துல்ஜாபூர் என்ற இந்த சிறு நகரத்தில் அமைந்திருக்கும் துல்ஜா பவானி கோயில் இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் அக்காலத்திய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பெண்தெய்வமான தேவியின் ஒரு அவதாரமாக கருதப்படும் துல்ஜா பவானிக்காக உருவாக்கப்பட்டுள்ளது இந்தக்கோயில். ஒரு மீட்டர் உயரத்திற்கும் மேலாக காட்சியளிக்கும் இந்த தெய்வச்சிலை பளிங்குக்கல்லால்(கிரானைட்) உருவாக்கப்பட்டுள்ளது.
எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் இந்த தேவியின் சிலை, மகிஷாசுரனை கொல்ல பயன்படுத்திய ஆயுதங்களை ஒவ்வொரு கையிலும் ஏந்தியுள்ளது. தேவியால் கொய்யப்பட்ட இந்த அசுரனின் தலையும் ஒரு கையில் உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்யும் ஒரே நோக்கத்துடன் தேவி இந்த அவதாரப்பிறப்பெடுத்ததாக புராணிக ஐதீகக்கதைகள் கூறுகின்றன.இந்தக்கோயிலுக்காகவே துல்ஜாபூர் நகரம் ஒரு முக்கிய ஆன்மீக சுற்றுலா நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. வருடந்தோறும் திரளாக பக்தர்கள் இந்த புனித நகருக்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications