» »பசுமைச்சொர்க்கம் மூணாறு படையெடுக்கும் இளைஞர் பட்டாளம் - ஏன் தெரியுமா?

பசுமைச்சொர்க்கம் மூணாறு படையெடுக்கும் இளைஞர் பட்டாளம் - ஏன் தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த 'மூணார் மலைவாசஸ்தலம்' கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.

மூணாறை பற்றி பலருக்கும் அறிந்திராத, அதன் அருகில் என்னென்ன இடங்களெல்லாம் உள்ளது என்ற தகவல்களை இந்த கட்டுரையில் தருகிறோம்.

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது.

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல்

நிசப்தம் தவழும் இந்த ஆட்டுக்கல் பிரதேசமானது செழிப்பான மலைகள் மற்றும் தூய்மையான இயற்கை அழகுடன் நிரம்பி வழிகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சியை சுற்றிலும் நிறைய மலையேற்றப்பாதைகள் காணப்படுவதால் இந்த இடம் மலையேற்றப்பிரியர்களுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கும்.

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க்


பல்லுயிர்ப்பெருக்கச் சூழல் நிறைந்ததாக கருதப்படும் இந்த இயற்கைப்பூங்கா வனப்பகுதி மற்றும் காட்டுயிர் பராமரிப்பு துறையின் கட்டப்பாட்டின் கீழ் உள்ளது. நீலகிரி தாஹிர் எனப்படும் வரையாடு இந்த பூங்காவில் அதிகமாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நீர்விழ்ச்சி

பள்ளிவாசல் நீர்விழ்ச்சி


மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான ஒன்றாகும். சீதா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்விழ்ச்சி தேவிகுளம் பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நீர்விழ்ச்சி

பள்ளிவாசல் நீர்விழ்ச்சி

இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கவும், பிக்னிக் சிற்றுலா செல்வதற்கும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் ஏற்றதாக உள்ளது. அன்றாட வாழ்க்கையின் சந்தடியிலிருந்து விலகி பயணிகள் இந்த இடத்தின் அமைதி நிரம்பிய இயற்கைச்சூழலில் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.

ராஜமலா

ராஜமலா

இயற்கை எழில் காட்சிகளும் வளமான பசும் மலைத்தொடர்களும் இப்பகுதியை சூழ்ந்துள்ளன. நீண்ட தாவரப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவற்றை ராஜமலா ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கலாம்.

ராஜமலா

ராஜமலா

கடல் மட்டத்திலிருந்து 2700 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் குடும்பச்சுற்றுலா, பிக்னிக் சிற்றுலா மற்றும் தேனிலவுப்பயணம் போன்றவற்றுக்கு மிகவும் உகந்தது.

ஆனயிறங்கல்

ஆனயிறங்கல்

ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

ஆனயிறங்கல்

ஆனயிறங்கல்

பரந்து நீளும் வனப்பகுதியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேயிலை தோட்டங்களும் இந்த ஸ்தலத்தை சூழ்ந்துள்ளன. இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும்.

பொத்தன்மேடு

பொத்தன்மேடு

மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பொத்தன்மேடு ஆகும். இங்குள்ள ஒரு முக்கியமான மலைக்காட்சி ஸ்தலத்திற்கு இது பிரசித்தி பெற்றுள்ளதால், பயணிகள் மறக்காமல் இந்த கிராமத்துக்கு விஜயம் செய்வது நல்லது.

பொத்தன்மேடு

பொத்தன்மேடு


இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் மதுரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். இந்த ரம்மியமான கிராமப்பகுதி இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் மிகப்பிடித்தமான இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

எதிரொலி முனையம்

எதிரொலி முனையம்

எக்கோ பாயிண்ட் எனும் இந்த இடம் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் இளைஞர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது.

எதிரொலி முனையம்

எதிரொலி முனையம்

பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்' இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது.

Read more about: travel tour

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்