» »ராமேஸ்வரம் அழியப்போகிறதா? பதைபதைக்கும் அறிவியல் கூற்றுகள்

ராமேஸ்வரம் அழியப்போகிறதா? பதைபதைக்கும் அறிவியல் கூற்றுகள்

Posted By: Udhaya

இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். மேலும் சுற்றுலாப் பிரியர்களுக்கும் தனுஷ்கோடியை பற்றி தெரிந்திருக்கும்.

வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு

கொஞ்சம் வயதானவர்களிடமும், பெரியவர்களிடமும் கேட்கும்போதுதான் தனுஷ்கோடியைப் பற்றி உண்மையான அழகைப் பற்றி தெரிந்துகொள்ளமுடியும்.

இஸ்லாமியர்களுக்கு வரம் தரும் பெருமாள் கோயில்.. எங்கே தெரியுமா?

அப்படி அழகுகள் நிறைந்த சுற்றுலாத் தளமான தனுஷ்கோடி பெரும்துயரத்திலிருந்து தற்போதுதான் மீண்டு வந்து அழகாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அறிவியலாளர்களின் இந்த கருத்தைக் கேட்டால் அச்சம் வருகின்றது. ஆம்... தனுஷ்கோடி அழியப்போகிறதாம்...

கன்னியாகுமரி பாதிப்பு பற்றி முன்பே கணித்த பஞ்சாங்கம் - இன்னும் என்னென்ன?

சுனாமி 2004

சுனாமி 2004

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழகம் உட்பட உலகின் சில இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் தனுஷ்கோடி.

இளைஞர்களுக்கு தெரிந்தது

இளைஞர்களுக்கு தெரிந்தது

இன்றைய இளைஞர்களுக்கு பெரும்பாலும் இந்த நிகழ்வு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலைப் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

Nsmohan

அழிந்துபோன தனுஷ்கோடி

அழிந்துபோன தனுஷ்கோடி

1964'ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது.

rajaraman sundaram

 ரயில் பாதை

ரயில் பாதை

தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது. துரதிருஷ்டவசமாக, சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்த ரயிலும் அடித்துச் செல்லப்பட்டது

ShakthiSritharan

இரண்டாயிரம் பேரை பலிகொண்ட கோரம்

இரண்டாயிரம் பேரை பலிகொண்ட கோரம்


அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த இயற்கை சீற்றத்தால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஒரு இக்கட்டான கட்டத்தில் அதிர்ச்சிக்குரிய முடிவெடுத்தது தமிழக அரசு.

Achuudayasanan

 வாழத் தகுதியற்ற தனுஷ்கோடி

வாழத் தகுதியற்ற தனுஷ்கோடி

இதன் பின்னர், தமிழ் நாடு அரசு, இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது. இதனால் இங்கு இருந்த வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பலர் ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்தனர். தமிழக அரசு சார்பாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Drajay1976

அதன்பின்னர்

அதன்பின்னர்

தனுஷ்கோடி ஒரு அருங்காட்சியகம் போல், சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களும், ஒரு துயரத்தின் மெளன சாட்சியாக இருக்கிறது.

Soorajna

 மீனவர்கள் வாழும் தனுஷ்கோடி

மீனவர்கள் வாழும் தனுஷ்கோடி

இன்றும் இங்கு சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு மீன் பொறித்துத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

Nsmohan

சூடுபிடித்த சுற்றுலா

சூடுபிடித்த சுற்றுலா

கடந்த 20 ஆண்டுகளாகவே படிப்படியாக வளர்ந்துவிட்ட தனுஷ்கோடி தற்போது தமிழ்நாட்டின் மிகமுக்கிய சுற்றுலாத் தளமாகவிளங்குகிறது. பொழுது போக்கிற்காகவும், இன்பமான பயணத்திற்காகவும் இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடியை மெருகேற்றி வருகின்றனர்.

Chandra

 நெகிழி அரக்கன்

நெகிழி அரக்கன்

உலகையே ஆட்டிப்படைக்கும் நெகிழி அதாவது பிளாஸ்டிக்தான் தனுஷ்கோடியின் முதல் எதிரி என்று சொல்லலாம். பெரும்பாலும், மலைப்பிரதேசங்களில் இருக்கும் பிளாஸ்டிக் கட்டுப்பாடு இங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

TNSE Arumbumozhi vlr

இக்கட்டான தருணங்கள்

இக்கட்டான தருணங்கள்

பிளாஸ்டிக் மட்டுமல்லாது. 100 பேர் வரும் இடத்திற்கு ஆயிரம் பேர் வருகை தருவதால் நிலவியல் அமைப்பும், வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் சச்சரவு, குடிநீர் தேவை, கொஞ்சமும் ஒவ்வாத விசயங்களாகிப் போகின்றன. மேலும் அடிக்கடி நிகழும் கடற்கரை மாற்றங்களும், புவியியல் அமைப்பில் இந்திய தீபகற்பத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நகரம் அழிவதோடு சுற்றியுள்ள ராமேஸ்வரம் போன்றவற்றுக்கும் பேராபத்தை விளைவிக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

rajaraman sundaram

 தனுஷ்கோடி

தனுஷ்கோடி

1964 புயலால் சிதிலமடைந்த தேவாலயம்!

Chenthil

யாருமில்லாத தீவில் நந்தி ஒன்று சிவனுக்குகாக காத்திருக்கிறது

யாருமில்லாத தீவில் நந்தி ஒன்று சிவனுக்குகாக காத்திருக்கிறது

தேவாலயம் போல ஒரு சிவன் கோவிலும் இருந்திருக்கிறது. அதுவும் புயலால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

Rohithriaz

கடற்கரை

கடற்கரை


ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது தனுஷ்கோடி.

Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி


சிதைந்த தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல் முனை கடற்கரை.

Photo Courtesy : ArunElectra

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

தனுஷ்கோடி பேருந்து சாலை முடிவடையும் இடத்தில் உள்ள சிதலமடைந்த மீன்பிடி படகு.

Photo Courtesy : Nsmohan

தனுஷ்கோடி சுற்றுலா

தனுஷ்கோடி சுற்றுலா

பயணிகளை கடற்கரைக்கு கொண்டு செல்லும் சிற்றுந்துகள்!

Photo Courtesy : Nsmohan

 தனுஷ்கோடி

தனுஷ்கோடி


தனுஷ்கோடி, இங்கிருந்து இலங்கை 15 கி. மீ., தொலைவில் உள்ளது.

Photo Courtesy : Nsmohan

 தனுஷ்கோடி

தனுஷ்கோடி

பேருந்துகள் கிடையாது; இது போல மினி லாரிகள்தான் சுற்றுலா பயணிகளுக்காக‌!

Photo Courtesy : Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

இது தனுஷ்கோடியின் ரயில் நிலையம் நம்ப முடிகிறதா ஊரே புயலில் அடித்துச் சென்ற பிறகு ரயில் நிலையம் எப்படியிருக்கும் ?

Photo Courtesy : Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

இது தனுஷ்கோடியின் ரயில் நிலையம் நம்ப முடிகிறதா ஊரே புயலில் அடித்துச் சென்ற பிறகு ரயில் நிலையம் எப்படியிருக்கும் ?

Photo Courtesy : Nsmohan

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

கடற்கரையில் ஒரு வெளிநாட்டு தம்பதியர்!

mutta

 படகு - ஒரு மெளன சாட்சியாக தனுஷ்கோடி கடற்கரையில்!

படகு - ஒரு மெளன சாட்சியாக தனுஷ்கோடி கடற்கரையில்!


படகு - ஒரு மெளன சாட்சியாக தனுஷ்கோடி கடற்கரையில்!

Read more about: travel rameshwaram

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்