Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து வேறுபடும் நாகலாந்து பல்கலைக்கழகம்! ஏன் இப்படி?

இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து வேறுபடும் நாகலாந்து பல்கலைக்கழகம்! ஏன் இப்படி?

இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து வேறுபடும் நாகலாந்து பல்கலைக்கழகம்! ஏன் இப்படி?

By Udhay

நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் மோகோக்சுங்க்', மாவட்டமும், மேற்கில் ஓக்ஹா' மாவட்டமும் அமையப்பெற்றுள்ளன. ஸுந்ஹிபோடோ என்பது ஸுந்ஹிபோ', மற்றும் டோ' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். இந்த இடத்தைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் நாம் மேலும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


ஸுந்ஹிபோ என்பதற்கு `பூக்கும் புதர்' என்பது பொருள். இந்த செடி வெள்ளை இலைகளுடன், கடற்பாசி போன்ற காதுகளுடன் சாறு மிகுந்து காணப்படும். அந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். டோ என்பதற்கு `மலையின் மேல்' என்று பொருள். ஸுந்ஹிபோடோ என்பது ஒரு ஸூமி வார்த்தையாகும்.

 மக்களும் கலாச்சாரமும்

மக்களும் கலாச்சாரமும்

ஸுந்ஹிபோடோ, ஸூமி பழங்குடி மக்களின் இருப்பிடமாக உள்ளது. போர் வீரர்களான ஸூமி பழங்குடியினர், தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

இவர்களின் திருவிழா கொண்டாட்டம்

இவர்களின் திருவிழா கொண்டாட்டம்


ஸூமி மக்கள் தங்களுடைய திருவிழாவை, ஆடம்பரமான உடை அணிந்து விரிவான பாடல்கள் மற்றும் நடனங்களை ஆடி பாடி கொண்டாடுவார்கள். அவர்களுடைய சம்பிரதாய போர் ஆடைகளை காண கண் கோடி வேண்டும்.

ஸூமி மக்களின் மிக முக்கியமான திருவிழாவான `டுலுனி', ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் மத்தியில் கொண்டாடப்படுகிறது.

ஸூமிக்களின் மற்றொரு முக்கிய திருவிழாவான `அஹுந' , அம்மக்களால் ஸுந்ஹிபோடோவில் சிறப்பாக கொண்டாடப்படும்.

 சுற்றுலா இடங்கள்

சுற்றுலா இடங்கள்

லுமாமி கிராமம், ஸுந்ஹிபோடோ மாவட்டத்தின் துணைப்பிரிவான `அகுலுடோ'வில் அமைந்துள்ளது. ஸுந்ஹிபோடோ மட்டுமே இந்த மாவட்டத்தில் உள்ள ஒரே நகரமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். எனவே, இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது.

 இதன் சிறப்பு

இதன் சிறப்பு

டிஸு, டொயாங்க் மற்றும், ஸுதா போன்ற ஆறுகள் ஸுந்ஹிபோடோவின் வழியே பாய்ந்து செல்கின்றன. மேலும், ஸுந்ஹிபோடோ நாகாலாந்தின் ஆறாவது மிக பெரிய நகராக விளங்குகிறது. மற்றைய ஐந்து நகரங்களாவன: திமாபுர், கோஹிமா, மொகொக்சுங்க், ஒக்ஹா, மற்றும் டுஇன்சாங்க்.

மாணவர்கள்

மாணவர்கள்

நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் சுமார் 54 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் தோராயமாக 25000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்து கொள்கிறார்கள்.

நாகலாந்து பல்கலைக்கழகம்

நாகலாந்து பல்கலைக்கழகம்

மற்ற கல்லூரிகளிலிருந்து இந்த பல்கலைக்கழகம் வேறுபட்டு இருப்பதற்கு காரணம் இங்கு கற்றுத் தரப்படும் பாடங்கள்தான்.
நாகலாந்து பல்கலைக்கழகம், மனிதநேயவியல் மற்றும் கல்வித்தகுதி, சமூக அறிவியல்,, வேளாண் அறிவியல் மற்றும் கிராம மேம்பாட்டு, பொறியியல் மற்றும் மேலாண்மை போன்ற படிப்புகளை வழங்குகிறது. இங்கே பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் ஸுந்ஹிபோடோ, நாகாலாந்தின் முக்கிய இடமாக மாறி விட்டது. அவ்வாறு இல்லை எனில் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடமாகவே இருந்திருக்கும்.

கலாச்சார வளர்ச்சி

கலாச்சார வளர்ச்சி


இந்த பல்கலைகழகம் அமைந்ததன் காரணமாக ஸுந்ஹிபோடோ அனைத்து நாகா பழங்குடியின சமூகங்கள் வந்து கூடிப்பழகும் ஒரு, கலாச்சார வளர்ச்சி சம்பந்தமான மையமாக மாறிவிட்டது.

பசுமையும் அழகும்

பசுமையும் அழகும்

பல்கலைக்கழகம் அழகான பச்சை பசேல் என்ற சூழலில் அமைந்துள்ளதால், இது கல்வியை மேம்படுத்துவற்கான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மகத்தான புவியியல் அமைப்பு காரணமாக இங்கு தாவரங்கள், விலங்குகள் மற்றும் விவசாயம் ஆகியன செழித்து காணப்படுகின்றன. ஆகவே, இங்கு விவசாய அறிவியல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

காணவேண்டிய இடங்கள்

காணவேண்டிய இடங்கள்

பக்கிங் காட்டுயிர் சரணாலயம்

கோசு பறவைகள் சரணாலயம்

சட்டோய் ரேஞ்ச்

சுமி பாப்பிஸ்ட் ஆலயம்


All Photos taken form

PC: Wikicommons

Read more about: travel season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X