உலகின் வல்லரசு நாடுகளில் மட்டுமே இருக்கும் சாய்ந்த ரயில்கள் (Tilting trains) இப்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. விமான நிலையம் போன்ற தோற்றத்தில் ரயில் நிலையம், அதிவேக வந்தே பாரத் ரயில்கள், வியப்பில் ஆழ்த்தக்கூடிய சொகுசு ரயில்கள் என இந்தியன் ரயில்வே பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இப்போது இந்த பட்டியலில் பயணிகளுக்கு புது அனுபவம் தரக்கூடிய டில்டிங் ரயில்களும் சேர்ந்துள்ளன. டில்டிங் ரயில்கள் என்றால் என்ன? அதன் சிறப்பம்சம் என்ன என்பது குறித்து இங்கே காண்போம்!

டில்டிங் ரயில்கள் என்றால் என்ன?
டில்டிங் ரயில்கள் என்பது வேறொன்றும் இல்லை, ரோலர் கோஸ்டரில் ரைடு போவது போன்ற ஒரு உணர்வை தான் டில்டிங் ரயில்கள் ஏற்படுத்துகின்றன. டில்டிங் ரயில்கள் வழக்கமான அகலப் பாதை தடங்களில் அதிக வேகத்தை இயக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டுள்ளன. டில்டிங் ரயில்கள் வழக்கமான அகலப் பாதையில் அதிக வேகத்தில் இயக்க அனுமதிக்கும் ஒரு பொறிமுறையைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சாதாரண ரயிலுக்கும் டில்டிங் ரயிலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உதாரணத்திற்கு ஒரு சாதாரண ரயில் வளைவில் வேகமாக சென்றால் பொருட்களை சரிய வைக்கும் உணர்வு ஏற்படும். இது அமர்ந்திருக்கும் பயணிகளை ஆர்ம்ரெஸ்ட்டால் நசுக்குவதை உணர வைக்கும் போது, நிற்கும் பயணிகள் தங்கள் சமநிலையை இழக்கின்றனர். ஆனால் அதுவே நீங்கள் டில்டிங் ரயிலில் சென்றால் இப்படிப்பட்ட அசௌகரியம் எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
டில்டிங் ரயில்கள் எவ்வாறு இயங்குகின்றன?
டில்டிங் ரயிலில் இயக்கக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால் ரயிலுக்கு உள்ளே அமர்ந்து இருக்கும் பயணிகளும், பொருட்களும் பக்கவாட்டு சக்திகளுக்கு உள்ளாக்கப்படும். அதாவது, ரயில் பாதையில் உள்ள வளைவை நோக்கி வண்டி சாய்வதற்கு ரயிலின் வடிவமைப்பு உதவும். எனவே இது ரயிலின் உள்ளே அனுபவிக்கும் விசையை ஈடுசெய்யும், குறிப்பாக அதிக வேகத்தில் வளைவுகளை நெருங்கும் போது.
உலகில் எங்கு எல்லாம் டில்டிங் ரயில்கள் உள்ளன?
இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, பின்லாந்து, ரஷ்யா, செக் குடியரசு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய 11 நாடுகளில் டில்டிங் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்தியாவில் கூடிய சீக்கிரம் இந்த ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இந்த லிஸ்டில் இந்தியா 12 ஆவது இடம் பிடிக்கும். இது உங்களுக்கு வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்யும்.
2025 க்குள் இந்தியாவில் டில்டிங் ரயில்கள்
சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் ஸ்பானிய உற்பத்தியாளர் டால்கோவுடன் இந்திய ரயில்வே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்படும். அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், 2025-26க்குள் நீங்கள் இந்த ரயில்களில் பயணம் செய்யலாம் பயணிகளே!