பழங்குடியினர் கைவினைப் பொருட்களை விற்றும் பிழைக்கின்றனர். பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மரியாங்க்ஸ், குக்கிஸ், மெய்டெய்ஸ் மற்றும் லம்கங்ஸ் போன்றவர்கள் தான் இங்கு வாழும் முக்கிய பழங்குடியினர்.

Herojit th

நதிகளும், ஏரிகளும்

நதிகளும், ஏரிகளும்

தௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன.

லோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி மற்றும் வைதௌ ஏரி ஆகியவைகள் தான் இங்கு உள்ள ஏரிகளில் மிக முக்கியமானவைகளாகும். லோப் ஏரியைச் சுற்றி இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகளிடம் இந்த இடம் புகழ் பெற்று திகழ்கிறது. மேலும் உயரமான இடத்தில் இருக்கும் இந்த இடத்தில் அடிக்கும் குளிர்ந்த தென்றல் காற்று மேலும் ஈர்ப்பை உண்டாக்கும். லௌசி ஏரி 18 சதுர கி.மீ. பரப்பளவில் புவியியல் வல்லுநர்களிடம் புகழ் பெற்று விளங்குளிறது. இந்த ஏரியின் தண்ணீரை உள்ளூர் மக்கள் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

பும்லென் பட் என்றழைக்கப்படும் பும்லென் ஏரி, தௌபலிலுள்ள தூய்மையான தண்ணீரைக் கொண்ட ஏரி. இங்குள்ள முக்கிய ஈர்ப்பு பும்டிஸ் எனப்படும் மிதக்கும் சிதைந்த செடிகள்.

Herojit th

கங்கபோக்

கங்கபோக்

மணிப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கங்கபோக். மாநிலத்தின் பெரிய கிராமமான இது தௌபல் மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் மக்களை மெய்டேய்ஸ் என்று அழைப்பர். மெய்டேய்லோன் அல்லது மணிப்பூரி ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

கங்ரா என்ற மரத்தில் இருந்து தான் கங்கபோக் கிராமம் அதன் பெயரைப் பெற்றது. இன்று இந்த கிராமம் இருக்கும் இடத்தில் தான் அந்த மரங்கள் இருந்தன. மக்கள் இந்த இடத்தில் வாழ வேண்டி மரங்களை வெட்டித் தள்ளினர். எனவே இந்த இடத்திற்கு கங்ராபோக்பி என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு கங்ரா வளர்ந்துள்ளது என்று பொருளாகும். இப்பெயர் காலப்போக்கில் மாறி கங்கபோக் என்று ஆனது.

இந்த இடத்தில் லோப் பட் என்றழைக்கப்படும் லோப் ஏரி மற்றும் இன்னும் சில தலங்கள் உள்ளன. பல காலமாக இந்த ஏரியின் தண்ணீர் மீன் பிடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால், உள்ளூர் விவசாயிகள் வாழ்க்கையில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள லம்லாங் பஜாரும் முக்கியமானவை.

Herojit th

Read more about: thoubal manipur manipur tourism