துல்ஜா பவானி கோயிலுக்கு வெகு அருகிலயே இருக்கும் சந்த் கரீப்நாத் மடம், தசாவதார் மடம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த மடம் விஷ்ணு பகவானின் தீவிர பக்தரான சந்த் கரீப்நாத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
இங்கு விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கலை வேலைப்பாடுகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு யோகா மற்றும் தியான வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன.
சந்த் கரீப்நாத் மடம் பக்தர்களுக்காகவும், பயனிகளுக்காகவும் நாள் பூராவும் திறந்தே இருக்கும்.



Click it and Unblock the Notifications