» »நோய் நொடி தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்

நோய் நொடி தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்

Written By: Udhaya

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி.


இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவர் மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 16வது சிவத்தலமாகும்.


ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தளமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.

பலன்:

வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

நோய் நொடி தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்

PC: BishkekRocks

நோய் நீக்கும் கடவுள்:

இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
இந்த வைத்தீசுவரன் கோயிலின் தோற்றம் வரலாற்று சிறப்பு மிக்கது .


ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.


இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.

வரலாறு:

இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

இக்கோயிலினுள் தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாக எழுந்தருளியுள்ளார்.

நோய் நொடி தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்

PC: Raji.srinivas

காணிக்கைகள்:

கடவுளுக்கு படைத்த பொருட்காளாக திருநீரும் , சாம்பல் நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.

மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த உப்பு இவற்றை குளத்தில் வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.


திருவிழாக்கள்:

ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று விழா எடுக்கப்படுகின்றது.

நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.

நோய் நொடி தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்

PC: wiki

எப்படி செல்லலாம்?

இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் மயிலாடுதுறையை அடைய மைசூரிலிருந்து மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறையை அடையலாம்.

Read more about: travel, temple
Please Wait while comments are loading...