நர்மதா நதியின் ஆற்றங்கரையில் இவ்விடம் அமைந்திருக்க, இந்த அழகிய நகரத்தை மத்தியபிரதேசத்தின் ஆலய நகரம் என்றும் அழைப்பர். இந்த நகரமானது புராணத்தின் பெருமையை தாங்கிகொண்டு நிற்க, ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற வரலாற்று கோணங்களிலும் பல கதைகளை நம்மிடம் கூறுகிறது. இராணி அகல்யாபாய் ஹொல்கரின் தலைநகரமான இந்த நகரம், பல அழகிய கட்டிடங்களை கொண்டிருப்பதோடு அவை அனைத்தும் மராத்திய கட்டிடக்கலை பாணியில் காணப்படுகிறது.
மஹேஷ்வரி புடவைகளுக்கு பெயர் பெற்ற இந்த இடம், 250 ஆண்டுகளுக்கு முன்பு அகல்யாபாய் ஹொல்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற உண்மையும் நமக்கு தெரிய வருகிறது. நர்மதா நதியின் ஆற்றங்கரையில் காணப்படும் இந்த இடத்திலிருந்து பல மலை சிகரங்களை நாம் காணலாம். இவற்றை காணும்பொழுது, வாரணாசியின் புகழ்பெற்ற காட்சிகள் நம் நினைவிற்கு வருகிறது. இங்கிருந்து நாம் சூரிய அஸ்தமனத்தை காண, நர்மதி நதியின் குளிர்ச்சியால் நம் கண்களை இதமாக்கி நம் காட்சி பட்டியலில் ஒன்றாகவும் இவ்விடம் சேர்கிறது.
5 ஆம் நூற்றாண்டு முதல் கைவினை நெசவுதொழிலுக்கு முதன்மையாக இந்த நகரம் விளங்க, நாட்டின் சிறந்த கைத்தறி உற்பத்தியான துணிகள் உற்பத்திக்கு புகலிடமாகவும் இது விளங்குகிறது. ஆம், வண்ணம் தீட்டப்பட்ட அழகிய மஹேஷ்வரி புடவைகளின் நெசவுக்கு, பெயர்பெற்ற ஒரு இடமாகவும் இவ்விடம் சிறந்து விளங்குகிறது.
இந்த பருத்தி புடவைகள், தனித்துவமிக்கதாக விளங்க...இதில் கோடுகளும், கட்டங்களும், பூ போட்ட பார்டர்களும் என பார்ப்பவர்கள் கண்களை வெகுவாக கவர்கிறது. கையால் நெய்த இந்த புடவையானது, துணிகள் கொண்டு குர்தா மற்றும் பல ஆடைகளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

மஹேஷ்வரை நாம் காண சிறந்ததோர் நேரங்கள்:
வருடத்தில் எப்பொழுது வேண்டுமென்றாலும் இந்த மஹேஷ்வரை நாம் பார்க்கலாம். குறிப்பாக, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில், கால நிலையானது மிகவும் அருமையாக இருக்க, நம் பயணமும் சிறப்பாக அமைகிறது. கோடைக்காலத்தில் கால நிலையானது உச்சபட்ச நிலையில் இருப்பதோடு நமக்கு சிறந்ததோர் அனுபவத்தை தர, குளிர்காலங்களும் அவ்வாறே அமைகிறது.
Nilrocks

எப்படி நாம் அடைவது?
ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி?
அருகில் காணப்படும் ஒரு விமான நிலையமாக இந்தூர் விமான நிலையமிருக்க, நகரத்திலிருந்து 91 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களான தில்லி, மும்பை, பெங்களூரு என பல இடங்களுக்கு சேவை இயக்கப்பட, இங்கிருந்து நாம் எண்ணற்ற வாடகை காரின் மூலமாகவும் மஹேஷ்வரை எளிதில் அடையலாம்.
தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி?
நகரத்திலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மார்வாஹா தான் அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையமானது சிறிதாக இருக்க, சில இரயில்கள் இங்கே நிற்பதும் இல்லை.
இங்கே அருகில் காணப்படும் மற்றும் ஒரு இரயில் நிலையம் தான் 80 கிலோமீட்டர் (தோராயமாக) தொலைவில் காணப்படும் இந்தூர் இரயில் நிலையமாகும். இந்த நிலையத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு சேவை இயக்கப்பட, மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் சேவை காணப்படுகிறது.
சாலை மார்க்கமாக செல்வது எப்படி?
மஹேஷ்வரை நாம் அடைய சாலை போக்குவரத்து வசதி உதவ, சிறந்த இணைப்பு சாலையை இவ்விடம் கொண்டிருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
nevil zaveri

