Search
  • Follow NativePlanet
Share
» »விமான பயணத்தில் இனி நெய், ஊறுகாய் எல்லா எடுத்துச் செல்ல முடியாது – தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்!

விமான பயணத்தில் இனி நெய், ஊறுகாய் எல்லா எடுத்துச் செல்ல முடியாது – தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்!

வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் துபாய், அபுதாபி, குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் தங்கியுள்ளனர். இனி நீங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு UAE செல்லும் போது நெய், ஊறுகாய், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல இயலாது என தகவல் வெளி வந்துள்ளது!

அன்பின் அடையாளமாக பேக் செய்யப்படும் பொருட்கள்

சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வளைகுடாவுக்குத் திரும்பும் போது, வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊறுகாய், நெய், மற்ற எல்லாவற்றையுமே பேக் செய்வார்கள். அவை வெறும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களின் அன்பு மற்றும் அக்கறையின் அடையாளமாக நமக்குத் தெரியும்.

uae flights

இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் வளைகுடா நாடுகள்

வளைகுடா நாட்டிற்கு வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் செல்வதால், இந்தியா-UAE விமானப் பாதை மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றாக உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பார்வையாளர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபாயங்களை உருவாக்கும் தேவையில்லாத பொருட்கள்

விமான பயணத்தின் போது தேவையில்லாத பொருட்களை எடுத்துச் செல்வது எதிர்பாராத அபாயங்களை உருவாக்கும். ரயில், பேருந்து, கார் போன்றவற்றில் விபத்து ஏற்படுத்தும் பொருட்களை தூக்கி கூட போட்டு விடுவார்கள், ஆனால் விமானத்தில் இது எல்லாம் சாத்தியமா. அதனால் தான் விமானத்தில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எப்போதுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானப் பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் அதிகாரிகளால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

ஒரு மாதத்தில் மட்டும் 943 உலர் தேங்காய்கள்

பல பயணிகள் இவை அனைத்தையும் தடைசெய்யப்பட்டவை என்பதை அறியாமல் கொண்டு வருகிறார்கள். இது ஆபத்தை விளைவிக்கிறது. இந்த விஷயங்கள் வெடிப்புகளுக்கு ஆளாகக்கூடியவை என்பதால் எந்த விபத்தையும் தீவிரப்படுத்தலாம். கடந்த ஆண்டு, ஒரு மாதத்தில் மட்டும் 943 உலர் தேங்காய்கள் பயணிகள் சோதனை சாமான்களில் கண்டுபிடிக்கப்பட்டன. காய்ந்த தேங்காயில் அதிக எண்ணெய் இருப்பதால் தீ மூட்டலாம்.

அதிகரித்து வரும் மறுக்கப்படும் பைகள்

மார்ச் 2022 இல், இந்தியாவில் உள்ள சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளின் பட்டியலில் அதைச் சேர்த்தது. இருப்பினும், பெரும்பாலான பயணிகளுக்கு இது தெரியாது. செக்-இன் செய்யும்போது மறுக்கப்பட்ட பைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, விமானத்தில் உள்ள தடைசெய்யப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்களைப் பற்றி வழக்கமான பயணிகளுக்குத் தெரியாது என்பதைக் காட்டுகிறது.

தடைசெய்யப்பட்ட பொருட்களை நாம் தெரிந்துக் கொள்வது அவசியம்

டிசம்பர் 2022 முதல் மே 2023 வரை, செக்-இன் போது மறுக்கப்பட்ட திரையிடப்பட்ட பைகளின் சதவீதம் 0.31 சதவீதத்திலிருந்து 0.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதால், செக்-இன் சாமான்கள் மறுக்கப்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்னவென்று நாம் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

விமானத்தில் நீங்கள் எடுத்து செல்லக்கூடாதவை

1. காய்ந்த தேங்காய்

2. நெய்

3. ஊறுகாய்

4. பட்டாசுகள்

5. எண்ணெய் உணவு பொருட்கள்

6. பார்ட்டி பாப்பர்ஸ்

7. பெயிண்ட்

8. லைட்டர்ஸ்

9. பவர் பேங்க்குகள்

10. வாசனை திரவியங்கள்

11. இ-சிகரெட்டுகள்

12. கற்பூரம்

UAE க்கு பயணிக்கும் போது இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உங்களது லக்கேஜ்களை பேக் செய்யவும்

More News

    Read more about: airport news uae
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+