» »ஈஃபிள் டவரை மிஞ்சிய உலகின் உயரமான ரயில்வே பாலம் எங்கே தெரியுமா?

ஈஃபிள் டவரை மிஞ்சிய உலகின் உயரமான ரயில்வே பாலம் எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

சத்தமே இல்லாமல் நாம ஒரு உலக சாதனைய சொந்தமாக்கப்போகிறோம். உலகசாதனை என்றவுடன் நமக்கு நினைவு வருவது விளையாட்டு. அதிலும் கிரிக்கெட் தான் அநேகம் பேருக்கு நினைவு வரும். ஆனால் அதையும் தாண்டி நமக்கு ஒரு சாதனை என்றால் இந்தியாவின் கட்டமானம்.

கட்டுமானத்துறையில் இந்தியா பல சாதனைகளை சமீப காலங்களில் செய்து வருகிறது. சென்னை விமானநிலையத்தைப் போலல்லாமல் நல்ல தரமான கட்டுமானங்கள் உலக சாதனைகளாகவும் அமைகின்றன. அவை சுற்றுலாத் தளங்களாகவும் விளங்குகின்றன.

சுற்றுலாவுக்கு உதவும் அப்படி ஒரு பாலத்தைத் தான் நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம். வாருங்கள்

 உயரமானது

உயரமானது

ஈஃபிள் டவரை விட 30 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான வளைவு ரயில்வே பாலத்தின் கட்டமைப்பு பணிகள் 2019 ஜூன் மாதத்தில் நிறைவடையும் என தெரிகிறது. இதை கட்டிமுடித்துவிட்டால் உலக சாதனை பாலம் என்ற பெருமை நம்ம ஊருக்கு கிடைக்கும்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

உலகின் மிக உயரமான இரும்பு ரயில்வே பாலம் நம்ம ஊரில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மேல் கட்டப்பட்டு வரும் இது, தரைமட்டத்தில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

 முழுவீச்சில் நடைபெறும் வேலை

முழுவீச்சில் நடைபெறும் வேலை

இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாலம் முடிக்கப்பட்டால் நாமும் பல சுற்றுலா மையங்களுக்கு எளிதில் ரயிலில் சென்றுவரலாம்.

தடங்கல்

தடங்கல்

2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கான கட்டமைப்பு பணிகள் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் 2008 முதல் 2009 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டன.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

காற்றின் வேகத்தை தெரியப்படுத்தும் தானியங்கி சமிக்ஞை அமைப்பு மற்றும் காற்றின் வேகத்தை அளக்கும் அனமீமீட்டர் போன்ற உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகு பணிகள் தொடங்கின

தொடரும் பணிகள்

தொடரும் பணிகள்

இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு 90 கி.மீ வேகத்தில் காற்று அடிக்கும் போது மட்டும் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டு, மீண்டும் பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றன.

இந்தியாவுக்கு பெருமை

இந்தியாவுக்கு பெருமை


பாலம் கட்டும் பணியில் உள்ள பொறியாளர் ஆர். ஆர். மாலிக் இந்த இரும்பு ரயில்வே பாலம் சுமார் 120 ஆண்டுகள் வரை வலிமையுடன் தாங்கி நிற்கும் என கூறுகிறார். அவ்வளவு வலிமையான பாலம் உலகின் மிகச் சிலதுகளில் இதும் ஒன்று. இனி அந்த உலகப் பெருமையை இந்தியா அடையவிருக்கிறது.

260கிமீ/மணி வேகம்

260கிமீ/மணி வேகம்


மேலும் இந்த பாலத்தின் மீது ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்றும் பொறியாளர் ஆர். ஆர். மாலிக் தெரிவிக்கிறார். அவ்வளவு வேகத்தில் செல்வதால், இது அதிக நேரம் எடுக்காத யூசர் பிரண்ட்லி பயணமாக மாறும்.

மூன்று சுரங்கங்கள்

மூன்று சுரங்கங்கள்

பாலத்தின் மீதுமட்டுமல்லாமல் செனாப் ஆற்றின் மறுபகுதியில் ரயில்கள் செல்வதற்கு 5.9 கி.மீ , 9.3 கி.மீ மற்றும் 13 கி.மீ நீளங்களில் மூன்று சுரங்க வழிப்பாதைகள் தயாராகி வருகின்றன. இந்த சுரங்கப்பாதைகளும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுவருகின்றன.

