Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் எத்தனை வகையான பயணிகள் ரயில்கள் இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?

இந்தியாவில் எத்தனை வகையான பயணிகள் ரயில்கள் இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?

By Naveen

வெள்ளைக்காரன் இந்தியா மொத்தத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தாலும் அவர்கள் செய்த சில நன்மைகளில் ஒன்று இந்தியா முழுமையையும் ரயில் மூலமாக இணைத்ததுதான். இன்று ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்கள் ரயில்கள் மூலமே இந்தியா முழுமையும் மிகக்குறைந்த செலவில் பயணிக்கின்றனர்.

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகள் ரயிலிலேயே 18விதமான ரயில்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. வாருங்கள் அந்த 18 வகை பயணிகள் ரயில்களை பற்றியும் தெரிந்துகொள்வோம்.

துரந்தோ எக்ஸ்ப்ரஸ்:

துரந்தோ எக்ஸ்ப்ரஸ்:

பாயின்ட் to பாயின்ட் பேருந்துகளை போன்றவை தான் இந்த துரந்தோ எக்ஸ்ப்ரஸ் வகை ரயில்கலாகும். துரந்தோ ரயில்கள் இடையில் எங்கும் நில்லாமல் செல்லும்.

உதாரணமாக, சென்னை சென்ட்ரல் மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் துரந்தோ ரயில் இடையில் வேறு எந்த முக்கியமான ரயில் நிலையத்திலும் நிற்காமல் மதுரைக்கு சென்றடையும்.

துரந்தோ எக்ஸ்ப்ரஸ்:

துரந்தோ எக்ஸ்ப்ரஸ்:

மற்ற விரைவு ரயில்களைக்காட்டிலும் துரந்தோ ரயில்களில் பயணிக்கையில் சில மணிநேரங்கள் முன்னதாகவே நாம் செல்ல வேண்டிய இடத்தை சென்றடையலாம் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.

துரந்தோ எக்ஸ்ப்ரஸ்:

துரந்தோ எக்ஸ்ப்ரஸ்:

துரந்தோ ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் இது தான்.

ராஜ்தானி எக்ஸ்ப்ரஸ்:

ராஜ்தானி எக்ஸ்ப்ரஸ்:

ராஜ்தானி எக்ஸ்ப்ரஸ் என்பவை அந்தந்த மாநில தலைநககரங்களில் இருந்து இந்திய தலைநகரான புதுடில்லி வரை இயக்கப்படும் ரயில்கலாகும்.

1969ஆம் ஆண்டிலிருந்து இயக்கப்படும் இவ்வகை ரயில்கள் மணிக்கு 145கி.மீ வேகம் வரை செல்லக்கூடியவை.

சென்னையிலிருந்து புதுடெல்லி வரை 'சென்னை ராஜ்தானி எக்ஸ்ப்ரஸ்' என்ற ரயில் இயக்கப்படுகிறது.

AC எக்ஸ்ப்ரஸ்:

AC எக்ஸ்ப்ரஸ்:

AC எக்ஸ்ப்ரஸ் வகை ரயில்கள் முழுக்க முழுக்கவே குளிர்சாதனவசதியுடைய பெட்டிகளை கொண்ட ரயில்கலாகும். இவை கிட்டத்தட்ட துரந்தோ ரயில்களை போன்றவை தான் என்றாலும் வழியில் சில மிக முக்கியமான ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன.

இவ்வகை ரயில்கள் மணிக்கு 130கி.மீ வேகம் வரை செல்கின்றன.

சதாப்தி எக்ஸ்ப்ரஸ்:

சதாப்தி எக்ஸ்ப்ரஸ்:

பயணிகள் ரயிலில் மிகமுக்கிய ரயிலாக சொல்லப்படுவது சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ஆகும். ஒரு மாநிலத்திற்கு உள்ளேயோ அல்லது இரண்டு மாநிலங்களிடையேயோ இருக்கும் முக்கிய நகரங்களை சதாப்தி எக்ஸ்ப்ரஸ் இணைக்கிறது.

சதாப்தி எக்ஸ்ப்ரஸ்:

சதாப்தி எக்ஸ்ப்ரஸ்:

பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ஒரு தினசரி ரயிலாகும். காலையில் ஒரு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் மாலையில் மீண்டும் அதே ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ்:

டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ்:

சதாப்தி ரயிலை போன்றே இரு நகரங்களுக்கிடையே இயங்கும் தினசரி ரயில் தான் இந்தடபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ் என்றாலும் இவை இரண்டு அடுக்கு இருக்கைகள் கொண்டதாகவும், முழுக்க முழுக்க AC வசதி செய்யப்பட்டதாகவும் இருக்கிறது.

டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ்:

டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ்:

சென்னை - பெங்களுர் டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ் ரயிலின் ஒரு புகைப்படம்.

ஜன சதாப்தி எக்ஸ்ப்ரஸ்:

ஜன சதாப்தி எக்ஸ்ப்ரஸ்:

ஜன சதாப்தி எக்ஸ்ப்ரஸ் என்பது சாதாரண சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயில்களைக் காட்டிலும் சற்றே பயணக்கட்டணம் குறைவான ரயில்கள் ஆகும். இவற்றில் AC மற்றும் non-AC பேட்டிகள் உண்டு.

இவை மணிக்கு 130கி.மீ வேகம் வரை போகக்கூடியவை.

