» »எந்த கிழமையில் இந்த கோவிலுக்கெல்லாம் போனா பலன் கிடைக்கும்னு உங்களுக்கு தெரியுமா?

எந்த கிழமையில் இந்த கோவிலுக்கெல்லாம் போனா பலன் கிடைக்கும்னு உங்களுக்கு தெரியுமா?

Written By: Udhaya

இந்து மத புராணங்களின் படி, செவ்வாய்க்கிழமை என்பது வாரத்தின் புனிதநாளாக கருதப் படுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த நாள் இந்து கடவுளர்களாகிய பிள்ளையார், அம்மன், அனுமான் ஆகியோருக்கு உகந்த நாளாக உள்ளது.

செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள பிள்ளையார், அம்மன் அல்லது அனுமான் கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது நடக்கும் என்பது கருத்து. எனினும் சிறப்பு மிக்க கோவில்களுக்கு செவ்வாய்கிழமைகளில் செல்வதுதான் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மிக்க செவ்வாய்கிழமை தினங்களில் விசேசமான கோவில்களுக்கு உங்களை அழைத்து செல்கிறோம் வாருங்கள்...

கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார் பட்டி

கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார் பட்டி

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள குடைவரைக் கோவில்கள் இதன் புகழுக்கு காரணம் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது

PC: Sai DHananjayan Babu

 நன்றுடையான் விநாயகர் கோவில், திருச்சி

நன்றுடையான் விநாயகர் கோவில், திருச்சி

திருச்சி மாவட்டம் தேவதனத்தில் அமைந்துள்ள இந்த விநாயகர் கோவில், நன்றுடையான் விநாயகர் என்று அழைக்கப்படுகிறது.

திருச்சி, தஞ்சாவூர் பகுதி மக்கள் செவ்வாய்கிழமைகளில் சென்று வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

PC: Jean - Pierre Dalbera

பழவங்காடி விநாயகர் கோவில், திருவனந்தபுரம்பழவங்காடி விநாயகர் கோவில், திருவனந்தபுரம்

பழவங்காடி விநாயகர் கோவில், திருவனந்தபுரம்பழவங்காடி விநாயகர் கோவில், திருவனந்தபுரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் எளிதில் சென்று வழிபடும் வகையில் அமைந்துள்ளது பழவங்காடி விநாயகர் கோவில். திருவனந்தபுரத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் சக்தி வாய்ந்த கோவிலாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு கல்வியும். செல்வமும் கொட்டும் என்பது ஐதீகம்.

PC: Laurens

உச்சிப்பிள்ளையார் கோவில் , திருச்சி

உச்சிப்பிள்ளையார் கோவில் , திருச்சி

உச்சிப்பிள்ளையார் கோயில் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது.

இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.


PC: Santhoshj

1000 வருட ரகசியத்தை அறிய கிளிக் செய்யுங்கள் மலைக்கோட்டை

உத்திராபதி விநாயகர் கோவில், சென்னை

உத்திராபதி விநாயகர் கோவில், சென்னை

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருச்செங்காட்டான்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

இக்கோவிலுக்கு செல்ல திருவாரூரிலிருந்து பேருந்து வசதிகள் பல உள்ளன.

PC: jagdeesa ayyar

 ஸ்ரீ கோமதி அம்மன் கோவில்

ஸ்ரீ கோமதி அம்மன் கோவில்

ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .

கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் செவ்வாய்கிழமைகளில் இந்த கோவிலுக்கு சென்று அம்மனின் அருள்பெற்று வரலாம்.

PC: charulathamani

பன்னாரியம்மன் கோவில், சத்யமங்கலம்

பன்னாரியம்மன் கோவில், சத்யமங்கலம்

பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும்.

இது ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. அம்மன் அருள் பாலிக்கும் நேரத்தில் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் நோய் நொடியின்றி நூறு ஆண்டுகாலம் வாழலாம் என்கின்றனர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

PC: Krishnaeee

புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சாவூர்

புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சாவூர்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.

நீண்ட நாள் கடன் தொல்லையால் அவதிப் படுபவர்களை காத்து, நல்ல வாழ்வை அருளும் இந்த அம்மனைக் காண செவ்வாய்கிழமை உகந்த நாளாகும்.

PC: Srithern

மண்டைக்காடு பகவதியம்மன், கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதியம்மன், கன்னியாகுமரி

மண்டைக்காட்டு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு எனும் நகரில் அமைந்துள்ளது. பொன்னம்மை என்பவரின் சமாதியில் எழுந்த ஒரு கோவிலாகும். இவ்விடம் முற்காலங்களில் பனங்காடாக இருந்தது. இங்கு நடைபெறும் மாசித் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

கல்வி, வேலைவாய்ப்புக்கு இடையூறு இருந்தால், முழு மனதோடு மண்டைக்காடு வந்து அம்மனை வேண்டி விரும்பி வழிபட்டால் முழு கஷ்டத்தையும் நீக்கி நல்வாழ்வு அருளுவாள் என்கின்றனர் பக்தர்கள்.

PC: mandaikadu.in

கொண்டத்து காளியம்மன், கோபி

கொண்டத்து காளியம்மன், கோபி

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும்.

PC: Magnetic Manifestations

சுசீந்திரம் தாணுமாலையன், கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலையன், கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

PC: Theni.M.Subramani

கன்னியாகுமரி செல்ல அருமையான வழி சொல்லவா?

ஆஞ்சநேயர் கோவில், நங்கநல்லூர்

ஆஞ்சநேயர் கோவில், நங்கநல்லூர்

நங்கநல்லூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயக் கோவில், மிகவும் சிறப்பு வாய்ந்தது. செவ்வாய்கிழமைகளில் சிறப்பு வாய்ந்த தரிசனம் செய்தால் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடையலாம் என்பது கோவிலின் ஐதீகம்.

PC: GaneshK

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஒரு கோவில் இதுவாகும்.

திராவிட முறையில் கட்டப்பட்ட ஒரு ஆஞ்சநேயர் கோவில் இதுவாகும். பங்குனி மாதம் இந்த கோவிலின் சிறப்பாக இருக்கும்.

PC: Chitrinee

Read more about: travel, temple, பயணம்