» » உலகின் மிகப்பழமையான 10 கோயில்கள் - ஒரே பயணத்தில் எப்படி செல்லலாம்?

உலகின் மிகப்பழமையான 10 கோயில்கள் - ஒரே பயணத்தில் எப்படி செல்லலாம்?

Posted By: Udhaya

கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, சுற்றுலா என்ற பாணியில், நம் அனைவரும் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்வோம். உலகின் மிகப்பழமையான கோயில்களில் பெரும்பான்மையான கோயில்கள் தமிழனால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட ஆண்டு, கட்டிடக்கலை பாணியைப் பொறுத்து பெரிய கோயில்களின் வயது ஏறக்குறையவ வகைப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இதில் தமிழகத்தின் பல கோயில்கள் 2000 ஆண்டுகள் வயது கொண்டதாக இருக்கின்றன. அப்படிபட்ட பழமையான கோயில்களுக்கு ஒரே பயணத்தில் அதாவது சிங்கிள் டிரிப்பில் போய் வருவதற்கான சுற்றுலா வழிகாட்டி இதுவாகும். படித்து பயன்பெறுங்கள்.

சென்னையில் ஆரம்பிக்கும் இந்த பயணம் கன்னியாகுமரியில் முடிவடையும். சாத்தியமான வழித்தடங்கள், சுலபமான பாதைகள், அருகாமையில் காணவேண்டிய இடங்கள் என பல தகவல்களையும் இந்த பதிவில் பெறலாம்.

 எழும்பூர் - கபாலீசுவரர் கோவில், சென்னை

எழும்பூர் - கபாலீசுவரர் கோவில், சென்னை

7.2கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கபாலீஸ்வரர் கோயிலுக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். ஒருவேளை இந்த பாதை போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாக நினைத்தால், ஸ்பென்சர் வழியாக அண்ணாசாலையை அடைந்து, ராயப்பேட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக மயிலாப்பூர் வந்தடையலாம்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

கைலாசநாதர் ஆலயம் செல்வோம்

கைலாசநாதர் ஆலயம் செல்வோம்

78கிமீ தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து 2 முதல் 2.30 மணி நேரத்தில் சென்றடையலாம்.

மதுரவாயல், திருமழிசை வழியாக ஒரு பாதையும், அடையார், தாம்பரம் வழியாக இன்னொரு வழியும் உள்ளது.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

மகாபலிபுரம் கோயில்

மகாபலிபுரம் கோயில்

கைலாசநாதர் கோயிலிலிருந்து வாலாஜாபாத் வழியாக ஒரு பாதையும், உத்திரமேரூர் வழியாக இன்னொரு தடமும் உள்ளது.

முதல் வழி 68கிமீ தொலைவும், இரண்டாம் வழி 89கிமீ தொலைவும் கொண்டது. வாலாஜாபாத், செங்கல்பட்டு அருகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

அண்ணாமலையார் கோவில்

அண்ணாமலையார் கோவில்


மகாபலிபுரத்திலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 150கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மேல்மருவத்தூர் செஞ்சி வழியாக ஒரு வழித்தடமும், உத்திரமேரூர், சேத்துப்பட்டு வழியாக மற்றொரு வழித்தடமும் உள்ளது. முதல்வழியில் 150கிமீ தொலைவிலும், இரண்டாம் வழியில் 159கிமீ தொலைவிலும் சென்றடையமுடியும்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

பிரகதீசுவரர் கோயில், தஞ்சாவூர்

பிரகதீசுவரர் கோயில், தஞ்சாவூர்

திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர், அசனூர் வழியாக சென்றால் 225கிமீ தூரம் பயணிக்கவேண்டிவரும்.

மாற்றுப்பாதையாக விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி வழியாக தஞ்சை பெரியகோயிலை அடைய 258கிமீ தூரம் பயணிக்கவேண்டும்.

திருச்சி, விழுப்புரம் நகரங்களுக்குள் நுழையும்போது அதிக அளவு போக்குவரத்து நெரிசலை உணர முடியும். எனவே அதை தவிர்க்க இரண்டாவது பாதையை சிலர் பயன்படுத்துகின்றனர். எனினும் முதல் பாதையில் சாலை நன்கு தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

ஜம்புகேசுவரர் கோவில், திருவானைக்காவல்

ஜம்புகேசுவரர் கோவில், திருவானைக்காவல்

தஞ்சை பெரியகோயிலிலிருந்து 45கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவண்ணாமலையிலிருந்து பெரம்பலூர், சமயபுரம் வழியாக வந்தால், வழியில் இந்த கோயிலைக் காணலாம்.

