Search
  • Follow NativePlanet
Share
» »புது வருஷத்திற்கு இந்த ஊருக்கு ஏன் அவசியம் நீங்க போய் பாக்கனும் தெரியுமா? இதாங்க ஸ்பெஷல்!!

புது வருஷத்திற்கு இந்த ஊருக்கு ஏன் அவசியம் நீங்க போய் பாக்கனும் தெரியுமா? இதாங்க ஸ்பெஷல்!!

By Bala Karthik

ஒரு சுற்றுலா பயணியாக, பலரும் வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் தன் விடுமுறையை திட்டமிட்டு வகுப்பது வழக்கமாக; இந்த நேரமானது நம் போக்கில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாதக்காலங்களில் பல இடத்திற்கு பயணம் செய்ய, உள்ளூர் விழாக்களும், விருந்துகளும் என அழகிய கோணமானது கண்களுக்கு விருந்து படைத்திடுகிறது.

அப்பேற்ப்பட்ட இலக்குகளுள் ஒன்றாக கொச்சி அமைய, டிசம்பர் மாதத்தின் கடைசி வாரம், கொச்சி திருவிழாவை காண துடிப்புடன் நாம் கிளம்பிடலாம். இந்த கொச்சி திருவிழா ஓர் மறைமுக சந்தோஷத்தை நம் மனதில் தர, அவை அனுபவமிக்க தேவைகளுடன் நடந்தேற; இதனால் சிறப்பாக அமைவதோடு, வருடத்தை சிறப்பாக வழி அனுப்பி வைக்கவும் முடியக்கூடும். இந்த விடுமுறையானது தொடக்க பாணியாக, பலவிதம் கொண்டு அமைய, மகிழ்ச்சி உருவாக்கம், அதோடு இணைந்த நூறு பேர் உடனான விருந்துகள் என களைக்கட்ட புது வருடத்தை புண்முறுவல் பூக்க வரவேற்கவும் நம்மால் முடிகிறது.

கொச்சியானது மணப்பெண்ணாக அலங்கரிக்கப்படுகிறது?

கொச்சியானது மணப்பெண்ணாக அலங்கரிக்கப்படுகிறது?

கொச்சியை இந்த விழாக்காலத்தில் ‘அரபிக்கடலின் இராணி' என அழைக்கப்பட, மணப்பெண்ணை போல் இந்த வருட விழாவிற்கு மட்டும் கொச்சியை அலங்கரிப்பது வழக்கமாகிறது. இந்த ஒட்டு மொத்த இடமும் ஒவ்வொரு வருடம் காத்திருக்க, ஒவ்வொரு வருடமும் இன்னும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டும் வருகிறது.

இது வழக்கமாக டிசம்பர் மாதம் 23 முதல் தொடங்கி, ஜனவரி 1 வரை நடைப்பெற; கொச்சி கோட்டையில் இது நடக்கிறது. கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டமாக இது அமைய, சந்தோஷமானது இரட்டிப்பாக கிடைப்பதோடு, விளையாட்டும் இரு மடங்காகவே காணப்படுகிறது. இதன் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த விழாவானது அனைவரையும் ஈர்த்திட, போர்த்துக்கீசிய விருப்பப்படி, பாப்பாஞ்சியின் கொடும்பாவி அல்லது முதியவர் உருவபொம்மை எரிக்க, 31ஆம் தேதி டிசம்பர் மாதம் நள்ளிரவு நெகிழவைக்கும் வகையில் அது அமைகிறது.

PC: laloking97

 போர்த்துக்கீசிய பிணைப்பு:

போர்த்துக்கீசிய பிணைப்பு:

இந்த விருப்பமானது 33 வருடங்களாக நடந்துவர, 1984 ஆம் ஆண்டு, ஒரு வயதானவர் உருவத்தை, அதாவது தாடி வைத்த ஐரோப்பிய மனிதரை கடற்கரையில் எரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், உள்ளூர் யூதர்களால் ஒத்த விருப்பமானது கடைப்பிடிக்கப்பட, அமைச்சரின் உருவபொம்மை மீது கற்கள் விட்டு வீசியதாகவும், அவர் செய்த கொடுமைக்கு எதிர்ப்பாகவும் அந்த கல்வீச்சு நடத்தப்பட்டது. இதேபோல், இராவணனின் உருவப்பொம்மையானது இங்கே தசராவின்போது எரிக்கப்படுகிறது. இந்த விருப்பமானது புது வருடம் தொடங்குவதற்கு முன்னே பழையன யாவும் கழிவதனை அடையாளப்படுத்துகிறது.

