Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!

இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும், உலகின் பல்வேறு இடங்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" கீழ் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்தியா முழுவதிலும் உள்ள கோட்டைகள், கோவில்கள், அரண்மனைகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என நாட்டின் மூலை முடுக்கு எங்கும் மூவர்ணத்தால் ஜொலித்தது.

இதன் ஒரு பகுதியாக உலகின் மிக உயரமான பாலத்திலும் இந்திய தேசக் கொடி பறந்தது.

உலகின் மிக உயரமான பாலம்

உலகின் மிக உயரமான பாலம்

ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலம் இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை சீனாவின் குய்சோ மாகாணத்தில் பெபன்ஜியாங் ஆற்றின் மீது கட்டப்பட்ட நீர் மட்டத்திலிருந்து 275 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலமே உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது.

ஆனால் இன்று முதல் அந்த பெருமை நம் நாட்டையே சேரும். ஏனெனில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் நீர்மட்டத்தை விட 359 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது.

75 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

75 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் படு உற்சாகமாக இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களும் படங்களும் இந்த மகத்தான சந்தர்ப்பத்தில் இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு மிகப்பெரிய சான்றாகும். ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தின் "கோல்டன் ஜாயின்ட்" முடிவடைந்ததாக ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் அறிவித்தது.

ரயில்வே பாலத்தின் திறப்பு விழா நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றாலும், அதை இன்னும் சிறப்பாக்குவது பாலத்தை அலங்கரித்த நம் சுதந்திர தின விழா கொண்டாட்டமாகும். 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' பிரச்சாரத்தை கௌரவிக்கும் வகையில், பாலம் இந்தியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், தொழிலாளர்கள் கொடியை அசைத்தும், ஏற்றியும் காணப்பட்டனர். "உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலத்தில், தங்க கூட்டுப் பணிகள் இன்று முடிவடைந்ததால், நமது தேசியப் பெருமை உயரப் பறக்கிறது. இத்துடன், பாலத்தின் தளம் நிறைவடைந்துவிட்டது" என்று அமைச்சகம் தலைப்பிட்டது.

பாலத்தின் சிறப்பம்சங்கள்

பாலத்தின் சிறப்பம்சங்கள்

Ø உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட இந்த பாலம் 28,000 கோடி மதிப்பீட்டில் வடக்கு ரயில்வேயால் கட்டப்பட்டது.

Ø பாரிய இமயமலை மலைகள் வெட்டப்பட்டு பல சவால்களை எதிர்கொண்டு 111 கிமீ நீளமுள்ள கத்ரா-பன்ஹால் இரயில்வேப் பிரிவுடன் இணைகிறது.

Ø இந்தப் பாலத்தின் வளைவு மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது.

Ø 17 தூண்கள் கொண்ட இந்த பாலம் 28,660 மெட்ரிக் டன் எஃகு மூலம் 1,486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

Ø கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் எஃகு மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலைக்கு ஏற்றது. குறைந்தபட்சம் 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த பாலம், 100 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் கட்டப்படும்.

Ø இந்தப் பாலம் மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது மற்றும் வெடிப்புச் சுமையைத் தாங்கும் மற்றும் கடுமையான நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது.

Ø 93 அடுக்குப் பிரிவுகளைக் கொண்டுள்ள இந்த பாலத்தின் 85% சுரங்கப்பாதைக்குள் செல்கிறது.

காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பாலம்

காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பாலம்

காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் காஷ்மீர் மக்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகின் மிகப்பெரிய பாலம் எங்கள் மண்ணுக்கு அருகில் அமைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய பொருட்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்போம், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களும் இனி எங்கள் காஷ்மீருக்கு அதிக சிரமமின்றி வந்து செல்வார்கள் என காஷ்மீர் மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்தியாவில் இரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்றரை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் 2008 ஆம் ஆண்டில் காஷ்மீரில் முதன்முறையாக ரயில் ஓடியது குறிப்பிடத்தக்கது, இது அக்டோபர் 11 அன்று அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டது.

செனாப் இரயில்வே பாலம் திட்டத்தைப் பற்றிய அனைத்தும் தீவிரமானதாகவும், இயற்கையில் தனித்துவமானதாகவும் இருந்தாலும், அதன் சிக்கலான வடிவமைப்பு மற்றும் வடிவவியலின் காரணமாக வளைவு அமைப்பது மிகவும் முக்கியமானது. பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சாத்தியமற்ற உயரங்கள், கடுமையான குளிர்காலம், அடைமழை மற்றும் கொடுமையான கோடை போன்ற சவால்களை எதிர்கொண்டனர். பல சிறப்புகளை அடக்கிய இந்த பாலம் வாயிலாக நாமும் இனி பயணம் செய்யலாம்!

    Read more about: chenab railway bridge
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X