Search
  • Follow NativePlanet
Share
» »ஆனந்தமோ ஆனந்தம் .. கட்டாயம் இன்றே செல்லுங்கள் ஏற்காட்டுக்கு....

ஆனந்தமோ ஆனந்தம் .. கட்டாயம் இன்றே செல்லுங்கள் ஏற்காட்டுக்கு....

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். அதன்படி, 43-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் ஏற்காடு மலைக்

By Udhaya

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடப்பது வழக்கம். இந்த சமயங்களில் ஏற்காடு மலைக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் வருடம் முழுவதும் எப்போது சென்றாலும் உங்களுக்காக நிறைய அனுபவங்கள் காத்திருக்கும். வாருங்கள் ஏற்காட்டில் வேறென்னவெல்லாம் காணலாம் என்று பார்ப்போம்.

 அலங்கரிக்கப்பட்ட ஏற்காடு

அலங்கரிக்கப்பட்ட ஏற்காடு

அண்ணா பூங்காவில் 20 வகை பூக்கள் கொண்ட 10ஆயிரத்துக்கும் அதிகமான பூந்தொட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி திடல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சால்வியா, மேரிகோல்டு, வின்கா, ஜினியா, உள்ளிட்ட 20 வகை பூக்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Manojz Kumar

போட்டிகள் நிகழ்ச்சிகள்

போட்டிகள் நிகழ்ச்சிகள்

பார்வையாளர்களை கவரும் வண்ணம் கார்நேசன் மலர்களால், அரசு தலைமை செயலகம், சேலம் விமானம் நிலையம் போன்றவற்றின் மலர் அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியும் அமைக்கப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாய் கண்காட்சி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

PDRR Manikandan

தமிழர்களின் பெயர் தாங்கி நிற்கும் கொண்டை ஊசி வளைவுகள்

தமிழர்களின் பெயர் தாங்கி நிற்கும் கொண்டை ஊசி வளைவுகள்

முதல்முறையாக ஏற்காட்டிலுள்ள 20 கொண்டை ஊசி வளைவுகள் மேம்படுத்தப்பட்டு, ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளுக்கும், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார், வள்ளல் பாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாரதியார், திருவள்ளுவர், உள்ளிட்ட தமிழ் வளர்த்த புலவர்கள், விடுதலை வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இது இங்கு வரும் ஒட்டுமொத்த மக்களையும் ஈர்க்கும் பொருட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

rajaraman sundaram

மலையேற்றம்

மலையேற்றம்

ஏற்காடு என்னும் அற்புதமான மலைவாசஸ்தலம். கடல் மட்டத்தில் இருந்து 4970 அடி உயரத்தில் இருக்கும் இங்கே ஆரஞ்சு, பலா, வாழை போன்ற பழ வகைகள் மிக அதிகமாக விளைகின்றன. தென்னிந்தியாவின் ஆபரணம்' என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்வதற்கான இடமாக பிரபலமாகி வருகிறது.

Parvathisri

அருவிகளும் ஆனந்தமும்

அருவிகளும் ஆனந்தமும்

இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இருபத்தியேழு மீட்டர் உயரமுள்ள கிளியூர் அருவி தான். ஏற்காட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவியில் கோடைகாலத்திலும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் இந்த அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் அனுபவமாக இருக்கும்.
rajaraman sundaram

அழகிய ஏற்காடு

ஏற்காட்டின் அழகிய புகைப்படங்களைக் காண்போம்

Read more about: travel hills summer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X