அனைத்திலும் ரயில்

அனைத்திலும் ரயில்

இந்த சுரங்களை கட்டமைப்பது மிக சவாலான பணியாக உள்ளது. கொங்கண் ரயில்வே கட்டமைத்து வரும் பணிகளின் பாலங்களுக்கான துணைத்தூண் கட்டும் பணிகளும் மிக சவாலாக இருப்பதக இதில் பணியாற்றும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த ரயில்வே பாதையில் பயணிக்கும் ரயில்கள் அனைத்தும் 80 சதவீதம் சுரங்க வழிப்பாதையில் தான் பயணிக்கும். இதன் வழியாக போகும்போது சுற்றுலா பயணிகள் அளவற்ற மகிழ்ச்சி கொள்ளலாம்தானே

உலகப் பெருமை

உலகப் பெருமை

உதம்புரில் இருந்து பாரமுல்லாவை இணைக்கும் வகையில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டு வரும் இந்த இரும்பு பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் உலகின் மிக உயரத்தில் இருக்கும் வளைவு ரயில் பாலம் என்ற பெருமையைப் பெறும்.

 2020

2020


கத்ரா- பனிஹல் இரும்பு வளைவு ரயில்வே பாலத்தில், 2019 இறுதியில் ரயில்களை இயக்கி சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் உயரமான வளைவு இரும்பு ரயில்வே பாலம் என்ற பெயர் பெறப்போகும் இதன் மீது முதல் ரயில் உத்தம்பூர்- ஸ்ரீநகர் நகரங்களுக்கு இடையே 2020ல் ஓடத்துவங்கும்.

சனசார்

சனசார்

குட்டி குல்மார்க்' என வழங்கப்படும் சானாசார் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2079மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் சமவெளி மற்றும் குன்றுப் பகுதிகள் சறுக்கு விளையாட்டு, குதிரை சவாரி, பலூன் சவாரி, மலையேற்றம், பாறையேற்றம், கூடாரம் அமைத்து தங்குதல் போன்ற விளையாட்டுகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் நன்றாகப் பயன்படுகின்றது.

en.wikipedia.org

பாட்னிடாப்

பாட்னிடாப்


இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டதிலிருந்து 2024 மீ உயரத்தில் இருக்கும் பீடபூமியில் அமைந்திருக்கிறது. அடர்த்தியான தியோதர் மரங்கள் நிறைந்த கானகங்களுக்கு மத்தியில், மடிந்து செல்லும் மலைகளினூடாக, மூச்சை திணறடிக்கும் கண்கவர் காட்சிகள் மற்றும் சாந்தப்படுத்தும் அமைதி என அனைத்து அம்சங்களும் குடி கொண்டுள்ள அற்புத மலை வாழிடம் பாட்னிடாப்

en.wikipedia.org

அமர் மஹால்

அமர் மஹால்


கடந்த காலத்தில், அமர் மஹால் ராயல் குடும்ப உறுப்பினர்கள் குடியிருப்பாக இருந்து வந்துள்ளது. எனினும் இந்த இடமானது பின்னர் ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டு புத்தகங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் கல்வெட்டுகள் சேகரிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

en.wikipedia.org

 மான்சர் ஏரி

மான்சர் ஏரி

உள்ளூர் நம்பிக்கைக்கு ஏற்ப, புது மண தம்பதியினர் மூன்று ‘பரிக்கிரமா' அதாவது ஏரியை மூன்று முறை சுற்றி வந்து ஷேஷ் நாக் தெய்வத்தின் ஆசியை நாடினால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

en.wikipedia.org

https://en.wikipedia.org/wiki/File:Manasbal.jpg

ரகுநாத் கோவில், ஜம்மு

ரகுநாத் கோவில், ஜம்மு

ஏழு வரலாற்று சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் ரகுநாத் கோவில் அமைந்துள்ள இடத்தில் உள்ளன. இந்த கோவிலின் பிரதம தெய்வங்கள் இந்து மத கடவுள்களின் பல்வேறு உருவகங்களான சூரிய கடவுளான சூர்யா, இந்து மத அழித்தல் கடவுள் சிவன், இந்து மத பாதுகாப்பு கடவுள் விஷ்ணு ஆகியன.

en.wikipedia.org

 ரன்பிரேஷ்வர் கோவில்

ரன்பிரேஷ்வர் கோவில்

ரன்பிரேஷ்வர் கோவில், இந்துக்களின் அழிக்கும் கடவுள், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான புனித யாத்திரை தலமாகும். இந்த பண்டைய கோயில் 1883 ல் மகாராஜா ரன்பீர் சிங் என்பவரால் கட்டப்பட்டது.

jammu.nic.in

Read more about: travel, tour