Search
  • Follow NativePlanet
Share
» »விநாயகரைக் கண்டு மிரண்ட எமன்! அவரே அமைத்து கொடுத்த கோவில்!

விநாயகரைக் கண்டு மிரண்ட எமன்! அவரே அமைத்து கொடுத்த கோவில்!

விநாயகரைக் கண்டு மிரண்ட எமன்! கோவில் கொண்ட இடம் எது தெரியுமா?

எமனை மிரளச் செய்த விநாயகரின் கதை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், அதன்படி எமனை மிரளச் செய்தபின் விநாயகரே வந்து எமனுக்கான தளத்தை உருவாக்கியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அது எந்த இடம் தெரியுமா? நம்ம கோயம்புத்தூர்தான்.

கோயம்புத்தூருக்கு நிறைய புகழ் தரும் விசயங்கள் இருக்கு. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தொழில் நகரமாக திகழ்கிறது. இங்கு ஆன்மீகத்துக்கும், அழகுக்கும் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அப்படி விநாயகருக்கும் இந்த இடம் புகழ்பெற்றதாக இருக்கிறது. எமனுக்கு பாடம் புகட்ட விநாயகர் அமைத்த தளம் பற்றி பார்க்கலாம்.

 கர்வம் கொண்ட எமதர்மன்

கர்வம் கொண்ட எமதர்மன்


எமதர்மன் தான்தான் உலகில் எல்லார் உயிரையும் எடுக்கிறேன் என்று கர்வம் கொண்டு, நான்தான் பெரியவன் என்ற மமதையுடன் இருந்தாராம். அப்போது அவருக்கு பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான் விநாயகரை அனுப்பி பார்க்கச்சொன்னாராம். விநாயகரும் எமனைச் சந்திக்க சென்றார்.

Pierre André

 விநாயகரின் திருவிளையாடல்

விநாயகரின் திருவிளையாடல்


அப்போது எமனின் மகன் விநாயகரை எதிர்த்து நிற்க, விநாயகர் திருவிளையாடல் புரிந்து, எமனுக்கு பாடம் கற்பித்தார் என்று நம்பிக்கை உள்ளது. அதன்படி, விநாயகர் எமனுக்கு தானே அமைத்துக் குடுத்த தளம்தான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் இந்த கோவில். விநாயகர் என்ன திருவிளையாடல் புரிந்தார், இந்த கோவிலின் மற்ற சிறப்புகள் என்ன என்ன என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Pratishkhedekar

 எமதர்மன் கோவில்

எமதர்மன் கோவில்

இந்தியாவில் பெரும்பாலும் இந்து மதம் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக இருக்கிறது. இந்து மதக் கடவுளர்களுக்கு என தனி தனியே பல கோவில்களும், அந்த கோவில்களில் அதற்கென பல தெய்வங்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றவாறு பல சிறப்புகளும் இருக்கும். அதன்படி, கோயம்புத்தூரில் அமைந்துள்ளது இந்த எம தர்மன் கோவில்.

Vassil

எமனின் கர்வம் நீக்கிய விநாயகர்

எமனின் கர்வம் நீக்கிய விநாயகர்

விநாயகர் எமனின் கர்வத்தைப் போக்க முயற்சிக்கும்போது, எமனின் மகன் இடையில் வர, அவனைத் தண்டிக்க முற்படுகிறார் விநாயகர். இந்நிலையில், எல்லாம் இழந்து நிற்கதியாய் நிற்கும் எமன், விநாயகரிடமிருந்து தன் மகனைக் காப்பாற்றும்படி, சிவபெருமானிடம் வேண்டுகிறார். எல்லார் உயிரையும் எடுக்கும் எமதர்மன், தன் மகன் உயிருக்காக சிவபெருமானிடம்தான் சென்று கேட்கவேண்டியிருக்கிறது. அப்படியானால், யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் எமனுக்குள் தோன்ற, தன் கர்வத்தை நினைத்து வருத்தம் கொள்கிறார்.

Jainswatantra

 விநாயகரின் திருவிளையாடல்

விநாயகரின் திருவிளையாடல்

விநாயகர் தன் திருவிளையாடலால், இத்தனையும் செய்து எமனின் கர்வத்தை அடக்கினார். அதன்பிறகு, தான் கர்வத்தில் எல்லா மனிதர்களையும் பயமுறுத்தியதும், எமனுக்கு மனதை உறுத்தியது. இதனால் விநாயகப் பெருமானிடம் தன் பாவம் நீக்குமாறு வேண்டுகிறார்,. அதன்படி, தானே எமனுக்கு ஒரு தளத்தை உருவாக்கி, அங்கு எமனை வீற்றிருக்க செய்கிறார்.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

 எங்குள்ளது

எங்குள்ளது


கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து காரமடை வழியாக சத்தியமங்களம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது சிறுமுகை. இந்த கோவில் மிகவும் சக்திவாய்ந்த கோவில் எனவும், இங்கு அதிக அளவில் யாரும் வருகை தருவதில்லை எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு விசயம் மட்டும் ஆச்சர்யமாக இருக்கிறது. எனஅன தெரியுமா

 ஆயுள் நீட்டிக்கும் ஆண்டவர்

ஆயுள் நீட்டிக்கும் ஆண்டவர்


இந்த கோவிலுக்கு சரியாக பௌர்ணமி நாளில் வந்து வேண்டிக்கொண்டால் ஆயுள் நீடிக்குமாம். அட இது எல்லா கோவில்களிலும் சொல்லுற வழக்கம்தானே என்று கேட்கும்போது உள்ளூர்காரர்கள் இதற்கு ஆதாரமா ஒன்றை காட்டுகின்றனர்.

Palagiri

 எந்த நோய் வந்தாலும் ஒரு மாத வேலிடிட்டி

எந்த நோய் வந்தாலும் ஒரு மாத வேலிடிட்டி

இந்த கோவிலுக்கு நோயுடன் வருபவர்கள் சரியாக ஒரே மாதத்தில் பிணி நீங்கி நல்ல உடல் நலம் பெறுகிறார்கள். இது எமன் விநாயகருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாகத்தான் என்கின்றனர் மக்கள். இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்பவர்கள் ஒரு எட்டு இந்த கோவிலுக்கு போய்ட்டு வந்துடுங்களேன். நோய் குணமானா நல்ல விசயம்தானுங்களே...

Read more about: travel coimbatore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X