» »உத்திரமேரூர் சுற்றுலா... கல்வெட்டுக்கள் சொல்வதென்ன தெரியுமா?

உத்திரமேரூர் சுற்றுலா... கல்வெட்டுக்கள் சொல்வதென்ன தெரியுமா?

Posted By: Udhaya

உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் என்பது காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களைக் குறிக்கிறது.

பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் இக் கல்வெட்டுக்களில் உள்ளது. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்,10ஆம் நூற்றாண்டு கால தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளன.

பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன.

அந்த காலத்திலேயே மாண்பு தவறாமல் ஆட்சியில் மக்களையும் பங்கு கொள்ளச்செய்த தமிழர்களையும், அவ்வூரின் சிறப்பையும் இங்கு காண்போம் வாருங்கள்.

உத்திரமேரூர்

உத்திரமேரூர்


உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம்,பாண்டவவனம், ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், உத்திரமேலூர், பஞ்சவரத ஷேத்திரம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை என்றும் அழைக்கப்பட்டுள்ளன.

sowrirajan s

எங்குள்ளது

எங்குள்ளது

காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் பண்டையகால வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் இந்த கல்வெட்டுக்கள் உள்ளன.

ஊரின் சிறப்பு

ஊரின் சிறப்பு


உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அடங்கும். அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்களில் உள்ளன.

McKay Savage

மக்களாட்சி

மக்களாட்சி

இந்த ஊரில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் மக்களாட்சி முறையும், தேர்தல் முறையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி மாண்பு காத்த தமிழர்களும், இந்த ஊரின் சிறப்பும் உலகறியச் செய்யப்படவேண்டியதாகும்.

Abhinav Rajagopal

குடவோலை முறை

குடவோலை முறை

உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது.

ஊராட்சி முறை

ஊராட்சி முறை

உத்திரமேரூரில் அந்த காலத்திலேயே ஊராட்சி முறை இருந்துள்ளது.

ஊராட்சி பதவிகளில் போட்டியிட தகுதிகள்

ஊராட்சி பதவிகளில் போட்டியிட தகுதிகள்

கால் வேலி நிலம், சொந்த மனை, 30 லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடலாம்.

நிபுணராக இருத்தல் வேண்டும்

நிபுணராக இருத்தல் வேண்டும்

வேதம், சாத்திரம், தொழில் இவற்றில் நிபுணராக இருத்தல் வேண்டும் என்றும் அந்த தகுதியுடையோரே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

ஏமாற்றுப் பேர்வழிகள், அறம் தவறியவர்கள்

ஏமாற்றுப் பேர்வழிகள், அறம் தவறியவர்கள்

ஏமாற்றுப் பேர்வழிகள், அறம் தவறியவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற விதிமுறையும் இருந்துள்ளது.

இந்த சட்டம் மட்டும் இப்ப இருந்தா யாரும் போட்டியிட முடியாதுல்ல...

அதிரடி முடிவு

அதிரடி முடிவு


தன் ரத்த சொந்தங்களின் பெயர்களை குடவோலைக்குள் வாரிய உறுப்பினர் பதவிக்காக எழுதி போடக்கூடாது என்பது முக்கிய விதி. அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் யாரும் இந்த பதவிக்கு போட்டியிட்டிருக்ககூடாது என்பது அதிரடியான விதிகள். அப்படி அந்த காலத்திலேயே கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு மக்களாட்சியின் மாண்பு காக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.

இனி அந்த இடங்கள் இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

உத்திரமேரூருக்கு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் முதலிய பகுதிகளிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பல்வேறு கோயில்களையும், சுற்றுலாத் தளங்களையும் கொண்டது. இதன் அருகிலேயே விழுப்புரம் மாவட்டத்திலும் காண்பதற்கு பல இடங்கள் உள்ளன.

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோயில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்


Ssriram mt

காமாட்சி அம்மன் கோயில்

காமாட்சி அம்மன் கோயில்


இங்கு மூலக் கடவுளான காமாட்சி அம்மன், நின்ற கோலத்திலில்லாமல் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இங்கு அம்மன், யோக நிலையில் அமர்ந்த வண்ணம், அமைதியும் கருணையும் கொண்டு அருள் பாலிக்கிறார். ஆச்சரியமாக, இந்துக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் கடவுளான பார்வதி தேவிக்கு, இந்நகரில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும்.

இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்

wiki

 வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

உள்ளூர்வாசிகள், இக்கோயிலோடு, ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலையும் சேர்த்து, மூவரும் வாசம் செய்யும் தலம் என்ற அர்த்தம் விளங்குமாறு, "மும்மூர்த்திவாசம்" என்று அழைக்கின்றனர்.

Ssriram mt

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

காஞ்சி குடில், காஞ்சிபுரம்

காஞ்சி குடில், காஞ்சிபுரம்


மூதாதையர் வழி வந்த வீடு ஒன்றை, கலாச்சார விடுதியாக மாற்றி, "காஞ்சி குடில்" என்று பெயரிட்டுள்ளனர். எனினும், இது மட்டுமே அதன் கவர்ந்திழுக்கும் அம்சமன்று. காஞ்சிபுரத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடந்த காலத்தை மனதில் கொண்டே இவ்விடத்தை உருவாக்கியுள்ளனர்.

tshrinivasan

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

கைலாசநாதர் கோயில்

கைலாசநாதர் கோயில்

சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக பெரிதும் பேசப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரச்சட்டங்கள் பலவற்றில், சிவபெருமான், நடராஜர் தோற்றத்தில் காணப்படுகிறார்.

Aaroo4

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

காமகோடி மடம்

காமகோடி மடம்

காஞ்சி காமகோடி மடம், ஆதி சங்கரரால், தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் நிறுவப்பட்டது. இந்த மடம் இந்துக்களால் மிகவும் போற்றப்படும் ஒரு ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. மடத்தைச் சேர்ந்த ஐந்து பஞ்ச பூத ஸ்தலங்களுள் காஞ்சி மடமும் ஒன்று.

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

வைகுந்தப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

வைகுந்தப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்


வைகுந்தப் பெருமாள் கோயில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது.

Ssriram mt

Read more about: kanchipuram, travel, temple