Search
  • Follow NativePlanet
Share
» »கேரளா ஏன் இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் என்பதற்கான காரணங்கள் என்னென்னவென்று தெரியுமா?

கேரளா ஏன் இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் என்பதற்கான காரணங்கள் என்னென்னவென்று தெரியுமா?

ஒரு பக்கம் அரபிக்கடலும், மறுபக்கம் மேற்குதொடர்ச்சி மலைகளும் சூழ்ந்திருக்கும் கேரள தேசம் ஒரு பூலோக சொர்க்கம். மலையாள மொழி பேசும் கேரள நாட்டின் செழுமைக்கு ஈடுஇணையே கிடையாது. வற்றாத நன்னீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் இந்த மாநிலம் முழுவதையும் என்றும் பசுமையாக வைத்திருக்கின்றன.

இவற்றோடு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஆன்மீக ஸ்தலங்கள், தலைமுறை தலைமுறையாக பயிற்றுவிக்கப்படும் கலைகள், அம்ரிதம் போன்ற சுவையுடைய உணவுகள், வண்ணமயமாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் போன்றவை கேரளத்தை ஒரு உன்னதமான இடமாக மாற்றுகின்றன.

இந்தியாவெங்கும், ஏன் உலகத்திலே இருக்கும் மிக அற்புதமான, முழுமையான சுற்றுலாத்தலங்களில் கேரளாவும் ஒன்று என சொல்லலாம். தமிழ்நாட்டில் இருந்தாலும் ஒருமுறையேனும் கேரளா முழுவதையும் நாம் சுற்றிப்பார்க்க வேண்டும். சரி வாருங்கள், கேரளா ஏன் ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்கிறது என்பதற்கான காரணங்களை பற்றி சற்றே விரிவாக தெரிந்துகொள்வோம்.

ஆயுர்வேதம்!!

ஆயுர்வேதம்!!

சில வருடங்களுக்கு முன்பு நம்மால் கற்பனை கூட செய்திருக்க முடியாத வளர்ச்சியை இன்றைய நவீன மருத்துவ உலகம் அடைந்திருக்கிறது. இருந்தாலும் சில நோய்களை குணப்படுத்துவதற்கு நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகளே சிறந்தவை என்று இன்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 'ஆயுர்வேதம்' என்ற உன்னதமான இயற்கை மருத்துவமுறை கேரளாவெங்கும் இன்றும் பரவலாக இருக்கிறது.

ஆயுர்வேதம்!!

ஆயுர்வேதம்!!

இயற்கை மூலிகைகள் மற்றும் எண்ணைகளை கொண்டு அழகு மேம்பாடு, தசை மற்றும் மூட்டு வலிகள், மன அழுத்தம் போன்றவற்றிக்கு சிகிச்சைகள் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக பல தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் கேரளா முழுக்க இருக்கின்றன. இந்த மையங்களில் நம் தேவையை பொறுத்து ஒரு வாரத்தில் இருந்து சில மாதங்கள் வரை தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சைகளை பெறலாம்.

ஆயுர்வேதம்!!

ஆயுர்வேதம்!!

கேரளத்தில் வர்களா, கோவளம் மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் அதிக அளவு ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. இங்கு கிடைக்கும் சிகிச்சைகளை விடவும் கேரளத்தில் இருக்கும் தூய்மையான சுவாசக்காற்றே உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் அளிக்கும்.

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

தமிழகத்தில் எப்படி பொங்கல் பண்டிகை சமயத்தில் நடக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை போல கேரளத்தில் ஓணம் பண்டிகை காலத்தில் நடக்கும் வீர விளையாட்டு தான் 'வல்லம் களி' எனப்படும் பாம்பு படகு போட்டியாகும். பாம்பு போன்ற நீண்ட படகில் நூற்றுக்கணக்கான வீரர்கள் அமர்ந்து ஒரே நேரத்தில் துடுப்பு போட்டு ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பாம்பு படகு போட்டி :

பாம்பு படகு போட்டி :

ஆலப்புழாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான புன்னமடா ஏரியில் 'நேரு சுழற்கோப்பை' படகு பந்தையம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. கேரளத்தில் நடக்கும் படகு போட்டிகளிலேயே மிகப்பிரபலமானதாக திகழும் நேரு கோப்பை போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு லட்சம் ருபாய் பரிசுத்தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. இப்போட்டியை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தருகின்றனர்.

ஓணம் பண்டிகை :

ஓணம் பண்டிகை :

உலகெங்கும் உள்ள தமிழர்களால் அறுவடை திருவிழாவாக பொங்கல் பண்டிகை பண்டிகை கொண்டாடப்படுவது போல மலையாளிகளால் ஓணம் பண்டிகை அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஓணம் திருநாளில் தான் கேரளத்தின் சக்ரவர்த்தியான மகாபலி பாதாள லோகத்தில் இருந்து பூமிக்கு திரும்ப வருவதாக நம்பப்படுகிறது.

ஓணம் பண்டிகை :

ஓணம் பண்டிகை :

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளிகள் புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன் அத்திப்பூக்களை கொண்டு பூக்கோலமிட்டு, அதன் நடுவே விளக்கேற்றி மகாபலியை வரவேற்கின்றனர். அதோடு சதய விருந்து படைத்து கடவுளை வழிபடுகின்றனர். ஓணம் பண்டிகை சமயத்தில் கேரள முழுக்கவே வண்ணமயமாக இருக்கும்.

ஓணம் பண்டிகை :

ஓணம் பண்டிகை :

ஓணம் பண்டிகையின் போது பெருமாளின் வாமன அவதாரம் 'திருக்காகரப்பன்' என்ற பெயரில் சிறிய களிமண் கட்டி ரூபத்தில் வழிபடப்படுகிறார்.

 உப்பங்கழி நீரோடைகளும், படகு வீடுகளும் :

உப்பங்கழி நீரோடைகளும், படகு வீடுகளும் :

கேரளாவில் இருக்கும் தனித்துவமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் ஆகும். ஆலப்புழா, கொச்சி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற உப்பங்கழி நீரோடைகள் அதிகமாக இருக்கின்றன. இவற்றில் படகு சவாரி செய்வது வானில் விமானத்தில் பறப்பது போல இருக்கும்.

 உப்பங்கழி நீரோடைகளும், படகு வீடுகளும் :

உப்பங்கழி நீரோடைகளும், படகு வீடுகளும் :

உப்பங்கழி நீரோடைகளில் படகு வீடுகளில் பயணிப்பது இனிமையான அனுபவமாக இருக்கும். ஐந்து நட்சத்திர விடுதிக்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டிருக்கும் படகு வீடுகளில் நண்பர்களுடனோ அல்லது மனைவியுடனோ சில நாட்களை செலவிடலாம். ஆலப்புழாவில் இதுபோன்ற படவு வீடுகள் அதிக அளவில் இருக்கின்றன.

கலைகள் :

கலைகள் :

கேரளத்தில் தோன்றிய பழமையான கலைகள் பலவும் இன்றும் அதன் தன்மை மாறாமல் பயிற்றுவிக்கப்படுகிறது. குறிப்பாக தற்காப்புக் கலைகளான கலரி பயட்டு, கதக்களி, தெய்யம், பரத நாட்டியம் போன்ற கலைகள் கேரளாவில் போற்றி பாதுக்காக்கப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் நமது வேர்களை துறந்து, கலைகளை மறந்து வெகுதூரம் வந்துவிட்டாலும் மலையாளிகள் தங்கள் பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் கெட்டிக்காரர்கள்.

கோயில்கள் :

கோயில்கள் :

முன்னுரையிலே சொன்னது போல கேரளாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. சபரி மலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன் கோயில், சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், எட்டுமானூர் சிவன் கோயில், திருவனந்தபுரம் பார்த்தசாரதி கோயில், வைக்கம் மகாதேவன் கோயில், கொடுங்களூர் பகவதி அம்மன் கோயில் போன்றவை கேரளாவில் இருக்கும் முக்கியமான ஆண்மீக ஸ்தலங்கள் ஆகும்.

உணவுகள்:

உணவுகள்:

கேரளத்தில் கிடைக்கும் உணவுகளின் சுவைக்கு ஈடுஇணையே கிடையாது. ஒரு காலத்தில் உலகத்துக்கே மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்த கேரளத்தில் கிடைக்கும் உணவுகளும் மிகுந்த 'ஸ்பைசி'யாக இருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் கேரள உணவுகளில் தேங்காய், நெய், மிளகு போன்றவை அதிகம் சேர்க்கப்படுகின்றன.

உணவுகள்:

உணவுகள்:

அரிசி மாவில் செய்யப்படும் புட்டு கேரளாவின் பிராதான உணவாக இருக்கிறது. இட்லியை போன்ற ஆவியில் வேகும் இதனுடன் கொண்டைகடலை குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சுற்றியிருக்கும் உலகமே மறந்து போய்விடும்.

உணவுகள்:

உணவுகள்:

அசைவ உணவுகளும் கேரள உணவுகளில் பிராதன இடம் வகிக்கின்றன. கேரளத்தின் நன்னீர் ஓடைகளில் கிடைக்கும் கரி மீன் வறுவல் அதி சுவையானது.

தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட கள்ளு கேரளாவின் பிரதான உணவுகளில் ஒன்றாகும்.

உணவுகள்:

உணவுகள்:

தமிழ்நாட்டில் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் தளப்பாக்கட்டி பிரியாணி போன்றவை இருப்பது போல கேரளாவுக்கே உரிய பிரயாணி தான் தலசேரி பிரியாணி ஆகும்.

தேங்காய் எண்ணெய், தக்காளி, மசாலா பொருட்கள், மாமிசம் போன்றவை கொண்டு சமைக்கப்படும் இந்த தலசேரி பிரயாணி நீங்கள் இதுவரை ருசித்த பிரயாணிகளில் இருந்து வித்தியாசமான சுவையை கொண்டிருக்கும் என உறுதியாக சொல்லலாம்.

சுற்றுலாத்தலங்கள்:

சுற்றுலாத்தலங்கள்:

வயநாடு கேரளாவில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகும். பசுமை போர்த்திய தேயிலை தோட்டங்கள், மூன்று லட்சம் ஆண்டுகள் பழமையான எடக்கல் குகைகள், செம்பரா சிகரம் போன்றவை வயநாட்டில் இருக்கும் சுற்றுலா ஈர்ப்புகள் ஆகும்.

சுற்றுலாத்தலங்கள்:

சுற்றுலாத்தலங்கள்:

கேரளாவில் இருக்கும் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான கோவளம் கடற்கரை.

சுற்றுலாத்தலங்கள்:

சுற்றுலாத்தலங்கள்:

காதல் தேசம் முணார்!!

சுற்றுலாத்தலங்கள்:

சுற்றுலாத்தலங்கள்:

'டிரைவ்-இன்' கடற்கரையான முளுபிலங்காடு பீச்.

சுற்றுலாத்தலங்கள்:

சுற்றுலாத்தலங்கள்:

கேரளாவில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+