கார், பைக் வச்சுருக்குர கல்லூரி மாணவரா, வேலை நேரம் போக எப்போதும் லூட்டி அடிச்சுட்டே இருக்குற அலுவலக நண்பர்கள் உங்களுக்கு இருக்காங்களா ?. அப்புறம் என்ன பாஸ், வரப் போற வார இறுதி நாளுக்கான சின்ன சின்னதான சுற்றுலாத் திட்டங்கள் மனதில் அலைமோதிட்டு தானே இருக்கும். எப்போதுமே செல்லும் இடங்களை தவிர்த்து, புதிய இடங்களுக்கு செல்லும் திட்டங்கள் பயண ஒருங்கிணைப்பாளரோடு முக்கியமான வேலை தானுங்க. அப்படி, வாழ்வில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய, மனதில் நீங்கா இடத்தை பெறும் வகையிலான சிறந்த வழித்தடங்கள் குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சென்னை- பாண்டிச்சேரி
ஈசிஆர் என்றாலே இதுதான் என்பதுபோல ஒரு பிம்பத்தை வைத்திருக்கும் பாண்டிச்சேரி வழித்தடம் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றுதான். சுமார் 160 கிலோ மீட்டர் தூரமுடைய இந்த வழித்தடத்தில் 3 மணிநேரத்தில் பயணிக்கலாம். கடற்கரையை தொட்டு செல்லும் இந்த சாலையும் மனதில் இருக்கும் இறுக்கங்களை தொலைத்து வரும் இடமாகவே சென்னை மக்களுக்கு அமைந்திருக்கிறது. மகாபலிபுரம், பாண்டிச்சேரி என ஒரே நாள் அல்லது வார இறுதி சுற்றுலா செல்ல விரும்புவோர்க்கும் ஏற்ற இடங்களை கொண்ட வழித்தடம்.
Soham Banerjee

அரக்கு வேலி- விசாகப்பட்டணம்
கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்திருக்கும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் சாலையில் செல்ல நேர்ந்தால் மனதுக்கும், கண்களுக்கும் இதமான உணர்வை நிச்சயம் நீங்கள் ரசிக்கலாம். நகரத்தில், வாகன புகை மிக்க சாலையில் பயணிக்கும் அனுபவத்தை மாற்றி மனதை புத்துணர்வு பெற வைக்கும் இந்த சாலை 116 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. போரா குகைகள், தடிபுடி அணைக்கட்டு போன்றவை இந்த சாலையில் பயணிப்பவர்கள் தவறவிடக்கூடாத சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
Ashokdonthireddy

பெங்களூர்- பந்திப்பூர்
கான்கிரீட் காடுகளை பார்த்து நொந்து போன கண்களுக்கு, பசுமை மாறா காடுகளுக்கு ஒரு விசிட் அடிக்கும் வாய்ப்பை இந்த வழித்தடம் கொடுக்கும். பெங்களூரிலிருந்து மைசூர் சென்று அங்கிருந்து ஊட்டி செல்லும் சாலையை பிடித்தால் பந்திப்பூரை அடைந்துவிடலாம். பெங்களூரிலிருந்து 235 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் பந்திப்பூருக்கு இந்த கோடை விடுமுறையில் ஒரு ட்ரிப் அடிக்க தவறவிடாதீர். புதிய அனுபவத்திற்கு உத்தரவாதம் தரும்.
Kamaljith K V

பெங்களூர்- ஊட்டி
பெங்களூரிலிருந்து மைசூர் வழியாக ஊட்டி செல்லும் வழித்தடமும் இயற்கை எழில் கொஞ்சும் சாலையாக இருக்கிறது. 266 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையில் ஏராளமான உணவு விடுதிகளும் உள்ளன. மேலும், இந்த வழித்தடத்தில் மைசூர் மற்றும் ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டு வர முடியும்.
Maria Kiran

குவஹாட்டி- தவாங்
வடகழிக்கு மாநிலங்களின் இயற்கை எழிலையும், அபாயம் நிறைந்த சாலைகளில் த்ரில் பயணத்தையும் விரும்புவோர்க்கு, இந்த சாலை மிகச்சிறப்பானதாக இருக்கும். 520 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் பல சவாலான மலைப்பகுதிகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதேநேரத்தில், வழிநெடுக பரந்துவிரிந்து கிடக்கும் மலைத்தொடர்களும், இயற்கை அற்புதங்களும் இந்த பயணத்தை உங்கள் வாழ்வின் இனிமையான தருணமாக உணர வைக்கும்.
Neptune8907

யமுனா எக்ஸ்பிரஸ் சாலை
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த டெல்லிவாசிகள், இந்த சாலையில் ஒரு அதிவேக பயணத்தை மேற்கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். டெல்லியிலிருந்து மதுரா வழியாக ஆக்ராவை இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிக்கும் அனுபவம் நிச்சயம் மனதுக்கு இதமானதொரு சுகத்தை தர வல்லது.
Ian Brown

புரி - கோனார்க்
ஒடிஷாவில் உள்ள புரி நகரிலிருந்து, சூரிய கோவில் அமைந்திருக்கும் கோனார்க் நகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-203-ம் உங்கள் கேமரா கண்களை இமைக்க விடாமல் செய்யும் கொள்ளை அழகை கொண்டிருக்கிறது. கூடாரம் போல இரு புறங்களிலும் அமைந்திருக்கும் மரங்களும், நேர்கோட்டு சாலையும் நிச்சயம் புதுவிதமான அனுபவத்தை வழங்கும்.
Imahesh3847

ஜெய்பூர் - ஜெய்சால்மர்
ராஜஸ்தானின் உண்மையான கலாச்சாரம், நிலவமைப்பை நேரடியாக அனுபவிக்க வேண்டுவோர் பிங்க் சிட்டி என அழைக்கப்படும் ஜெய்சால்மரிலிருந்து, ஜோத்பூர் வழியாக பாலைவன நகரம் ஜெய்சால்மருக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம். ஜெய்சால்மரில் தங்குவதற்கு சிறப்பான ஓட்டல்களும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இந்த பயணத்தை உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும்.
Mayank Bhagya

கேங்டாக்- நது லா பாஸ்
நீங்கள் நினைத்துக் கூட பார்த்திடாத இயற்கை பொக்கிஷங்களை கொண்டிருக்கிறது வட கிழக்கு மாநிலங்கள். அதிலும் குறிப்பாக, கேங்டாக்கிலிருந்து சோம்கோ ஏரி மற்றும் நது லா கணவாய் இடையிலான வழித்தடம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் தன்மை கெலாண்டது.
Ambuj.Saxena

கொல்கத்தா- திகா
கிழக்கு இந்திய மக்களின் முக்கியமான வார இறுதி சுற்றுலாத் தலமாக விளங்கும் திகாவையும், கொல்கத்தாவையும் இணைக்கும் இந்த சாலையும் ரம்மியமான பயண அனுபவத்தை வழங்கும். 180 கிலோ மீட்டர் தூரமுடைய இந்த சாலையில் ஏராளமான தாபாக்கள் உள்ளன. மூன்று மணிநேரத்தில் செல்லக்கூடியதாக இருப்பதால் சாலைப் பயணத்தை முடித்துவிட்டு அருகில் தலங்களுக்கும் சுற்றுலா செல்லலாம்.
Enthusiast10



Click it and Unblock the Notifications








