ஜப்பானிய குளம் உக்ருள் நகரில் அமைந்துள்ளது. இந்த குளம் வணிக ரீதியான மீன் உற்பத்திக்கும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக இந்த மாவட்டத்தின் பொருளாதார நிலை சற்றே மேம்பட்டுள்ளது. இந்த பெரிய குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் உக்ருளுக்கு அழகு சேர்க்கின்றன.
இங்கு நவீன கட்டமைப்பு வசதிகளின் உதவியுடன் சிறப்பாக மீன் வளர்க்கப்படுவதுடன், மீன்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அதன் காரணமாக மீன்களின் தரம் மற்றும் அளவு மேம்பட்டுள்ளது.
செயற்கை முறையில் ஜப்பானிய குளத்தில் மேற்கொள்ளப்படும் மீன் வளர்ப்பானது உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இது இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை தருகிறது. குளத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானிய குளம் உக்ருள் நகரத்தின் மத்தியில் அமைந்துள்தால், இதை எளிதாக நடந்தோ அல்லது ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தோ அடையலாம். இந்த பூங்காவிற்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications