» »இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா?

இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா?

Posted By: Udhaya

பிள்ளையார்.. எந்த செயலை செய்தாலும் முதலில் தொடக்க கடவுளாக நம் அனைவராலும் வணங்கப்படும் தெய்வம். கடவுள்களிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த தெய்வம் கோபத்தை குறைப்பவனும், எந்த செயலிலும் முந்தி இருப்பவனும் விநாயகப்பெருமானே.

அப்படிபட்ட விநாயகப்பெருமான் தமிழகத்தில் பிள்ளையார் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. ஒரு பிள்ளையாருக்கு இத்தனை பெயரா. என்ன காரணம். முதன்முதற்கடவுளான பிள்ளையார் மிகவும் தனிச்சிறப்புடன் இருக்கும் ஒரு ஆலயத்திற்குத்தான் நாம் இன்று போகவுள்ளோம். அப்படி என்ன சிறப்பு. முழுவதும் படியுங்கள்.

பிள்ளையார் தோன்றிய வசிஷ்ட நதி எங்குள்ளது தெரியுமா?

பிள்ளையார் தோன்றிய வசிஷ்ட நதி எங்குள்ளது தெரியுமா?

வசிஷ்ட நதி ஆத்தூர் பகுதியில் ஓடுகிறது. இன்று இந்நதி வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு தண்ணீர் பெருகி ஓடிய நதியாக இருந்தது.

வெள்ளம் பிள்ளையார்

வெள்ளம் பிள்ளையார்

குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், "வெள்ளம் பிள்ளையார்' என்று பெயரும் சூட்டினர்.

Pc: T. A. Gopinatha Rao

வெள்ளைப் பிள்ளையார்

வெள்ளைப் பிள்ளையார்

காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். பிள்ளையார் அமர்ந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட அனைத்தும் பிள்ளையாரைச் சுற்றி அமைந்தன. போக்குவரத்து அதிகரித்தது.

PC: T. A. Gopinatha Rao

வாகனப்பிள்ளையார்

வாகனப்பிள்ளையார்


இவ்விடத்தை தாண்டிச் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகரை வணங்கிச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு காரியம் கைகூடவே, இவர் "வாகனப் பிள்ளையார்' என்ற பெயர் பெற்றார்.

PC:Ravn -

தலச் சிறப்பு

தலச் சிறப்பு

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இதுவரை இங்கு வந்த பக்தர்கள் அனைவரும் வேண்டிய வரம் பெற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கும் ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால் உடனே வாருங்கள்.

தனித்துவம் வாய்ந்த பிள்ளையார்

தனித்துவம் வாய்ந்த பிள்ளையார்

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. பிள்ளையார் முன்பு ஒற்றை மூஞ்சூறு வாகனம் இருக்கும். மகாராஷ்டிராவில் இரட்டை மூஞ்சூறு வாகனங்களைப் பார்க்கலாம். ஆனால் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ள வித்தியாசமான கோயில் இது.

Read more about: travel temple