» »டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?

டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?

Written By: Balakarthik Balasubramanian

ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் அமைந்திருக்கும் இந்த புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய லகூன் என்றழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 90 சதவிகித ஏரி வீழ்ச்சி ஆந்திர பிரதேசத்திலும், ஏனைய 10 சதவிகித வீழ்ச்சியானது தமிழ்நாட்டின் பாதுகாப்பு பகுதிகளையும் சார்ந்திருக்கிறது. இந்த அழகிய ஏரியானது 'உப்பு நீர்' வகையை சார்ந்திருக்க, அந்த தண்ணீர் தூய்மையற்று உப்பாக இருக்கும் போதிலும் ஒருபோதும் கடல் நீரை போன்று காணப்படுவதில்லை.

இதனை 'ப்ரளய காவேரி' என முன்பு அழைக்க, இந்த ஏரியானது நீர் உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாகவும் விளங்குகிறது. அதனால், இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற...சமீபத்தில் இந்த ஏரியானது பக்கிங்கம் கால்வாய் கழிவு நீர் சுத்திகரிப்பு பணியால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழிற்சாலையிலிருந்து கழிவுகளும், இரசாயனங்களும் வெளியேறி வேதனையும் அளித்தது. இருப்பினும், அரசின் பார்வைக்கு இந்த பிரச்சனை கொண்டு செல்ல, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புலிகாட் ஏரியானது...காலாங்கி ஆறு மற்றும் ஆரணி ஆறுகளால் வழங்கப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா என்னும் தடுப்பு தீவால், வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கப்பட்டது தான் இந்த லகூன். இந்த ஏரியில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் வளர, இதனால் நமக்கு நிறைய ஊட்ட சத்துக்களும் இங்கிருந்து கிடைக்கிறது. இந்த தாவரங்களை சாப்பிடும் மீன்கள், பறவைகளால் ஈர்க்கப்பட, அவை அனைத்தும் ஏரிக்கு இடம்பெயர்ந்து வாழவும் தொடங்குகிறது.

புலிகாட் ஏரியை நாம் காண சிறந்த நேரம்:

டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?

Santhosh Janardhanan

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலம், இந்த புலிகாட் ஏரியை நாம் பார்க்க சிறப்பாய் அமைகிறது. இந்த நேரங்களில்...கால நிலையானது சிறப்பாக அமைய, குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது. அத்துடன், இந்த மாத இடைவேளையில் தான் தனித்துவமிக்க வெவ்வேறு விதமான பறவைகள் இங்கே நிறைய இடம்பெயர்ந்து வருகிறது.

கோடைக்காலத்தில் இந்த இடமானது நம்மை வாட்டி எடுக்க, அதனால் மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் நம் பயணத்தை தவிர்ப்பது நல்லதாகும். ஒருவேளை, கோடைக் காலத்தின்போது உங்கள் பயண திட்டம் இருக்குமாயின் உதவி பொருட்களான சன் ஸ்க்ரீன், கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியதை கவனத்தில் கொள்ளவும்.

புலிகாட் ஏரியின் வரலாறு:

வரலாற்று தடங்கள் அதிகம் பதிந்த இந்த புலிகாட் ஏரியை., நிறைய நாட்டு மக்கள் புகலிடமாக கொண்டிருந்தனராம். பதிமூன்றாம் நூற்றாண்டில்...மெக்காவிலிருந்து வெளியேறிய அரேபியர்கள் இங்கு தான் இடம்பெயர்ந்து வந்திருக்கின்றனர். அதற்கு அடையாளமாய் இன்றும் அரேபியர்கள் வாழ்ந்த வீடுகளுள் சில இந்த பகுதியில் காணப்படுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அதேபோல், பதினாறாம் நூற்றாண்டில்...போர்த்துகீசியர்கள் காலனியாதிக்கத்திற்கு இந்த ஏரியை தேர்ந்தெடுத்ததாகவும் அதன் பின்னர் டச்சு காரர்களால் இந்த இடம் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. டச்சுக்காரர்களின் வாழிடமாக இருந்த கோட்டை ஜெட்ரியா, இந்திய தொல்லியல் ஆய்வுக்காக (ASI) இன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது அருகில் உள்ளவர்களால் பார்த்த வண்ணமும் இருக்கிறது.

புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம்:

டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?

arian.suresh

இலையுதிர் மற்றும் வசந்த காலத்தின்போது, இந்த புலிகாட் ஏரியானது மூன்றாவது முக்கியமான பறவைகள் இடம்பெயரும் இடமாக விளங்குகிறது. சாம்பல் நிற பெலிகன் பறவைகளும், ஓபன் பில்ட் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டு விதமான பழமை இன பறவையை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. எண்ணற்ற பறவைகள் இடம்பெயர்ந்து வர ஃபிளமிங்கோக்கள் உருவாகிறது. ஏறத்தாழ சுமார் 15,000 பறவைகள் இடம்பெயர ஆந்திரபிரதேசத்து எல்லை ஏரிகளில் பறவைகள் மொய்க்கும் காட்சியை நம்மால் காண முடிகிறது.

மற்ற இன பறவைகளாக...மார்ஷ் சாண்ட்பீப்பர்ஸ், ரீஃப் ஹீரோன்ஸ், புள்ளியிட்ட பெலிகன்கள், கருப்பு வால் கோட்விட்ஸ் பறவைகளும் இடம்பெயர்ந்து வருகிறது. இந்த ஏரியானது 160 வகையான மீன்களுக்கு வாழிடமாகவும், எண்ணற்ற இறால்களுக்கும், மெல்லுடலிகளுக்கும் (mollusks), என மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்ற வாழிடமாகவும் இருக்கிறது. இந்த பறவைகள் சரணாலயமானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து காணப்படுகிறது.

புலிகாட் ஏரியில் நடக்கும் 'ஃபிளமிங்கோ விழா' வருடாவருடம் டிசம்பர் மாதத்தில் நம்மை மகிழ்விக்கிறது. இந்த மூன்று நாள் விழாவில்...இசை நிகழ்ச்சி, உணவு கடைகள், என மகிழ்ச்சி கூட்டம் நிரம்ப காட்சியளிக்கிறது.

புலிகாட் ஏரியில் நாம் செய்ய வேண்டியவை:

இந்த புலிகாட் ஏரியின் சூழல் சுற்றுலாவின் ஒரு அங்கமாக இந்த படகு சவாரி இருக்க, கீழ்ப்பகுதி தட்டையாக காணப்படும் படுகுகளானது இங்கே அனுமதிக்கப்படுகிறது. மோட்டார் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.

டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?

Lalithamba

இந்த படகுகள் நாள் முழுவதும் சுற்ற நானூறு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது.'டச்சு கோட்டை' என்றழைக்கப்படும் கோட்டை ஜெட்ரியா நாம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். 1613ஆம் ஆண்டு இந்த புலிகாட் ஏரியில் கடற்கரைகள் கட்டப்பட, இந்த கோட்டைகளானது டச்சு குடியரசின் இருக்கையாக பயன்படுத்தப்பட்டு அந்த பகுதியை காலனியாதிக்கத்திற்கும் உட்படுத்தப்பட்டது.

இந்த அழகிய கோட்டை, அதன் பிறகு அந்த நேரத்திலிருந்த எத்திராஜர் என்னும் உள்ளூர் தலைவரால் முற்றுகையிடப்பட, அதன் பிறகு போர்த்துகீசியத்திடம் கைமாறி, அதன்பின்னர் 1714ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் புதுப்பிக்கப்பட்டது. இறுதியாக இன்று இந்தியாவின் தொல்லியல் ஆய்வுகளுக்கு கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தனித்தீவான ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஷ் தவான் விண்வெளி மையம் இந்த ஏரியின் அருகில் அமைந்து நம் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த மையத்தால் திறக்கப்பட்ட, சமீபத்தில் ராக்கெட்டுகளின் பிரதிபலிப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புலிகாட் ஏரியினை நாம் அடைவது எப்படி?.

டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?

McKay Savage

ஆகாய மார்க்கமாக:

புலிகாட் ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையமாக 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சென்னை விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா என பல நகரங்களுக்கு சேவை இயக்கப்படுகிறது. அங்கிருந்து, பேருந்து மூலமாகவோ...அல்லது வாடகை கார் மூலமாகவோ நாம் செல்லலாம்.

தண்டவாள மார்க்கமாக:

புலிகாட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சுள்ளுருபேட்டை இரயில் நிலையம் காணப்படுகிறது. இந்த இரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்துக்கு சேவைகள் இயக்கப்படுகிறது.

சாலை மார்க்கமாக:

சென்னையில் காணப்படும் தேசிய நெடுஞ்சாலை 5இன் வழியாக, புலிகாட்டில் நெல்லூர் மற்றும் ஆந்திர பிரதேசத்தை நாம் அடையலாம். புலிகாட்டிலிருந்து சென்னைக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்பட, இந்த பயணத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரத்திலிருந்து (2.5h) மூன்று மணி நேரம் வரை ஆகிறது. கார் மற்றும் சொந்த வாகன வசதிகளின் மூலமாகவும் நாம் இந்த சாலையில் பயணிக்கலாம்.

Read more about: travel lake tour