ஒருவேளை அரியலூர் வழியாக தஞ்சாவூரை அடைந்தால், இங்கிருந்து மூன்று வழித்தடங்கள் உள்ளன.

இதில் துவாக்குடி, திருவெறும்பூர் வழியே சிறந்ததாகும். ஏனென்றால் இது குறைந்த தூரத்திலும். அதிகம் பேர் பயன்படுத்தும் சாலையாகவும் அமைந்துள்ளது.

ஒருவேளை மாற்றுப்பாதை வேண்டுவோர், பூதலூர், மொசெச்புரம், கச்சமங்கலம் வழியாக வரலாம். இந்தவழியில் காவிரியாறு, கிராண்ட் அணைக்கட் எனப்படும் கல்லணை, கரிகாலன் பூங்கா என பல அற்புத இடங்கள் உள்ளன.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

மீனாட்சியம்மன் கோவில், மதுரை

மீனாட்சியம்மன் கோவில், மதுரை

ஜம்புகேஸ்வரர் கோயிலிலிருந்து திருச்சி வந்து, அங்கிருந்து மூன்று பாதைகளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லலாம்.

முதல் பாதையில் மணப்பாறை, சின்னாளப்பட்டி வழியாகவும், இரண்டாவது பாதை விராலிமலை வழியாகவும், மூன்றாவது பாதை திருமயம் வழியாகவும் செல்கிறது.

மணப்பாறை முறுக்குக்கு பேமஸ் ஆனது. விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. திருமயத்தில் மலைக்கோட்டை, அடைக்கலமாதா ஆலயம் ஆகியன உள்ளன.

எனினும் விராலிமலை வழியையே அநேகம்பேர் பயன்படுத்துகின்றனர். சாலை தரமாக இருப்பது, வேகமாக சென்றடையலாம், குறைந்த தூரம், அதிகம்பேர் செல்லும் வழி போன்ற காரணங்களைக் கூறுகின்றனர் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

 ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்


171கிமீ தூரத்தில் அமைந்துள்ளது ராமேஸ்வரம். சிவகங்கை வழியாக 195கிமீ தூரம் எடுக்கும். திருப்புவனம் வழியே அனேகம் பயன்படுத்தும் பாதையாக இருக்கிறது.

மாற்றுப்பாதை வேண்டுபவர்கள் மணலூர், பூவந்தி, கரும்பாவூர், முதுப்பட்டி, சிவகங்கை, காளையார் கோயில் வழியாக செல்லலாம். இந்த பாதை 20 முதல் 30 நிமிடங்கள் அதிகம் எடுத்தாலும், பெரிய அளவில் வாகன நெரிசல் இல்லாதபாதையாகும்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

நாகராஜா கோயில், நாகர்கோயில்

நாகராஜா கோயில், நாகர்கோயில்


பெரும்பாலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி (நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரம்) வருபவர்கள் மதுரை சென்று அங்கிருந்துதான் வருகின்றனர்.

அதைத் தவிர்த்து மற்ற பாதைகளும் உள்ளன. ஏர்வாடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடன்குளம், செட்டிக்குளம் வழியாகவும் நாகர்கோயிலை அடையலாம். இது சுலபமான வழி ஆகும். முன்னர் சாலைகள் மோசமாக இருந்தன. தற்போது பெரும்பான்மையான வழித்தடத்தில் நல்ல சாலைகள் போடப்பட்டுவிட்டன. எனவே இந்த பாதையையே பயன்படுத்தலாம்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். நாகர்கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

கன்னியாகுமரி அம்மன் கோயில்

கன்னியாகுமரி அம்மன் கோயில்

பகவதியம்மன் என்றாலும், இந்த அம்மன் குமரி அம்மன் என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறார். நாகர்கோயிலிருந்து வெறும் அரை மணி நேரத்தில் குமரி கோயிலை அடைந்துவிடலாம்.

இது ஒரு பயண வழிகாட்டியாகும். இந்த கோயிலின் பெருமை பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்