இந்த திருவிழாவானது அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட, திருவிழாவின் கொடியானது வாஸ்கோட காமா சதுரத்தில் ஏற்றப்பட, இது போர்த்துகீசியர்களின் பாரம்பரியத்தை கொண்டு கருதப்படுகிறது. குத்து சண்டை, மல்யுத்தம், சைக்கிள் ரேஸ் பயணம், படகுப்பயணம், நீச்சல் போட்டி, போர் தொட்டி, கடற்கரையில் கைப்பந்து விளையாட்டு என பல போட்டிகளும் காணப்பட இவை யாவும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நம்மை மகிழ்ச்சியில் திளைக்க செய்கிறது.

ஆடம்பரமான ஆடைகள் மற்றும் வண்ணம் பொங்கும் ஊர்வலம்:

ஆடம்பரமான ஆடைகள் மற்றும் வண்ணம் பொங்கும் ஊர்வலம்:

உடுத்தப்பட்ட ஆடம்பரமான உடைகள், அனைத்து தரப்பினரின் ஒற்றுமையை நிலை நாட்ட, உற்சாகம் பொங்க எரித்திட, நிறுத்தமற்ற ஆற்றலையும் அவர்கள் கொள்கின்றனர். இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக, மாபெரும் ஊர்வலமானது புத்தாண்டு அன்று காணப்பட, சண்டி மேளம் முழங்க, இசை பொங்க, காட்சிகளால் கண் கலங்க அலங்கரிக்கப்பட்ட யானையுடன் இந்த அணிவகுப்பானது மாலை 4 மணிக்கு தொடங்க, சுமார் 70 அடி கொச்சி கோட்டைக்கு செல்ல, இரவில் கடற்கரையில் அனைவரும் சேர்கின்றனர்.

வேலி தரைத்தளத்தில் மாபெரும் ஆலமரமானது விழாக்காலத்தில் ஒளியூட்டப்பட, இந்த நகரத்தின் மாபெரும் கிருஸ்துமஸ் மரமாகவும் இதனை மாற்றப்பட, அவை பல மக்களால் வரைந்த வண்ணம் காணப்படுகிறது. கொச்சி கோட்டையின் அனைத்து வீடுகளும், கட்டிடங்களும், விழாக்கோலம் பூண்டு தேவதையாக விளக்குகளால் அலங்கரிக்க, மற்ற வண்ணமயமான அலங்காரங்களும் இங்கே மேலும் அழகுப்படுத்துகிறது இவ்விடத்தை. இந்த வாஸ்கோட காமா சதுரம் மற்றும் தெருக்களில் தற்காலிக கடைகள் காணப்பட, அவர்கள் நினைவு பொருட்கள், செயற்கை அணிகலன்கள், பாரம்பரிய உடைகள் என பலவற்றையும் விற்கின்றனர்.

PC: Official Page

எப்படி நாம் அடைவது?

எப்படி நாம் அடைவது?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

கொச்சி கோட்டையின் அருகாமையில் காணப்படும் விமான நிலையமாக நெடும்பஞ்சேரியின் கொச்சி சர்வதேச விமான நிலையமானது இங்கிருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த விமான நிலையமானது முக்கிய விமான நிலையமான பெங்களூரு, சென்னை, மும்பை என நாடு முழுவதும் பல இடங்களுடன் இணைந்து காணப்பட, சில விமானங்கள் அயல் நாட்டை நோக்கியும் பறக்கிறது.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி?

அருகாமையில் காணப்படும் இரயில் நிலையமாக எர்னாக்குளம் சந்திப்பு காணப்பட, இங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த நிலையமானது கேரளா முழுவதுமான முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்க, மாநிலத்தின் வெளிப்புறத்திலும் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

இந்த இடத்தை அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக, சாலை பயணம் அல்லது படகு சேவையானது அமைய, எர்னாக்குளம் ஜெட்டி முதல் கொச்சி கோட்டை வரை காணப்படுகிறது. சாலை வழியான இணைப்பானது சிறந்த தேர்வாக அமைய, எண்ணற்ற பேருந்துகளும் எர்னாக்குளத்திலிருந்து கொச்சி கோட்டைக்கு காணப்படுகிறது.

PC: Sooraj Kenoth

Read more about: welcome 2018 travel kochi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more