ராம பஹவானூக்காக இந்த காட் ஷீலாகோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு பாறைக்கோயிலாக அமைந்துள்ள இந்த கோயிலின் பின்னால் ஒரு புராணிக ஐதீகக்கதையும் சொல்லப்படுகிறது.
அதாவது ராமபிரான் தன் மனைவி சீதாவைத்தேடி தன் தமையன் லட்சுமணனுடன் இந்த ஷீலா மலைப்பாறையை கடந்து சென்றதாகவும் அப்போது துல்ஜா பவானி தெய்வம் சீதா கடத்தப்பட்டிருக்கும் திசையான இலங்கையை நோக்கி ராமபிரானுக்கு வழிகாட்டியதாகவும் அந்த புராணிகக்கதை கூறுகிறது.
இதுவே இந்தக்கோயில் காட் ஷீலா கோயில் என்று அழைக்கப்படுவதற்கு காரணமாகும். ராம பகவானைத் தரிசிப்பதற்காக இந்தக் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயில் அமைந்திருக்கும் அமைதியான இயற்கைச்சூழல் பக்தர்களால் மிகவும் விரும்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications