» »உலகின் மிக நீளமான ரங்கோலி கோலம்.. ஆத்தாடி எத்தத்தண்டி!!!

உலகின் மிக நீளமான ரங்கோலி கோலம்.. ஆத்தாடி எத்தத்தண்டி!!!

Posted By: Udhaya

கோலங்கள் வீட்டின் முற்றத்தை அழகுபடுத்த மட்டுமின்றி, சிறுசிறு உயிரினங்கள் அதை உண்டு வாழும் என்றுதான் நம் முன்னோர்கள் கூறிப் பழக்கப்படுத்தியுள்ளனர்.

நாளடைவில் அவசரத்துக்கு வாக்கப்பட்ட மனிதன் எல்லாத்தையும் எளிமையாக்க, கோலங்களும் காணாமல் போகி ஸ்டிக்கர்களாக வந்து நிற்கின்றன.

நவீன உலகின் கண்டுபிடிப்பான வண்ணப்பூச்சு கோலங்கள் காண்பதற்கு கண்ணுக்கழகாகவும், அதே நேரம் எளிதில் அழியாமலும் இருப்பதால் பல பலன்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் எத்தனையோ உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதேபோல் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு சாதனையும் இந்தியாவின் பாரம்பரியத்தை ஒத்தே அமைக்கப்பட்டிருக்கும்.

அதுபோல்தான் இந்த ரங்கோலி கோலமும். எவ்வளோ நீளம்னு தெரிஞ்சா வாய பிளப்பீங்க.. எங்கே எதற்கு எவ்வளவு நீளம் என்பது பற்றி காணலாம் வாருங்கள்.

 கொல்கத்தா

கொல்கத்தா


உலகின் மிக நீளமான தெருவில் வரையப்பட்டுள்ள ரங்கோலி கோலம் கொல்கத்தாவில் உள்ளது. இது உலக சாதனை ஆகும்.

துர்க்கை அம்மன்


துர்க்கையம்மனை வரவேற்கும் பொருட்டு இந்த கோலத்தை வரைந்துள்ளதாக தெரிகிறது. உலகின் மிக நீளமான இந்த கோலம் கொல்கத்தாவின் ஏரிக்கரைத் தெருவில் உள்ளது.

சமாஜ் சேவி பூஜை பந்தல்

சமாஜ் சேவி பூஜை பந்தல்

சமாஜ் சேவி பூஜை பந்தல் எனும் திருவிழாவுக்காக அதுதான் நம்ம ஊரு தசரா மாதிரி. இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

எவ்வளவு நீளம் தெரியுமா?

இந்த சாலை கிட்டத்தட்ட 1.23 கிமீ நீளமுடையது. இந்த சாலை முழுவதும் ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது.

யார் யார் வரைந்தது?

யார் யார் வரைந்தது?

கலை கல்லூரி மாணவர்கள் 325 பேர் சேர்ந்து இந்த கோலத்தை 18 மணி நேரத்தில் வரைந்துள்ளனர். இதை வரைய 280 லிட்டர் பெயிண்ட் செலவாகியுள்ளது.

அல்பனா

அல்பனா

வங்க மொழியில் ரங்கோலி என்பதற்கு அல்பனா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

18 மணி நேர கலை


திங்கள் கிழமை இரவு தொடங்கிய இந்த கோலம் வரையும் நிகழ்வு இரவு முழுவதும் நடைபெற்று செவ்வாய்கிழமை காலையில் முடிவடைந்தது.

துர்க்கை பூசை

துர்க்கை பூசைக்கு சில நாள்களே இருக்கும் நிலையில், மேற்கு வங்க மாநில மக்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாகவே இந்த உலக சாதனை கோலம் வரையப்பட்டுள்ளது.

கிரியேட்டிவ் கொல்கத்தா

சந்தேகமே வேண்டாம் கொல்கத்தா இதுபோன்ற கிரியேட்டிவ் யோசனைகளை அவ்வப்போது செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்த தசராவுக்கு கொல்கத்தாவுக்கு சென்றீர்களானால் புல்டைம் என்டர்டெயின்மண்ட் கேரண்டி.

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்