கரிப் ரத்:

கரிப் ரத்:

கரிப் ரத் என்பதற்கு ஏழைகளின் ரதம் என்று பொருளாகும். மூன்றடுக்கு AC படுக்கை வசதி கொண்ட இந்த கரிப் ரத் ரயிலில் மற்ற ரயில்களில் மூன்றடுக்கு AC படுக்கை வசதி டிக்கெட் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு செலுத்தினால் போதுமானது.

ஏழைகளும் AC படுக்கை ரயிலில் செல்லும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதே இந்த கரிப் ரத் ரயில் ஆகும்.

சம்பர்க் கிரந்தி எக்ஸ்ப்ரஸ்:

சம்பர்க் கிரந்தி எக்ஸ்ப்ரஸ்:

ராஜ்தானி எக்ஸ்ப்ரஸ் ரயில்களை போல தான் இந்த சம்பர்க் கிரந்தி எக்ஸ்ப்ரஸ் இயக்கப்படுகிறது. ராஜ்தானி ரயில் மாநில தலைநகரங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால்சம்பர்க் கிரந்தி எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் ஒரு மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து டெல்லி வரை இயக்கப்படுகின்றன.

யுவா எக்ஸ்ப்ரஸ்:

யுவா எக்ஸ்ப்ரஸ்:

துரந்தோ ரயில் போலவே தான் இந்த யுவா எக்ஸ்ப்ரஸ் ரயிலும் இரு நகரங்களுக்கிடையே பாயின்ட் to பாயின்ட் முறைப்படி இயக்கப்பட்டாலும் இந்த ரயிலில் இருக்கும் 60% இருக்கைகள் 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

அவ்வளவாக யுவா எக்ஸ்ப்ரஸ் வெற்றிபெறவில்லை. இன்று இவை டெல்லி-மும்பை, டெல்லி-ஹோவ்ராஹ் இடையே மட்டுமே இயக்கப்படுகின்றன.

கவிகுரு எக்ஸ்ப்ரஸ்:

கவிகுரு எக்ஸ்ப்ரஸ்:

இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரபீந்தர நாத் தாகூரை கௌரவிக்கும் பொருட்டு 2011ஆம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பெனர்ஜியால் தொடங்கிவைக்கப்பட்டதே இந்தகவிகுரு எக்ஸ்ப்ரஸ் ஆகும்.

விவேக் எக்ஸ்ப்ரஸ்:

விவேக் எக்ஸ்ப்ரஸ்:

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே இந்த விவேக் எக்ஸ்ப்ரஸ் ரயிலாகும்.

நான்கு வெவ்வேறு வழித்தடங்களில் விவேக் எக்ஸ்ப்ரஸ் இயக்கப்படுகிறது.

இன்டர் சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ்:

இன்டர் சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ்:

சாதாரண எக்ஸ்ப்ரஸ் ரயில்களை காட்டிலும் மிகவேகமாகவும், குறைவான நிறுத்தங்களிலும் நின்று செல்லும் ரயில்கள் தான் இன்டர் சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் ஆகும்.

பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில்களில் சாதாரண எக்ஸ்ப்ரஸ் ரயில்களைக்காட்டிலும் கட்டணம் சற்றே அதிகம் ஆகும்.

எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்:

எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்:

எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் தான் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பொதுவான பயணிகள் ரயிலாகும். இவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில்களை காட்டிலும் இடையில் அதிக நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

ராஜ்யராணி எக்ஸ்ப்ரஸ்:

ராஜ்யராணி எக்ஸ்ப்ரஸ்:

ஒரு மாநிலத்திலிருக்கும் முக்கிய நகரங்களை அம்மாநிலத்தின் தலைநகருடன் இணைப்பவை இந்த ராஜ்யராணி எக்ஸ்ப்ரஸ் ரயில்கலாகும்.

பாஸ்ட் பேசஞ்சர்:

பாஸ்ட் பேசஞ்சர்:

எக்ஸ்ப்ரஸ் ரயில்களை போன்றவையே தான் பாஸ்ட் பேசஞ்சர் ரயில்கள் என்றாலும் இந்த ரயில் தான் செல்லும் இடத்திற்கு இடையிலிருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்கிறது.

இவை பொதுவாக 40-80கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன.

சப்அர்பன் ரயில்கள்:

சப்அர்பன் ரயில்கள்:

மும்பை, சென்னை, புனே போன்ற பெருநகரங்களில் மட்டுமே இயக்கப்படும் பயணிகள் ரயில் தான் சப்அர்பன் ரயில்கள் ஆகும். இவற்றில் முன்பதிவு பேட்டிகள் கிடையாது.

சுற்றுலா ரயில்கள்:

சுற்றுலா ரயில்கள்:

ஆடம்பரமாக இந்தியாவை சுற்றிப்பார்க்க ஆசைப்படுபவர்களுக்காகவே இந்திய ரயில்வே வழங்கும் சேவை தான் இந்த சுற்றுலா ரயில்கள் ஆகும். மகாராஜா எக்ஸ்ப்ரஸ், டெக்கன் குயின் எக்ஸ்ப்ரஸ் போன்ற இந்த ரயில்களில் கட்டணமே லட்ச ரூபாயை தொடுகின்றன.

பயண வழிகாட்டி:

பயண வழிகாட்டி:

இந்தியாவில் ஓடும் ரயில்கள் பற்றிய முழுமையான விவரங்களை தமிழில் இருக்கும் ஒரே முழுமையான பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்

Read more about: trains off beat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X