ஹொல்கர் கோட்டை:
நர்மதா நதியின் ஆற்றங்கரையில் காணப்படும் இந்த கோட்டை, பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்றாகும். அத்துடன் இராணி அகல்யா பாய் ஹொல்கருக்கு வீடாகவும் இந்த கோட்டை விளங்க, இதனை "இராணி கோட்டை" என்றும் அழைப்பர். இது, ஹொல்கரின் நிர்வாக தலைமையகமாகவும் விளங்குகிறது.
மராட்டிய கட்டிடக்கலையின் உச்சத்தை பெற்றிருக்கும் இந்த அரண்மனை, இராணி அகல்யா பாய் ஹொல்கர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை போன்ற வாழ்க்கை வடிவ சிலையையும் கொண்டிருக்கிறது. இந்த அரண்மனையில் எண்ணற்ற சாஸ்திரிகளும், ஆலயங்களும், ஒரு பெரிய நுழைவாயிலையும் கொண்டிருக்க, இந்த கோட்டையானது ஆர்வத்தை தூண்டி வருபவர்களை வெகுவாக கட்டி ஈர்க்கிறது.
இன்று, இந்த கோட்டையானது பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்க, சிவஹி ராவோ ஹொல்கர் இதனை நிர்வகித்து வருகிறார். இவர் தான், இந்தூரின் கடைசி மஹாராஜரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jean-Pierre Dalbéra

ஜலேஷ்வர் ஆலயம்:
இது ஒரு சிவன் சன்னதியாகும். இங்கே, அவர் நீர் கடவுளாக வணங்கப்படுகிறார், அத்தகைய காரணத்தினாலே இதனை ஜலேஷ்வர் என்று அழைப்பர். இந்த ஆலயத்தை நிறைய பக்தர் கூட்டம் தேடி வர, அதுவும் சிவராத்திரி விழாவின் போது கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
செதுக்கப்பட்ட தொங்கிக்கொண்டிருக்கும் மேல்மாடமானது பெயர் பெற்று விளங்க, இதன் கட்டிடக்கலையும் பேசப்படும் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. புராணத்தின்படி, கங்கை நதியில் மூழ்கிவிடாமல் சிவபெருமான் இந்த பூமியை காப்பாற்ற, சொர்க்கத்திலிருந்து கீழே விழுந்து அவள் நொறுங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
Spsarvana

அஹிலேஷ்வர் ஆலயம்:
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றுமொரு ஆலயமாக, அகிலேஷ்வர் ஆலயமிருக்க...மராட்டிய கைவினைஞர்களின் மாபெரும் கட்டிடக்கலை திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பு சிக்கலாக காணப்பட, கலையும் தெய்வத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த சிவபெருமானுக்கான சன்னதியை தவிர்த்து, ஸ்ரீ ராமருக்கான சன்னதியும் இங்கே காணப்படுகிறது.
இந்த இடமானது நாம் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்க, நாம் ஒய்வெடுப்பதற்கு சிறந்ததோர் இடமாகவும் இவ்விடம் இருக்கிறது.
Jean-Pierre Dalbéra

ஓம்காரேஷ்வர் ஆலயம்:
நகரத்தில் காணப்படும் மாபெரும் ஆலயங்களுள் ஒன்றான இந்த ஆலயம், நர்மதா நதியும், காவேரி நதியும் சங்கமிக்கும் ஒரு இடத்தில் அமைந்திருக்கிறது.
புராணத்தின்படி, கடவுளை வென்ற தானவர்களை தோற்கடிக்க, ஓம்காரேஷ்வர் வடிவத்தில் சிவபெருமான் எழுந்தருளியதாகவும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது. இந்த ஆலயமானது மந்தட்ட தீவில் அமைந்திருக்க, அதன் வடிவமானது ‘ஓம்' என்பதையும் கொண்டிருக்கிறது. இதனை ‘சிவபுரி தீவு' என்றும் அழைப்பர்.
Dusanesurbhi



Click it and Unblock the Notifications




