» »தலையெழுத்தையே மாற்றும் கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயம்..!

தலையெழுத்தையே மாற்றும் கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயம்..!

Written By:

இது என்ன வேலை, என்ன வாழ்க்கை, கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை, வாழ்நாள் முழுவதுமே இனி இப்படித்தானா, எல்லாம் என் தலையெழுத்து. இப்படித்தான் நீங்களும் புலம்பிட்டு இருக்கீங்களா ?. நீங்க மட்டும் இல்லைங்க, இங்க பாதிக்கும் மேல அன்றாடம் புலம்பிக்கொண்டு இருப்பது அவரவர்கள் தலையெழுத்தை நிதைத்தே. அதிலும் குறிப்பாக உற்றுநோக்கினால், ஒவ்வொரு மனிதனும், எழுப்பப்படும் முக்கியமான கேள்விஎன் தலையெழுத்து என்ன? மகிழ்ச்சியான தருணத்தில் இத்தகைய நற்பலனைப் பெற தான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதை விட துயரத்தில் இருக்கும் போது மட்டும் தலையெழுத்தை எண்ணி வேதனை படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். என்றாவது ஒரு நாள் இந்த தலையெழுத்தின் மூல காரணம் என்ன ?. அதை எவ்வாறு மாற்றி வாழ்நாளை இனிமையானதாக்குவது என சிந்தித்தது உண்டா ?. அவ்வாறு சிந்திக்கத் துவங்கிவிட்டீர்கள் என்றால், உங்களது தலையெழுத்தை மாற்றியமைக்கும் திருத்தலம் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

தலையெழுத்து

தலையெழுத்து


தலையெழுத்துப்படி அல்லது விதியின்படி சில செயல்பளை நாம் அனுபவிக்கும் பொழுது, மென்மேலும் புதிய செயல்களைச் செய்கிறாம். அது நல்ல செயலாகவும் இருக்கலாம், தீய செயலாகவும் இருக்கிறது. அவற்றினைத் தொடர்ந்தே நம் தலையெழுத்து மேலும் வலுவடைந்து கடல் அலைகளைப் போல ஓயாத பிரச்சனைகளாக உருவெடுக்கிறது. இவற்றில் இருந்து விடுபட முடியாவிட்டாலும் ஒரு சில செயல்களின் மூலம் பிரச்சனைகளில் இருந்து தலையெழுத்தை மாற்றி நம்மை காத்துக் கொள்ளலாம். அப்படி என்னதான் செய்யுறதுன்னு தெரியலையா ?. தலையெழுத்தையே மாற்றும் கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவர ஓரிருவாரங்களிலேயே வாழ்நாளில் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக காணலாம்.

Ssriram mt

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் சுமார் 7.5 கிலோ மீட்டர் பயணித்தால் தேசிய நெடுஞ்சாலை 36ம், 332ம் சந்திக்கும் இடத்திற்கு முன்பாக அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில். விக்கிரவாண்டியில் இருந்து குறிஞ்சிபாடி, மதிரிமங்கலம் வழியாக 13 கிலோ முட்டர் பயணித்தும் இக்கோவிலை அடையலாம்.

Ssriram mt

சிறப்பு

சிறப்பு


வாலீஸ்வரர் தல மூலவர் மேற்கு நோக்கியவாறு சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோவில்களில் தட்சிணாமூர்த்தி சனகர், சானதனர் உள்ளிட்டோருடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் சப்தகன்னியருடன் காட்சியளிக்கிறார். தனி சன்னதியில் சனி பகவான் வீற்றுள்ளார்.

Ssriram mt

திருவிழா

திருவிழா


சிவராத்திரி, பஞ்சமி நாட்கள் உள்ளிட்ட தினங்களில் வீரபத்திரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். மேலும், பங்குனி உத்திரத்தன்று பல்வேறு சிறப்பு வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.

Kalai

நடைதிறப்பு

நடைதிறப்பு


அருள்மிகு வாலீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ssriram mt

வழிபாடு

வழிபாடு

தலைவிதியே சரியில்லை என வருத்தத்துடன் வாழ்நாட்களை கழித்துக் கொண்டிருப்பவர்கள் இத்தலத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு அர்ச்சனையும், அபிஷேகம் செய்தால் தலைவிதி மாறி விருப்பமான வாழ்க்கை கிடைக்கம் என்பது தொன்நம்பிக்கை. அடுமட்டுமின்றி, செவ்வாய் தோஷம் நீங்க, இல்லறத்தில் ஐஸ்வர்யம் பெருக, தீராத நோய்கள் விட்டு விலகஇத்தலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.

Anks.manuja

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டியவை நிறைவேறியதும், மூலவருக்கும், தட்சிணாமூர்த்தி மற்றும் பெரியநாயகி அம்மையாருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்து, அன்னமிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

Balu

தல அமைப்பு

தல அமைப்பு


மேற்கு நோக்கியவாறு உள்ள இந்த சிவாலயத்தில் பெரிய நாயகி அம்பாளுடன் சிவபெருமான் மூலவராகக் காட்சியளிக்கிறார். வால் தன் தம்பியின் மனைவியை அபகரித்த தோஷம் நீங்க இத்தலத்தில் வழிபட்டதால் மூலவருக்கு வாலீஸ்வரர் என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்துவித ராசிக்காரர்களுக்கும் உள்ள ஜென்மச் சனிகள், ஏழரைச் சனி, அஷ்டமசனி உள்ளிட்ட தோஷங்கள் நீங்கி செழிப்பான வாழ்க்கை கிடைக்கும். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இத்தலத்தில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

Balu

வரலாறு

வரலாறு


சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன், தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். தங்களைக் காக்கும் படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, அம்பிகையை சப்தகன்னியர்களைக் கொண்டு மகிஷாசுரனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். சப்தகன்னியர்களும் மகிஷாசுரன் வதம் செய்தனர். ஆனால், அவர்களுக்குத் தோஷம் உண்டானது. இந்த தோஷம் நீங்க கையிலாயத்தில் இருந்து சிவனிடம் முறையிட்டனர். வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் பூலோகத்தில் உள்ள இத்தலத்தில் தன்னை வழிபட்டால் பிடித்த தோஷம் நீங்கும் என அறிவுறுத்தினார். அதனை ஏற்ற சப்தகன்னியர்கள் இங்கு வேண்டி தன் சாபத்தை நீக்கிக் கொண்டனர்.

WL

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


விழுப்புரம் மாநகரத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை ரோடு வழியாக நேருஜி சாலையில் பயணிக்க வேண்டும். சுமார் 7.5 கிலோ முட்டர் பயணித்து கோலியனூரை அடைந்து தேரடி சாலை உள்ளே சிறிது தூரத்தில் கோவிலை சென்றடையலாம். விக்கிரவாண்டி, குறிஞ்சிபாடி, திருக்கனூர், திருத்துறையூர், கூடப்பாக்கும் உள்ளிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை அடைய எளிய முறையில் போக்குவரத்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்